சாதாரணமாக எல்லோரும் வாழ்க்கையில் எதாவது ஒருமுறை அவரர் மனைவி கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அது முத்தி இருக்கும். அப்படி தொடங்கும் ஒரு சிறிய ஷார்ட் பிலிம் தான் இது. கட்டாயம் கணவன் மனைவி பார்த்து விடுங்கள்
எனக்கு இதுவரை ஆஸ்கார் Live Action பிரிவில் ஷார்ட்லிஸ்ட் ஆனதில் இதுதான் இப்போதைக்கு 5/5 பெற்றுள்ளது. பின்லாந்து நாட்டை சேர்ந்த இயக்குனர்.
ஒரு கணவன் மனைவி உறவின் வாழ்க்கையில் மிகப் பெரிய பிரிவு எப்போதும் பெரிய சம்பவங்களால் வருவதில்லை. எதாவது ஒரு சிறு பிரச்னையில் தொடங்கி அதுவே பேசி ஊதி பெரிய பூதாகரமான பிரச்னையாக வெடிக்கும். பெரும்பாலும் அவர்கள் அந்த சண்டைக்கு காரணமாகவே இருக்க மாட்டார்கள் வேற எதாவது டப்பி பிரச்னையாகத்தான் இருக்கும். சில நேரங்களில் சப்பையாக முடிந்துவிடும்.
சரி இங்கே இந்த குறும்படத்தில் ஒரு சிறிய கிழிவால் ஆரம்பிக்கிறது பிரச்னை .அப்படிப்பட்ட ஒரு சிறிய தருணத்தை மட்டுமே எடுத்து, ஒரே ஒரு அறையில் இரண்டு காதாபாத்திரங்கள் மட்டுமே கணவன் மனைவி அதில் ஒரு முழு வாழ்க்கையில் நாம் அனுபவித்த தருணமொன்றை காட்சிகளாக்கி விட்டால் எப்படி இருக்கும் அதைத்தான் இயக்குனர் காட்டியுள்ளார். அவருடைய மற்ற படங்களை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விட்டு இருக்கிறார்.
உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் வெளியே கிளம்பும் போது தான் சிலருக்கு டாய்லெட் வரும், இல்லை எதையாச்சும் மறந்து வச்சுட்டு வந்திருப்போம், அடுப்பை அணைக்காமல், பாத்திரம் அப்படியே விட்டு, ஹீட்டர் ஸ்விட்சை ஐ அணைக்காமல் இப்படி எதாவது, அல்லது உடை அலங்காரம் நான் நல்லா இருக்கேனா? அந்த உடை எப்படி இருக்கிறது என எதையும் கவனிக்காமல் செல்லகையில் எதாவது ஓர் பிரச்னை நிச்சயம் வெடிக்கும் அல்லவா அதை எப்படி கையாண்டு இருக்கிறீர்கள்?எனக்கு இதுபோலொரு சம்பவம் நடந்துள்ளது கிட்ட தட்ட இந்த குறும்படத்திற்கு நெருக்கமாக.
