Midnight (2021,South Korea) - Film Intro By Tamil | செருப்பை தொட்டதால் கொலை செய்ய துடிக்கும் சீரியல் கில்லர் | World Movies Museum

தொடர் கொலைகாரர்கள் ஏன் இதுபோன்ற கொடூரமான கொலை குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் , அவர்களின் முன்கதை என்ன ? ஏன் இப்படி ஆனார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு அவன் செய்வது சரிதான் இல்லை தவறுதான் என பிளாஸ்பேக் போட்டு நியாமா இல்லையா என கணக்குப்போடும் சினிமா பிரியர்களா நீங்கள் அப்படியென்றால் உங்களுக்கான படமில்லை இது .. இத்தோட நீங்கள் கிளம்பலாம் .


 




சில சைக்கோ கொலைகார திரைப்படங்கள் பார்த்தவகையில் சொன்னால் . கொலைகாரனுக்கு கொலை செய்ய ஒரு சாதாரண விஷயம் போதும் அதுவே அவனை வெறி கொண்டு தூண்டி விடும் . கொரியப்படங்களும் கொலைகாரனும் , சீரியல் கில்லரும் கொடூர கொலையும் , அதிரடி யுத்தம் ஆறாய் ரத்தம் என பல லிஸ்ட் போடும் அளவிற்கு கொரியாவில் இதுபோன்ற  சினிமாக்கள் ஏராளம் . சரி இப்போது புதிதாக அதில் என்ன சொல்லிவிட போகிறார்கள், அதே டெம்பிளேட் ல் கொலைகாரன் கொலை செய்கிறான் அதனை துப்பறிகிறார்கள் கண்டுபிடித்தார்களா ? இல்லையா என்பதை தானே என உங்களின் மைண்ட் வாய்ஸ் ஐ கேட்ச் செய்துவிட்டேன் . இல்லை ! நீங்கள் நினைத்தது தவறு . இதுபோன்ற படங்களில் இன்னொரு டெம்பிளேட் இருக்கும் . 


அதவாது யார் கொலைகாரன் என்பதை பார்வையாளர்களுக்கு முன்பே காட்டி விடுவார்கள் . முக்கியமான கதாபாத்திரத்திற்கும்  கொலைகாரனுக்கும்  இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் பரபரக்க விட்டு எடுத்து இருப்பார்கள் . உதாரணத்திற்கு I Saw The Devil என்றொரு கொரியப்படம் சக்ககை போடு போடும் . ஆரம்பம் முதல் இறுதி வரை படு சுவாரசியமாய் இருக்கும் . கூடுதலாக Blind அதுவும் கொரியா தான் .  இதில் நாயகிக்கு கண் தெரியாமல் போய்விடும் . கண் தெரியாது ஒரு சீரியல் கில்லர் எப்படி கண்டுபிடித்தார் ?? இதன் மைய்யக்கருவை வைத்துக்கொண்டு  தமிழில் இருமுறை படங்கள் வந்தது ஒன்று பார்க்கலாம் ரகம் , இன்னொன்று பார்த்துவிடாதீர்கள் ரகம் . Hush என்ற ஆங்கில படத்தை பார்த்திருப்பீர்கள் . அதில் ஒரு சைக்கோ கொலைகாரன் மற்றும்  deaf-mute ஒரு பெண் மாட்டிக்கொண்டு அல்லாடுவதே கான்செப்ட் . சரி உதாரணங்கள் போதும் . 


இப்ப சொல்லப்போற படத்திற்கு வருவோம் ..இங்கே கொரியப்படத்தில் வாய்  பேசமுடியாத காதும் கேர்க்காத அதே போல பெண் மற்றும்  ஒரு கொலைகாரன் . அவர்களை சுற்றி நடப்பது தான் .  அவ்ளோதானா ?? மேலே சொன்னது போல இரண்டாவது வகை திரைப்படம் தான் இது . இவ்வளவு சொன்னாயே இந்த படத்தின் கதையை விளக்கி  சொல்லவில்லையே என கேற்காதீர்கள்  ? கதை கேட்டு இதுபோன்ற படம் பார்ப்பது சக்கரை இல்லா டீயை சுவைப்பதற்கு சமம் . இல்லை நான்  கதையும் தெரிந்துகொண்டு 😊 சுகர் இருக்கு ) தான் பார்ப்பேன் என்றால்  ட்ரைலரை பார்த்துவிட்டு படத்தை ஒருமுறை தாராளமாக பார்க்கலாம் . பார்த்தே தீர வேண்டிய படமில்லை , சீரியல் கில்லர் பிரியர்கள் பார்க்கலாம் . 


இந்தியாவில் OTT யில் இல்லை . you can Rent in Prime if u want. நன்றி

Post a Comment

Previous Post Next Post