சிறுவர்களின் பள்ளிக்காலங்கள் உண்மையில் வித்தியாசமானவை , எல்லோருக்கும் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதுபோல சில சம்பவங்களை கடந்து வந்திருக்கலாம் . அல்லது தெருக்களில் நடந்திருக்கலாம் . இயக்குனரின் முதல் படமென்பது கூடுதல் ஆச்சர்யம் . பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கிறது . பெர்லின் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவிற்கான விருதினை வாங்கியது குறிப்பிட தக்கது .
கசக்கஸ்தான் கிராம பகுதியில் தனது பாட்டியுடன் வசிக்கும் 13 வயதான சிறுவன் தனது பள்ளியில் நடந்த பொது மருத்துவ செக்கப்பில் ஒரு குறிப்பிட்ட சோதனை ஒன்றில் மற்ற மாணவர்களின் ஆண்குறி நினைக்கப்பட்ட தண்ணீரை, மருந்து கலக்கப்பட்ட தண்ணீர் என நினைத்து பதட்டத்தில் குடித்து விடுகிறான் . அதற்கு காரணம் போலேட் என்ற மற்றொரு பள்ளி சிறுவன் தான் .
போலேட் என்றால் நம்மூர் "பசங்க" படத்தில் வருகின்ற பக்கடா , மணி , வாத்தி மகன் ஜீவா மாதிரி இல்லை , நாக்கால் மூக்கை தொடுவது , சைக்கிளில் வித்தை காட்டுவது , கல்லால் குறிவைத்து தாக்குவது , உசுப்பேத்தி விடுவது , விசில் அடிப்பது என , இந்த போலேட் கொஞ்சம் வில்லங்கமான ஆளு , மூக்கு வாய் கை காலெல்லாம் உடையுற மாதிரி அடிப்பான் . இந்த பள்ளியில் சிறு டான் கூட்டம் ஒன்றை வைத்திருக்கிறான் அந்தப்பையன் , அவனை கண்டாலே பலருக்கு பயம் , அடித்து உதைத்து பணம் பிடிங்கி . அதை சிறையில் இருக்கும் சிலருக்கு அனுப்புவதாக சொல்கிறார்கள் . இவனுக்கு மேல் சில சீனியர் டான் மாணவர்கள் இருக்கிறார்கள் .
ஆக பள்ளிகளில் நிகழ்த்தப்பட்டும் வன்முறை , குழந்தைகள் மீதான , bully , கொடுமை படுத்துதல் , டார்ச்சர் , பயம் போன்றவற்றை மட்டுமே பேசுகிறது என்றால் நீங்கள் எதிர்பாக்கவே முடியாத ஒன்றை பொட்டில் அடித்தார் போல சைலன்ட் ஆக செய்து முடிக்கிறார்கள் . நானும் போகிற போக்கில் ஒருவேளை இத்தாலி நாட்டு படமான Dogman போல இருக்குமோ? , அல்ல சமீபத்தில் பார்த்த பள்ளி குழந்தைகள் மீது நடத்தப்படும் கொடுமைகள் பற்றிய பெல்ஜியம் நாட்டு படமான Playground போல இருக்குமோ ? என நினைத்தேன் , இது வேற மாதிரி .
போலட் அந்த குறிப்பிட்ட மாணவனிடம் யாரும் பேச கூடாது பழக கூடாது என சொல்கிறான் மீறி பேசினால் அடிதான் , நகரத்தில் இருந்து கிராமத்திற்கு படிக்க வந்திருக்கும் ஒரு மாணவனுக்கும் ஒதுக்கப்பட்ட சிறுவனுக்கும் பழக்கம் ஏற்படுகிறது . தனிமையாக இருக்கும் சிறுவனுக்கு தன்னை இன்னும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என இரண்டு முறை குளிக்கிறான் , கரப்பான் பூச்சுகள் மூலம் நோய் தொற்று பரவுகிறது என்பதனை தெரிந்துகொண்டு சில சுவாரசியமான வேலைகளை செய்கிறான் .
