Cannes திரைப்படவிழா விருதுகள் 2022

உலகப்புகழ் பெற்ற திரைப்படவிழாக்களில் மிகவும் முக்கியமான   ஒன்றானது தான்  இந்த கேன்ஸ் திரைப்பட விழா , வாழ்நாளில் எப்படியாவது ஒருமுறை இதற்கும், நெதர்லாந்தில் நடக்கும் IFFR  நேரில் சென்று திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்ற நிறைவேறாத ஆசை ஒன்று எனக்கு  இருக்கிறது . ஆனா நிச்சயம் ஒருமுறை போகனும் திரைப்படவிழாவை பார்க்க .







இந்த திரைப்படவிழாவில் கலந்துகொள்ளவதே சிறப்பு தான் , அதிலும் சிகப்பு கம்பள வரவேற்புடன் தங்களுடைய திரைப்படத்தை திரையிட்டு பல உலக சினிமா ரசிகர்களின் கைத்தட்டல்களுடன் ஒரே கொண்டாடட்டமாக இருக்கும், பிறகு அந்தந்த திரைப்படம் சார்ந்த சம்மந்தப்பட்டவர்களிடையே கலந்துரை , ஸ்பெஷல் event என மிக சிறப்பாக இருக்கும்  .இந்த திரைப்படவிழாக்களில் பங்குபெறும் பல திரைப்படங்களை  தேர்வுசெய்து இந்திய திரைப்பட விழாக்களில் எத்தனையோ திரையிட்டு இருக்கிறார்கள் .  

இதுதான் அவர்களின் 75வது  வருடம் , 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக நடக்கவில்லை .  இந்த 2022 ல் பலருக்கும் பிடித்தமான இயக்குனர்களின் படங்கள் திரையிடப்பட்டு இருக்கிறது . குறிப்பாக கொரியாவில் ஒரே நிறுவனத்தை சேர்ந்த இரு முக்கியமான படைப்பாளர்களின் படங்கள் அனுப்பி இருந்தார்கள் . இரண்டும் விருதை வென்றிருக்கிறது , ஆனால் உயரிய விருதான சிறந்த படத்திற்கான விருதை 2017 ஆம் ஆண்டு வெளிவந்த  The Square படத்தின் இயக்குனர் தட்டிச் சென்றுள்ளார் .


இந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் வெற்றியாளர்களின் முழுபட்டியல் கீழே இணைத்துள்ளேன் . 


அதற்க்கு முன்பு இந்த விஷயத்தை சொல்லுறேன் .. 


கான்ஸ் திரைப்பட விழாங்கறாங்க நம்மூர் காரங்க வேற இந்த முறை நிறைய பேரு கலந்துகொண்டதா பேச்சு அடிபட்டுச்சி , பல இந்திய தமிழ்   சினிமா பிரபலங்களில் போட்டோக்கள் வந்ததை பார்த்திருப்பீர்கள் . அவர்களெல்லாம் எத்தனை அவார்ட் வாங்கினார்கள் என தேடாதீர்கள் , விஷயம் என்னன்னா ?  திரைப்படங்களை அங்கே நாம் திரையிட செலவு செய்ய வேண்டும் , அப்படி செலவு செய்தால் நீங்கள் கேன்ஸ் மார்க்கெட்டில்  போஸ்டர் லிருந்து எதை வேண்டுமானாலும் அங்கே வெளியிட்டு கொள்ளலாம் , காம்பெடிஷன் கலந்து கொள்வது வேறு இதை இரண்டையும் குழப்பிக்கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறன் . 

விக்ரம் , இரவின் நிழல் , ரஞ்சித்தின் அடுத்த பட போஸ்டர் , மாதவன் அவர்களின் படம் என இந்திய பாட்டாளமே அங்கிருந்ததன் காரணம் இதுக்குதான் . 


சரி இப்போ வெற்றியாளர்களின் பட்டியலை பாப்போம் . 


COMPETITION 

Palme d’Or: Triangle of Sadness (Ruben Östlund) 

Grand Prix ex aequo: Close (Lukas Dhont) 

Grand Prix ex aequo: Stars at Noon (Claire Denis) 

Jury Prize ex aequo: The Eight Mountains (Charlotte Vandermeersch, Felix Van Groeningen) 

Jury Prize ex aequo: Eo (Jerzy Skolimowski) 

75th Anniversary Prize: Jean-Pierre and Luc Dardenne (Tori and Lokita) 

Best Director: Park Chan-wook (Decision to Leave) 

Best Actor: Song Kang-ho (Broker) 

Best Actress: Zahra Amir-Ebrahimi (Holy Spider) 

Best Screenplay: Tarik Saleh (Boy From Heaven)

---------------------------

UN CERTAIN REGARD 

Grand Prize: The Worst Ones (Lise Akoka, Romane Gueret) 

Ensemble Prize: Jury Prize: Joyland (Saim Sadiq) 

Jury Special Mention: Best Director: Alexandru Belc (Metronome) 

Best Performance: Vicky Krieps (Corsage) and Adam Bessa (Harka) 

Screenplay: Mediterranean Fever (Maha Haj) 

Coup de Coeur Award: Rodeo (Lola Quivoron)

---------------------------

DIRECTORS' FORTNIGHT 

Europa Cinemas Cannes Label for Best European Film: One Fine Morning (Mia Hansen-Løve) 


SACD Prize: The Mountain (Thomas Salvador)


--------------------------------

CAMERA D'OR 

War Pony (Riley Keough, Gina Gammell) 

CRITICS' WEEK 

Grand Prize: La Jauría (Andrés Ramírez Pulido) 

French Touch Prize of the Jury: Aftersun (Charlotte Wells) 

Louis Roederer Foundation Rising Star Award: Zelda Samson (Dalva) 

Leitz Cine Discovery Prize for Short Film: Ice Merchants (João Gonzalez) 

Gan Foundation Award for Distribution: The Woodcutter Story (Mikko Myllylahti) 

SACD Prize: Andrés Ramírez Pulido (La Jauría) 

Canal+ Award for Short Film: On Xerxes’ Throne (Evi Kalogiropoulou)


More Info Check Official Site 




Post a Comment

أحدث أقدم