Passenger 2022 ‘Pasajero’ | பேப்பர் பேருந்தும் பயணிகளும்

Passenger 2022 ‘Pasajero’ Directed by Juan Pablo Zaramella முந்தய பதிவில் சொன்னது போல அனிமேஷன் என்ற ஒரு டெக்னலாஜியை வைத்துக்கொண்டு எதை வேண்டுமானாலும் சாத்தியப்படுத்த முடியும் . ஒரு கத்தரிக்கோல், சில  பேப்பர் கட்டிங்ஸ் ஐ வைத்துக்கொண்டு மனிதனை சுற்றியும் , சமூகத்தில் அவன் மீதான பார்வைகளும்  கேலிகளும் விருப்பு வெறுப்புகளையும் கலகலவென பத்தே நிமிடத்தில் எடுத்திருக்கிறார்கள் . 






இதே கதையை பத்து பேரை வைத்துக்கொண்டு எடுத்திருந்தால் அந்தளவிற்கு சுவாரஸ்யப்பட வைத்திருக்குமா என்றால் தெரியாது ! ஆனால்  என் மனம் கவர்ந்த ஒரு தேர்ந்த இயக்குனர் ஒருவர் இருக்கிறார்  ராய் ஆண்டர்சன் அவரால் மனிதர்களின் எண்ணத்தை அப்படியே காட்ட முடியும் , அங்கே நீ சிரிக்க விரும்பினால் சிரிக்கலாம் , அழலாம் , சிந்திக்கலாம்  ஒரே பேருந்தில் அத்தனை பேர் அமர்ந்திருக்க ஒருவர் மட்டுமே அழுதுகொண்டு இருப்பார்  அந்த காட்சி நினைவுக்கு வந்தது .. 


மொத்தத்தில் இந்த குறும்படம் ஒருமுறை அவசியம் பார்க்கலாம் . எல்லோருக்கும் பிடித்துவிடும் என சொல்ல முடியாது . ஆனால் எனக்கு இதுபோன்ற அல்லது ஸ்டாப் மோஷன் முறையில் மனித எண்ணங்கள் சார்ந்த அனிமேஷன் குறும்படங்கள் பிடிக்கும் . 95 ஆவது ஆஸ்காருக்கு அனிமேஷன் குறும்படங்கள் பிரிவில் போட்டியிட அனுப்பி இருக்கிறார்கள் . 15 ஷார்ட்லிஸ்ட்  ல் இதுவும் ஒன்று

Post a Comment

أحدث أقدم