ஆக போலட் இவன் வகுப்பிற்கே மாணவனாக வர அதற்கு பிறகு நடக்கும் சம்பங்களை உண்மைக்கு நிரகரான முறையில் காட்சிப்படுத்திய விதம் அட்டகாசம் . இதுபோல படங்கள் எல்லாம் இந்த நாட்டில் இருந்து வருவது ஆச்சர்யப்படுத்துகிறது . மிக மிக மெதுவாக தான் இருக்கும் , பிண்ணனி இசை என்பதும் சுத்தமாக இல்லை . பள்ளி சிறுவர்களை வைத்துக்கொண்டு மிக சிறப்பான ஒரு படம் . அதே நேரத்தில் இது எல்லோருக்கும் செட் ஆகி விடாது , ரசனை மாறுபடலாம் , அதனால் வேண்டுவோர் தேடிப்பிடித்து பார்த்துவிடுங்கள் .
படத்தில் ஆங்காங்காங்கே சில சுவாரசிய காட்சிகள் வரும் மாணவர்கள் போலட்டிடம் மற்ற மாணவர்களை பற்றி புகார் கொடுப்பது , முஸ்லீம் பெண் ஒருவர் தலையில் துணி அணிய கூடாது என பள்ளி நிர்வாகம் பேசுவது , காந்தி பற்றிய வகுப்புக்கள் . என ஆங்காங்கே கவர செய்தது . படத்தின் ஆரம்ப காட்சியை பற்றி எதுவும் சொல்லவில்லை ஆனால் உங்களை ஆச்சரியப்படுத்தும் . நானெல்லாம் ஆறாம் ஏழாம் வகுப்பு படிக்கையில் தலைப்பிரட்டைகளை வாட்டர் பாட்டிலில் நிரப்பிக்கொண்டு மீன்கள் என நினைத்து வீட்டுக்கு போய் தொட்டிக்குள் விட்டு அப்பாவிடம் அடிவாங்கி , ஒடகான், தவளை ஓணான்களை பிடித்திக்கொண்டு அதற்கு ஆப்பரேசன் , நொண்டி , அச்சாங்கல் , கோ கோ , 7ஸ்டார் என மூளைக்கு வேலை கொடுக்காமல் விட்டுவிட்டேன் . இங்கே சிறுவர்கள் கொஞ்சம் அட்வான்ஸ் தான் .
கடந்தவருடம் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் நான் பார்த்து ரசித்த ஒரு திரைப்படத்தை ஒரு ஆல்பமாக பதிவிட்டிருந்தேன் . அதே போல இந்த வருடம் அதன் தொடர்ச்சியாக One Country One Film 002 ஐ தொடங்கலாம் என்ற யோசனையில் சில நாட்டு படங்களை பார்க்க ஆரம்பிக்கையில் . கசகஸ்தான் நாட்டு படங்கள் தனிப்பட்ட முறையில் கவனம் ஈர்த்தன . இன்னும் ஒரு பத்து படங்கள் ஹார்ட் டிஸ்கில் இருக்கிறது . அத்தனையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்திருக்கிறது பார்க்க வேண்டும் . சரி இந்த திரைப்படம் இந்தியாவில் எந்த OTT யிலும் தற்போது இல்லை , வருமா என்றால் தெரியாது . ஆனால் Youtube ல் இந்த படத்தினை காணலாம் , அதில் Subtitles Auto வில் இருக்கிறது . மற்றபடி இணையத்திலும் தேடி பெறலாம் . தேடி பாருங்கள் கிடைக்காத பட்சத்தில் இந்த போஸ்ட் ஐ ஷேர் செய்துவிட்டு #Request என கமன்ட் செய்யுங்கள் என்னுடைய டெலிகிராம் மூலம் அனுப்பிகிறேன் ஒருவேளை வரவில்லை என்றால் ID க்கு ஒரு மெசேஜ் செய்யுங்கள் படத்தினை அனுப்பி வைக்கிறேன் . Director : Emir Baigazin Country : Kazakhstan Language : Kazakh Running Time : 115 Mins
Yes taste differs..ithu nijamave vera maari padam...cinematographyum intro scenesum thaan ennai muthalil padathukkul izhuthathu...
ReplyDeleteiyakunaroda adutha padathai paakanum . i liked this work
DeletePost a Comment