ஆலிஃபாக்சு வெடிப்பு பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் . 1917 ஆம் ஆண்டு நார்வேயை சேர்ந்த கப்பல், வெடிபொருட்கள் நிறைந்த பிரான்ஸ் கப்பல் மீது மோதி ஏற்படுத்திய பேரழிவை பற்றி . அதனை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சிறிய 8 நிமிடங்கள் ஓடக்கூடிய ஷார்ட் அனிமேஷன் குறும்படம் தான் இந்த பறக்கும் மாலுமி .
ஒரு மென்சோகம் , ஒரு வரலாறு , ஒரு நிகழ்வு , என பல எண்ணவோட்டங்களின் காட்சிகளோடும் மனதுக்கு நெருக்கமான எங்கோ கேட்ட இசையோடு நகரும் இந்த குறும்படத்தை ஆஸ்காருக்கு அனுப்பி இருக்கிறார்கள் . அனிமேஷன் பிரிவில் ஷார்ட்லிஸ்ட் ஆகி இருக்கிறது . நான் விரும்பும் சினிமாக்களில் சிறந்த கிரியேட்டிவிட்டி தன்மையை அனிமேஷன் படங்கள் கொண்டிருப்பதாக பல படங்களில் உணர்ந்துள்ளேன் .
The Flying Sailor 2022 Directed by Amanda Forbis, Wendy Tilby
குறிப்பாக வெகு குறைவான நிமிடத்தில் சொல்ல வேண்டியதை அனிமேஷன் காட்சிகளின் மூலம் மிக அற்புதமாக சொல்லிவிட்டு செல்வதே அவர்களின் வழக்கம் . சிறந்த அனிமேஷன் குறும்படங்கள் திரைப்படவிழாக்களுக்கு அனுப்பப்படுபவை லிஸ்ட் எடுத்து அவற்றில் கிடைப்பதை தவறாமல் பார்த்துவிடுவேன் . கடந்த ஆஸ்காருக்கு அனுப்பட்டு ஷார்ட்லிஸ்ட் ஆனா 15 ஐயும் பார்த்தேன் . அந்த பதினைந்தில் ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை . அதே போல இந்தமுறையும் ஆரம்பித்துள்ளேன் இந்த குறும்படத்திலிருந்து முதலே நன்றாக இருக்கிறது .


إرسال تعليق