Osama 2003 ( Afghanistan) | ஆப்கானிஸ்தான் - ஆணாக மாறிய பெண்

Osama வை வெகு நாட்களுக்கு முன்பே பார்த்துவிட்டேன். வேறெங்கும்  எழுந்து போக விடாமல் செய்த ஒரு Film  சும்மா ஒரு படம் தானே என்றில்லாமல்  , அன்றைய ஆஃப்கானிஸ்தானின் மக்களின் வாழ்வாகவே எனக்கு தெரிந்தது.
கேமரா கூட ஒரு பார்வையாளன் போல பயணிக்கும். இது ஒரு “award-winning film”  பெஸ்டிவல் படம் என்ற அடையாளத்தை விட, மறக்க முடியாத மனித அனுபவம் என்ற உணர்வையே முதலில் தரும். 

ஒசாமா -  ஒரு சிறுமி ஐ சுற்றித்தான் நகரும். அவளோடு  கணவனை போரில் இழந்த அவள் அம்மா, அவர்களுடன் ஒரு பாட்டி, அவர்களுக்கிடையில் அந்த நாட்டில் நடந்த கதை தான்  இது. ஆண் துணையின்றி வெளியே வரக்கூடாது, வேலை செய்யக்கூடாது என்ற சட்டங்கள் அந்த வீட்டை பட்டினிக்குள் தள்ளுகின்றன. அதிலிருந்து தப்பிக்க, ஒரு சிறுமி ஆணாக மாற வேண்டிய கட்டாயம் வருகிறது. உயிர் பிழைப்பதற்கான கடைசி முடிவு. அவள் முடியை வெட்டும் தருணம், அந்த முடியை பூந்தொட்டியில் நட்டு வைக்கும் காட்சி – “நான் மாறுகிறேன்; ஆனாலும் நான் இன்னும் குழந்தைதான்” என்று படம் மெளனமாக சொல்வது போல இருக்கும்.  அதன் பிறகு அவளுக்கு என்ன ஆனது என்பதே இப்படம்.  





நண்பரின் 100 நாடுகள் – 100 சினிமா தொடர் ஆரம்பிக்கும் போது இந்த படம் மீண்டும் அறிமுகமானது அப்போதே பார்த்தேன்.  Osama (2003, Siddiq Barmak) 1996–2001 தாலிபான் ஆட்சி சூழலை நேரடி காட்சிகள் போல விவரித்த விதம் பசி , பயம் ,அடையாள மறைவு , இறுதியில் மனித உரிமை மறுக்கப்படும் தருணம் என விரியும்.  

Siddiq Barmak – ஆஃப்கானிஸ்தானின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். தாலிபான் ஆட்சி காலத்தில், ஆஃப்கானிஸ்தானில் திரைப்படம் எடுப்பதே குற்றம் என்ற நிலை இருந்தது. பல வருடங்கள் சினிமா என்பது அந்த நாட்டில் முற்றிலும் அடக்கப்பட்டிருந்தது. அப்படியான சூழலில், 2001-க்கு பிறகு தாலிபான் ஆட்சி முடிவடைந்ததும், முழுவதும் காபூல் நகரிலேயே படமாக்கப்பட்ட முதல் முழுநீள திரைப்படம் தான் Osama. 

ஒரு செய்தியின் மூலம் உருவான படமிது , பெண் குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்ட காலத்தில், ஒரு பெண் குழந்தை ஆண் வேடமிட்டு பள்ளிக்குச் சென்று பிடிபட்டாள் என்ற செய்தி. அந்த ஒரு வரி, ஒரு நாட்டின் நிலைமையை சொல்லிவிட்டது. அதிலிருந்தே இந்த படம் உருவானது. இந்தப் படத்தில் நடித்தவர்கள்: காபூலைச் சேர்ந்த சாதாரண மக்கள் தொழில்முறை நடிகர்கள் இல்லை நாயகியாக நடித்த Marina Golbahari கூட அப்போது தெருக்களில் பத்திரிகை விற்றுக் கொண்டிருந்த ஒரு சிறுமி என இணையத்தில் தெரிந்துகொண்டேன். 

இந்தப் படம் வெளிவந்த பிறகு, உலகத் திரைவிழாக்களில் கிடைத்த வரவேற்பு தான் Osama எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்பதை சொல்லுகிறது. Cannes திரைப்பட விழாவில் Golden Camera (Caméra d’Or) – Special Mention, AFCAE Award, Cannes Junior Award போன்ற முக்கிய அங்கீகாரங்கள் கிடைத்தன. அதேபோல் London Film Festival-ல் Sutherland Trophy, Valladolid International Film Festival-ல் Golden Spike, Busan International Film Festival-ல் New Currents – Special Mention மற்றும் Audience Award ஆகிய விருதுகளையும் படம் பெற்றது. Bratislava, Molodist, Cinemanila போன்ற விழாக்களிலும் சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த இளம் நடிகர் என பல விருதுகள் கிடைத்தன. குறிப்பாக, அந்த சிறுமிக்கு -க்கு கிடைத்த விருதுகள், இந்த படம் நடிப்பைத் தாண்டி ஒரு வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறது என்பதற்கான சாட்சி. 


ஆஸ்கார் - , 76வது Academy Awards (2004) இல் Best Foreign Language Film பிரிவில் ஆஃப்கானிஸ்தானின் அதிகாரப்பூர்வ Oscar submission ஆக அனுப்பப்பட்டது. ஆனால் அந்த ஆண்டில் Academy தேர்ந்தெடுக்கும் 15 படங்களின் shortlist-க்குள் இது இடம் பெறவில்லை; final nomination-க்கும் செல்லவில்லை. 

Golden Globe Awards-ல் Best Foreign Language Film விருது கிடைத்தது தான் Osama-வின் மிகப்பெரிய turning point. அந்த ஒரு விருது, ஆஃப்கானிஸ்தான் சினிமாவை உலக வரைபடத்தில் தெளிவாக கொண்டு வந்து நிறுத்தியது உலகம் முழுக்க இந்த படம் ஏற்படுத்திய தாக்கம் தான் அதன் உண்மையான legacy. சில படங்கள் விருதுகளால் நினைவில் நிற்கும்; Osama இனி வரும் நாட்களிலும் நினைவில் நிற்கும் என்று நம்புகிறேன்.

Post a Comment

أحدث أقدم