இது ஒரு எளிய கிராமக் கதை போலத் தெரியும். ஒரு பெண், ஒரு கிராமம், வெளியூர் போகும் கணவன் , கணவனின் தாய் தீடீர் மரணம், உடைந்து போகும் குடும்பம். கட்டப்படாமல் விட்ட வீடு, கடன் சுமை , விவாகரத்து என காட்டன் படம் நகரும். இந்த கதையின் பின்னால் Uzbekistan என்ற ஒரு நாட்டின் பொருளாதார அமைப்பு, labour வரலாறு, அரசியல் பயம், போக்குவரத்து , கட்டாய வேலை , சமூக மௌனம் எல்லாம் அடுக்கடுக்காக மறைந்து கிடக்கின்றன.
Uzbekistan, Central Asia-வில் இருக்கும் ஒரு நாடு. Soviet Union உடைந்த பிறகு (1991), இந்த நாடு சுயாதீனமாக மாறியது. ஆனால்: பொருளாதாரம் பலவீனமானது அரசியல் அதிகாரம் மையப்படுத்தப்பட்டது. கிராம வாழ்க்கை மாற்றமில்லாமல் தொடர்ந்தது. Uzbekistan-ன் அடையாளமாக உலகம் பார்த்தது ஒன்று Cotton. அப்படின்னா “White Gold” Youtube தட்டி பாருங்கள். பல வருசமா , நாட்டின் முக்கிய export கிராம பொருளாதாரத்தின் backbone.
Gulchehra என்ற பெண்ணின் தினசரி வாழ்வு தான் படத்தின் மையம். அவள் பேசுவதைக் காட்டிலும், குடும்பத்துக்காக வேலை செய்வதையும், கணவனுக்காக காத்திருப்பதையும், எதிர்ப்புகளை சகித்துக்கொள்வதையும் , உறவினர்களை அனுசரித்து செல்வத்தையும் அதிகமாக பார்க்கிறோம். இந்த தொடர் repetition தான் பெரு வாழ்க்கையின் சுமை , திருமணமாகிவிட்டது கணவர் வெளி ஊர் வேலைக்கு சென்றுள்ளார் , திரும்பி வந்து கட்ட தொடங்கி அப்படியே விட்டுப்போன வீட்டை முழுமையாக கட்டிமுடித்து குடும்பம் மாக ஒரு சந்தோச வாழ்க்கையை தொடங்கலாம் என்று நினைக்கும் மனைவிக்கு மற்றுமொரு அதிர்ச்சி அவன் இன்னொரு நாட்டுக்கு செல்ல வேண்டிய தேவை வீட்டை விற்க வேண்டும். அதற்கு இவளிடமிருந்து ஒரு விவாகரத்து பத்திரத்தில் ஒரு கையெழுத்து. திடிரென இறந்து போகும் மாமியார் இறுதி சடங்கில் கூட பங்கேற்க முடியாத கணவன், அதன் பிறகு அவளுக்கு பேச கூட ஆள் இல்லை , வாங்கிய கடன் கழுத்தை நெறிக்க , இன்னும் கூடுதல் பணிச்சுமை முடிவில் அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை அவளுக்கு கிடைத்ததா என்பதே இந்த படம்.
Labour Migration – கணவன் ஏன் ஊரை விட்டுப் போனான்? Uzbekistan-ல் 1990s–2010s: வேலைவாய்ப்பு மிகக் குறைவு குறிப்பாக கிராமங்களில் அதனால்: ஆண்கள் Russia, Kazakhstan, Turkey போனார்கள். இது ambition இல்லை. Survival strategy. Cotton-ல் கணவன் வேலைக்காக போகிறான் “திரும்ப வருவேன்”ன்னு சொல்லி ஆனா: திரும்ப வரவில்லை, அம்மா இறந்ததற்கே வரவில்லை.
இந்த படம் பார்த்துவிட்டு வேறொரு சிறிய டாக்குமென்டரி ஒன்றை பார்த்தேன் , Andijan Massacre (2005) – May 13, 2005. Andijan, Uzbekistan. வேலை, பொருளாதாரம், corruption எதிராக peaceful protest. அதுல Government response , Military deployment , இறப்புகள் bullets Hundreds of civilians killed ன்னு அவ்ளோ விஷயம் இருக்கு , இந்த படத்துக்கும் இதுக்கும் என்ன தொடர்பு நேரிடியா இல்லை ஆனா: Cotton-ல மேல் அதிகாரி சொல்வதை கேர்ப்பார்கள் , சொல்லப்போனா எதிர்த்து எதற்குமே போராட முடியாத நிலை அடுத்து என்ன ஆகுமோன்னு , இந்த சம்பவத்துக்கு பிறகு அரசாங்கத்தை எதிர்க்க பெரும்பாலும் யாரும் முன் வந்திருக்க மாட்டார்கள் ன்னு தோன்றியது .
