Jane Austen’s Period Drama (2024) | கட்டாயம் ஆண்கள் பார்க்க வேண்டிய Short Film

இந்த short film ஒரு simple misunderstanding-லிருந்து ஆரம்பிக்குது. ஆனா அது போக போக தான் தெரியவருது இது simple ஆ  இல்ல. இப்பவும் எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு  விஷயம் ன்னு அது என்னனா 1813 England ல நடக்குற மாதிரி ஒரு கதை.  Marriage proposal சீன். ஹீரோ  Mr. Dickley ஹீரோயின Estrogenia Talbot  பார்த்து சொல்ல போறார் , அவள் முன்பு மண்டியிட்டு சொல்ல போகும் முன்பு  ஒரு சம்பவம்  பல நாள்களுக்கு பிறகு அந்த exact moment  இதென்னடா சம்பவம் ?அதை தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த குட்டி குறுப்படம். 


98 ஆவது ஆஸ்காருக்கு சிறந்த குறும்படங்கள் Live Action  பிரிவில் 15 ல் ஒன்றாக ஷார்ட் லிஸ்ட் ஆகி இருக்கிறது.  

கொஞ்சம் Spolier Alert 
.
.
.

ஒருவழியா அவர் அந்த பொண்ணுக்கு propose பண்ண போகும் போது கீழே வெள்ளை துணியில் ஒரே ரத்தக்கறை , ஐயோ இவங்க உடம்புல எங்கோ அடி பட்டு ரத்தம் வருதுபோல ன்னு அலறுகிறார், ஆனா அந்த  exact moment-ல Miss Estrogenia Talbot அந்த பொண்ணுக்கு period start ஆகுது. அதனால தான் ரத்தம் வந்திருக்கு , அந்த blood-ஐ injury-ன்னு நினைக்குற Mr. Dickley டாக்டர் டாக்டர் ன்னு வீட்டுக்கு தூக்கிட்டு போயிடுறார் , இங்கும் அங்கும் ஓடுகிறார் , ஒரு ஆண், உலகத்திலேயே most basic biological reality-யைப் பற்றி கூட தெரியாம இருக்கலாம். அப்படி ஒன்றும் தெரியாத ஆள் தான் அந்த ஹீரோ , டாக்டருக்கு தகவல் தெரிவித்துவிட்டு ஓடோடி வீட்டுக்கு வந்தவரிடம் பேச ஆரம்பிக்கும் நாயகி என்ன பேசினால் அவருக்கு எப்படி இதை புரிய வைத்தால் என்ன நடந்தது என்பதே இந்த சிறிய குறும்படம். 

13 நிமிஷத்துக்குள்ள இப்படி ஷார்ட் பிலிம் சூப்பர் , கொஞ்சம்  social awkwardness • gender gap  நாம தெரிஞ்சுக்க வேண்டிய education miss , தெரிஞ்சுக்க தவறிய விஷயம் பேச தயங்கும் இடம் இவையெல்லாம் sharp-ஆ, unnecessary exaggeration இல்லாம காமெடி ட்ராமா வா இந்த ஷார்ட் ல  சொல்லப்படுது. Mr. Dickley character important. ஏன்னா அவர் எனக்கு பலரை நினைவு தந்தார்   He is simply clueless. 

இந்த ஷார்ட் ல இன்னும் கூடுதல் கதாபாத்திரங்கள் உண்டு எல்லாம் நல்லா பண்ணி இருந்தார்கள் , ரெண்டு  Sisters, father, doctor , grandma  each one reaction society-oda mindset-ஐ reflect பண்ணுது. Production-wise  Costumes, music, setting – period drama எல்லாம் Good . திரைப்பட விழாக்களில் பங்குகொண்டு நிறைய விருதுகள் வாங்கியுள்ளது இன்னும் வாங்க வாழ்த்துக்கள். 

இந்த short film-ஐப் பார்த்த பிறகு எனக்கு தோன்றி இன்னொரு விஷயம் : “இதைக் குறைந்தது ஒரு பத்து பேருக்காவது compulsory viewing-ஆ பாக்க  வைக்கணும். யாராச்சும் பார்க்க வைப்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி உண்டு குறிப்பாக இந்த ஷார்ட் பிலிம் தேடி பாருங்கள் கிடைக்கவில்லை என்றால் மட்டும் நான் உதவுகிறேன். எப்படி பார்க்கலாம் என்று.

இப்போதைக்கு ஒரு ஸ்வீடன் தளத்தில் உண்டு அங்கு பார்க்கலாம். தேடுங்கள்.


2 تعليقات

إرسال تعليق

أحدث أقدم