The Sadness (2021,Taiwan) - Film Intro By Tamil | ரத்தக்களரி அதீத வன்முறை ஜாம்பிகள் | World Movies Museum

தொடக்கத்திலே சொல்லி விடுகிறேன் இது சஸ்பென்ஸ் வைத்து பயமுறுத்தி திகிலூட்டும் கதையொன்றும் இல்லை ஆனால் , கர்ண கொடூரமான அருவருக்கத்தக்க பல காட்சிகள் இருக்கிறது . படு பயங்கரமான sexual violence, gore எல்லாம் ஆங்காங்கே வருகிறது , ஆகையால்  இதுபோன்ற படங்கள் எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை என்றால் மட்டுமே பாருங்கள் . மற்றபடி இந்த படத்தை பார்க்க வேணாம் . 

"A bloody brutal horrifying F***ing zombie kind film  " 



பல ஜாம்பி படங்கள் , சீரீஸ்கள் புளித்துப்போன ஒரே கன்டென்டை பல வெர்சன்களில் மாற்றி மாற்றி பார்த்து சலித்துவிட்டது . ஜாம்பியை வைத்து காதல் , ஜாம்பியை வைத்து காமெடி என அத்தனையும் செய்துவிட்டார்கள் ஹாலிவுட்காரர்கள் , ஒரு சேஞ்சுக்கு இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என தைவான் நாட்டில் இருந்து வந்திருக்கும் படம்தான் இது . அதென்ன change ன்னு கேக்குறீங்களா  ? புதிதாக ஆல்வின் என்றொரு  வைரஸ் பரவுகிறது , மக்களோ இதனை ஒரு பொருட்டாக கருதாமல் வழக்கம் போல இருக்கிறார்கள்  , அரசியல் வாதிகளும் அவர்கள் பங்குக்கிற்கு கொடிய வைரஸை  வைத்து அரசியல் செய்வார்கள் . ஒருவனை கடிப்பதன் மூலமும் எச்சியை துப்புவதன் மூலமே எளிதாக பரவிடும்  . 

அதனின் பரவல் ஒருவனை 

1. மிக மிக கொடூரமாக கொலை செய்ய வைக்கிறது. 

2.தோலை கடித்து பிய்த்து எரிகிறது . 

3.ரணக் கொடூரமாய் துன்புறுத்துகிறது. 

4.மூளையை குழப்பி எடுக்கிறது 

5.மனித சதையை கடித்து ரத்தத்தை பாய்ச்சுகிறது 

6.தீவிர வன்முறை தூண்டி விடுகிறது . 

7.எதிர்பார்க்கமுடியாத  பாலியல் துன்புறுத்தல் 

8.ரத்தக்களரி வன்முறை அத்துமீறல் 

9.இன்னும் நீங்கள் எதிர்பார்க்க முடியாத சொல்லமுடியாத பல சம்பவங்களை செய்ய வைக்கிறது . 


மேலோட்டமாக சொன்னால் சாதாரண மனிதன் ஒருவனை ரத்த வெறிபிடித்த மிருகமாகவும் , சைக்கோ அரக்கனாகவும் மாற்றிவிடும் . சொல்லப்போனால் வீட்டில் அன்பை பொழிந்த குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அவர் குடும்ப நபர்களை (மேலே சொன்ன ) அத்தனையும் அவராக வெறி அடங்கும் வரை செய்வார் .  இதற்கு மருந்து கண்டுபிடிக்க படவில்லை . நாட்டில் பாதிக்கு மேலானோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பத்தை பற்றி அரசு முக்கிய அதிகாரிகள் பேசிக்கொண்டே இருக்கும் வேலையில் நடக்கும் காட்சிகள் படு கொடூரமாக இருந்தது . இந்த ரத்தவெறி படத்தில் இருந்து நான்  மீள மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டது கூடுதல் தகவல் . 


சில ஹாரர் திரைப்படவிழாக்களில் இந்தப்படம் பங்குகொண்டுள்ளது . ஒரு மர்மமான வைரஸ் தொற்று பரவுவதைச் சுற்றி நடக்கும் கதையில் பல படங்களை பார்த்த பெரும்பாலான ஹாரர் பிரியர்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் தான், இருந்தாலும் அலர்ட் செய்துவிடுவது நல்லது பிறகு என்னை கடித்து விடக்கூடாது 😉 தொற்றுநோய் அரசியலாக மாறுவதை சமீப காலங்களில் அனைத்து நாடுகளும் எதிர்கொண்டு இருக்கும் . இதுபோன்ற சம்பவங்கள் கனவிலும் நிகழ்தேறிவிட கூடாது . ஆனால் இந்த அறிவியல் உலகில் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தை நம்மிடம் விட்டுச்செல்வது லைட்டாக திணற வைக்கிறது . ஜாம்பி படங்களிலே எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள் இதனை ஒருமுறை பார்க்கலாம் ஒரு மாற்று வகை ஜாம்பி படமுன்னு , மற்றபடி கூடிய விரைவில் மறந்துவிடக்கூடிய படமே . 


ட்ரைலர் பார்த்துவிட்டு படத்தை வேண்டுமென்றால் மட்டுமே பாருங்கள் . இந்திய ott யில் இந்தபடமெல்லாம் வர வாய்ப்பே இல்லை இணையத்தில் தேடி கிடைத்தால் பார்க்கவும் .



Post a Comment

Previous Post Next Post