Cotton & Forced Labour – சொல்லப்படாத வரலாறு Uzbekistan-ல் பருத்தி என்பது: விவசாயம் மட்டும் மக்கள் உழைப்பு கட்டாயம். Independence பிறகும் அந்த structure மாறவில்லை Forced labour தொடர்ந்தது அப்படின்னா அது என்ன? ஆசிரியர்கள் மாணவர்கள் அரசு ஊழியர்கள் கிராம பெண்கள் எல்லோரும்: cotton picking-க்கு “volunteer” என்ற பெயரில் கட்டாயமாக அனுப்பப்பட்டார்கள் வரலைன்னா: வேலை போகும் சம்பளம் cut exams / jobs risk இந்த forced labour 2010s வரைக்கும் international reports-ல் தொடர்ந்து பேசப்பட்டது.
Cotton (2025) படம், இந்த history-ஐ direct-ஆ சொல்லாது. ஆனா: cotton வேலை பெண்ணின் உடல் உழைப்பு choice இல்லாத வாழ்க்கை இவை எல்லாம் அந்த history-யின் shadow தான் அதுகுறித்து நம்மை தேட வைத்ததே இதன் பலம்.
இதுபோல சர்வதேச திரைப்படங்கள் மூலம் அங்கே நடக்கும் மக்களின் பிரச்னைகளை புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் சமீபத்தில் பார்த்த படம் தான் காட்டன், பருத்தி செடிகளில் உள்ள காய்களில் இருந்து வரும் பஞ்சு. அதற்க்கு பின்னால் மறைந்திருக்கும் மக்களின் வலிகள் அவர்களுக்கு பின்னால் உள்ள கதைகளில் இதுவும் ஒன்னு.
இந்தியா தான் பருத்தி உற்பத்தியில் முதலிடம் என பள்ளி காலங்களில் படித்த நியாபகம். 79 நிமிடம் ஓடக்கூடிய சிறிய படம், கெய்ரோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது பல வருடங்களுக்கு பிறகு இந்த நாட்டிலிருந்து பங்குபெறும் படம். ஒரு பெரிய சம்பவத்தையோ, அல்ல பரபரப்பான கதையையோ சொல்ல வரவில்லை. அது சிறிய ஒரு கிராமத்தில் நடக்கும் சாதாரண வாழ்க்கையையும் அவர்கள் படும் கஷ்டங்களை மட்டுமே.
Directed by Rashid Malikov எந்த இடத்திலும் பார்வையாளரை உணர்ச்சிவசப்படுத்த முயற்சிக்கவில்லை. Background music கூட குறைவாகவே உள்ளது. Uzbekistan கிராமத்தின் இயற்கையான காட்சிகள் இந்த படத்தின் இன்னொரு பலம். வீடுகள், தெருக்கள், வெளி இடங்கள் அனைத்தும் அழகாக இருந்தாலும், அந்த அழகுக்குள் ஒரு சோர்வு எப்போதும் ஒளிந்து கிடக்கிறது. Cotton ஒரு பெண்ணின் துயரக் கதையாக மட்டும் நின்றுவிடவில்லை. அது ஒரு நிலைமை எப்படி மெதுவாக மனிதர்களின் வாழ்க்கையை குறுக்கிக் கட்டுப்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. எந்த குற்றச்சாட்டும் இல்லாமல், எந்த விளக்கமும் இல்லாமல்.
இந்த படம் முடிந்த பிறகு உடனடியாக ஒரு பெரிய தாக்கம் ஏற்படாமல் இருக்கலாம். விரைவில் மறந்து கூட போகலாம். ஆனால் சிறிது நேரம் கழித்து, Gulchehra வின் அமைதியான முகமும், அவள் வாழும் வாழ்க்கையும் நினைவில் ஒருமுறை ஆவது திரும்ப வந்து நிற்கும். Cotton (Paxta) ஒரு சின்ன படம் தான்; ஆனால் அது சுமந்து வரும் உணர்வுகள், ஒரு முழு சமூகத்தின் நிழலை நமக்கு காட்டுகின்றன.
திரைப்பட விழாவில் காண கிடைத்தது. வாய்ப்பிருந்தால் வரும் நாட்களில் உங்களுக்கு கிடைத்தால் அவசியம் ஒரு முறை பாருங்கள் நன்றி .




إرسال تعليق