In the Long Run (2022, Yemen ) | Short Film Intro Tamil | கடைக்குச் சென்ற சிறுவன்

சின்ன வயசு நியாபகங்களை கிளறி விடக்கூடிய எத்தனையோ குறும்படங்களும் திரைப்படங்களும் உலக சினிமாவில் உண்டு. அதுவும் சண்டே அதுவுமா ஸ்கூல் லீவ் ல எதையுமே காதுல வாங்காம டிவி பார்த்துகிட்டு இருப்போம். அப்போ திடீர்ன்னு அத வாங்கிட்டு வா, இத வாங்கிட்டு வா ன்னு கடைக்கு நம்ப வீட்ல குறிப்பா நம்பள தான்  அனுப்புவாங்க. அப்பா கடைக்கு போன ஆளு இன்னும் வீடு வந்து சேரல தேடிகிட்டு தடியோட வருவாரு. நாம அப்டியே விளையாட போயிருவோம் ,  அப்போல்லாம் ரேஷன் கடைல ஏதாச்சும் மத்தவங்களுக்கு லைன் ல இருந்து வாங்கி குடுத்தா ஒரு ரூவா ரெண்டு ரூவா கிடைக்கும் அத வச்சி தீனி  வாங்கி தின்னதுலாம்  தனி கதை .




எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு எங்க வீட்ல இதைத்தான் ரெகுலரா எங்க அப்பா வாங்கிட்டு வர சொல்லுவாரு. பால் அரை லிட்டர், Gold Flake அரை பாக்கெட், கணேசா பீடி ஒரு கட்டு, பூனை தீப்பெட்டி ஒன்னு , இஞ்சி , கருவேப்பிலை, கொத்தமல்லி ரெண்டும் சேர்ந்து ன்னு … சொல்லிக்கிட்டே போகணும் இதுல இடைல மறந்து மறுபடி வீட்டுக்கு போய் கேட்ட கதைலாம் உண்டு . 

இப்ப ஏன் இதை எல்லாம் சொன்னேன்னா  In the Long Run ஷார்ட் பிலிம் லயும் இப்படி ஒரு கதைதான் . யேமனின் இப் நகரத்தில் தனது குடும்பத்தோடு வசிக்கும் , ஏழு வயசு சிறுவன் தான்  அஹ்மத். அவன் வீட்ல தன்னையே மறந்து டிவி பாத்துகிட்டு இருக்கான் , அவங்க அம்மா பரபரப்பா உணவு சமைச்சுக்கிட்டு இருக்காங்க வீட்டுக்கு விருந்தினர் வர போறாங்க ன்னு சொல்றாங்க . அந்த சமயத்துல கேஸ் தீர்ந்து போவ இவனை “பிரெட் வாங்கிட்டு வா”னு போக சொல்றாங்க. 

அங்கிருந்து கிளம்பின இவன் வர வழில ரெண்டு பெரு சண்டை போடுறாங்க அதை வேடிக்கை பார்க்கிறான் , இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தை பார்க்கிறான் ,  82 வயசு தாத்தா ஓட பேசுறான் , வேற ஒருத்தவங்க வீட்டு பார்சலை அவங்க வீட்டில் ஒப்படைகிறான் . பசங்களையோடு விளையாடுறன் , முடிவுல அவன் அவங்க வீட்டுக்கு அந்த பிரெட் பாக்கட்டை வாங்கிக்கொண்டு போனானா ? இல்லையா என்பதே இந்த குறும்படம் .


Yousef Assabahi இந்த short-ல குழந்தைப் பருவ நினைவுகளுக்கு கொஞ்சம் புரட்டியிருக்கிறார் . படத்துல பிரெட் ஐ பிளாஸ்டிக் ல வாங்கிட்டு வந்து சாப்பிட்டா கேன்சர் வரும்ன்னு அப்பா சொல்லுவாங்க ன்னு சொல்லுவான் சிறுவன் ,  அதுக்கு அந்த 80+  தாத்தா  சொல்லுவார் இந்த உலகத்துல நம்ப நினைக்கிற எதுவுமே நடக்காது எல்லாமே அல்லாவின் கையில் தான் இருக்கு அதனால நீ உங்க அப்பிக்கிட்டே சொல்லு கேன்சர் எல்லாம் வராதுன்னு ன்னு சொல்லுவார்.

நினைவுகள் எப்படி காலத்தை தாண்டி நம்மளை திரும்ப அழைக்குதுனு ரொம்ப அழகா சில இடங்களில்  காட்டி நமக்கு பழைய நினைவுகளை யோசிக்க வைப்பர் . ஆக “நானும் அப்படித்தான் இருந்தேன்”னு சிரிச்சுக்கிட்டே இருக்க வச்ச  ஒரு சிறிய படம். இதைப் பார்த்து முடிச்ச பிறகு, உங்களோட சின்ன வயசு கடைக்கு போன பயணம் கண்டிப்பா நினைவுக்கு வரும். 


இது Yousef Assabahi-யின் முதல் முக்கியமான short film. இவர் UCLA Film School-ல Directing படிச்சவர். அதுக்குப் பிறகு Ibb, Yemen-க்கு திரும்பி, local people, real locations-ல எடுத்த முதல் narrative short இதுதான். அடுத்தடுத்த ஷார்ட் பிலிம் எடுத்துக்கொண்டு இருக்கிறார். பார்க்கணும்.


இப்போதைக்கு இந்த ஷார்ட்  பப்ளிக் தளங்கள் எதிலும் இல்லை நான் private scr ல் பார்த்தேன். உங்களுக்கு பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.


Post a Comment

أحدث أقدم