இந்தப் படம் ஒரு கேள்வியுடன் தொடங்குகிறது: “ஒரு காதல் ஜோடி ,பார்க்க அப்படிதான் தெரிந்தது அவர்களின் புகைப்படங்களை பார்க்கையில் , ஒரு முக்கிய நிகழ்வுக்கு கிளம்பும்போது, ஒரு சின்ன பிரச்னை ” இது நகைச்சுவையாக தோன்றலாம். அற்பமானதாகவும். ஆனால் இந்தப் படம் மிகத் தெளிவாகச் சொல்கிறது. Pantyhose ஏற்பட்ட ஒரு ஓட்டை , உறவுகள் இடிந்து விழுவது வரை செல்லுமா என்பதை . அன்றாட அலட்சியங்களால், அவசரமாக சொன்ன வார்த்தைகளால், யாரும் சுமக்கத் தெரியாத எதிர்பார்ப்புகளின் எடையால். சின்ன சின்ன கண்டுகொள்ளப்படாமல் விட்ட விஷயங்களால், ஈகோ வால் , தனிப்பட்ட அலட்சியத்தால் என அடுக்கிக்கொண்டே போகலாம் ,
இருவரும் வெளியே ஒரு நிகழ்ச்சிக்கு கிளம்பும் பொது நன்றாக ரெடி ஆகிவிட்டது ஒரு Selfie எடுத்துக்கொண்டு போகிறார்கள். ஆனால் வெளியே போன பிறகு தான் தெரிந்தது Pantyhose கிழிந்து இருக்கிறது என உடனே மாற்றி விட்டு வா மூன்றே நிமிடங்கள் என கணவன் சொல்கிறான். அவளோ மேலே போனவள் இங்கும் அங்கும் திபுதிபு என ஓடுகிறாள் எல்லா வேலையும் செய்கிறாள் கிட்ட தட்ட ஒரு 6 நிமிடம் கழித்து கீழே வந்து மீண்டும் மேலே போகிறார், இவனும் பதிலுக்கு ஒன்றை செய்ய கிரகம் நேரம் இவர்களுக்கு பிரச்னை வெடிக்க அது எங்கு கொண்டு போய் இவர்களை விட்டது முடிவில் என்ன ஆனது என்பதே இந்த குறும்படம்.
15 நிமிடங்களில், இரண்டு கதாபாத்திரங்கள் ஒரே அரை சிங்கிள் ஷாட் போல தான் தெரிகிறது அட்டகாசம் - Jonna அவள் பரிபூரணத்தை தேடுகிறாள். ஆனால் அந்த தேடல், உண்மையில், “நானும் பொருத்தமானவள்தானா?” என்ற பயத்திலிருந்து வருகிறது. கிழிந்த pantyhose அவள் அணிந்த துணி அல்ல; அவள் உள்ளுக்குள் இருக்கும் பயத்தின் வெளிப்பாடு. Matti நம்மைப் போல ஒரு கிறுக்கன் ஆனால் பாவம் தான் . வேலை , படிமம். உரையாடல். உறவு. சொந்தக்காரர்கள் , இதுக்கெல்லாம் இப்ப தேவையா என இருப்பவன் . அவன் கோபம் திடீரென வந்தது அல்ல; அது அடக்கப்பட்ட அழுத்தத்தின் கசிவு. அவனும் குற்றவாளி ஆக்கவில்லை. யாரும் முழுமையாக சரியில்லை. யாரும் முழுமையாக தவறில்லை.
ஒவ்வொரு உறவிலும், ஒரு தருணம் வரும் , இதை இத்தோடு விட்டு ஒழிக்கலாமா இல்லை இப்படியே தொடரலாமா ? அது முடிவெடுக்க சற்று கடினமான விஷயமே சின்ன சின்ன பிரச்சனைகளை சரி செய்ய கற்றுக்கொண்டு மாற்றிக்கொள்ளுங்கள் . இங்கே இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை பாருங்கள்.
ஆக இங்க யார் தப்பு யார் சரி ? ஹா ஹா சொல்ல வருவது என்னன்னா? ஒரே விஷயத்தை இருவரும் வேற வேற கோணத்தில் பார்க்கிறார்கள் அவளுக்கு: “இது எனக்கு emotionally முக்கியம்” அவனுக்கு: “இது practically unnecessary delay” இருவரும் தவறில்லை இருவரும் சரியில்லை என்னளவில் உங்களுக்கு எப்படி தோன்றியது பார்த்துவிட்டு சொல்லுங்கள் . எனக்கு இந்த குறும்படம் அச்சு அசலாக பிடித்த ஒன்றாகி போனது . 5 / 5.
ஆமாம் இந்த படம் தேடினால் நிச்சயம் கிடைக்கும் ஒரு வேலை கிடைக்கவில்லை என்றால் உதவுகிறேன் அதுக்கு கைமாறா இந்த blog போஸ்ட் ஐ ஷேர் செய்யோணும் , சும்மா செஞ்சு விடுங்க பாஸு . எனக்கும் நாலு Follower கிடைப்பாங்க ல . MUST WATCH




إرسال تعليق