Gondola 2023 (Silent Film) | Directed by Veit Helmer | Rope Car ல் வந்த சவப்பெட்டி

வெயிட் ஹெல்மர் எனக்கு "தி ப்ரா" திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இவரின் திரைப்படங்கள் மூலம் நம்மை சிறு பயணத்திற்கு அழைத்துச்செல்வார். தி ப்ரா படத்தில்  விரைவில் பணியில் இருந்து ஓய்வு பெற இருக்கும் ரயில் ஓட்டுநர் நூர்லன் . கடைசி நாள் வேலையில் நடக்கும் ஒரு சம்பவம் தான் கதை. இறுதி நாளாக  அந்த  ரயிலில் பயணித்திக்கொண்டு இருக்கிறார் பிறகு ஒரு நிகழ்வின் மூலம் அவருக்கு ஒரு ப்ரா கிடைக்கிறது அதை  எடுத்துக்கொண்டு உரிமையாளர் கையில் ஒப்படைக்க மேற்கொள்ளப்படும் சுவாரசியமான பயணம் தான் அந்தப்படம். வசனமேதுமின்றி இயல்பாக  நகரும் நம்மூர் திரைப்பட விழாவில் கூட பெரும் வரவேற்பை பெற்றது.  

அஜர்பைஜான் மக்களையும் அந்த கிராமத்தையும் நமக்கு அழகாக காட்சி படுத்தி இருப்பார். ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை தந்திடுவார். 






அதே போல ஜார்ஜியா நாட்டு பகுதியை மையமாக கொண்டு மலைக்கிராமத்தில் இருந்து துவங்குகிறது  . gondola படம் , துவக்கத்திலே சவப்பெட்டி ஒன்று Rope Car ல்  தனியே பயணம் செய்ய வைக்கிறார்கள் . கிராமத்திற்கும் நகரத்திற்கும் நடுவே இருக்கும் பெரிய மலை மற்றும் பள்ளத்தாக்கிற்கு நடுவில் இயங்கும்  Rope Car  அதனை இயக்கும் பணியில் இருக்கும் இரு பெண்கள்  கிராம மக்கள் இதுதான் இந்த படம். இருவரும்  சந்திக்கொள்ளும் ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்றை செய்து சந்தோஷமடைகிறார்கள்.  நாளுக்கு நாள் அவர்களுக்கு அன்பும் கூடுகிறது  இருவரும் சேர்ந்து  நம்மை அவர்களோடு அந்த ரோப் கேபிள் காரில் அழைத்து சென்று கிராமத்தின் அழகையும் மக்களையும் இவர்களின் குறும்புத்தனங்களையும் ரசிக்க வைக்கிறார்கள்.



 ரொம்ப சின்ன படம் தான்  ஒரு மணி நேரம் 20 நிமிஷம் க்குள் வரும் வசனம் ஏதும் இல்லை திரைப்படவிழாவில் காணும் வாய்ப்பு கிடைத்தால் பார்த்து ரசியுங்கள். ராய் ஆண்டர்சனை போல  வெயிட் ஹெல்மர் மனதை கவர்கிறார். வரும் நாட்களில் இன்னும் ரசிக்க வைக்கூடிய பயணங்களை மேற்கொள்ள வைப்பார் என்று நம்புகிறேன்.

Post a Comment

أحدث أقدم