Junko (2021,Nepal) & Confusion(2020) - Short Film Intro By Tamil | புதிதாக திருமணமான இரண்டு வெவ்வேறு பெண்களின் கதை குறும்படம் அறிமுகம்

இந்த அதிசிய உலகில் நமக்கான இடத்தை நாம் தேர்வு செய்து கொள்ளவும் , நம் விருப்பங்களை நிறைவேற்றி கொள்ளவும் பல தட்டுப்பாடுகள் இன்றளவும் இருக்கிறது . தனிமையில் தான் நமது உண்மையான சுயமும் முகமும் வெளிப்படும்   நமக்கு நாமே ஆறுதல் கூறிக்கொள்ளும் காலமிது , நம் விருப்பத்தை கேற்க வெகுசிலரே .  அப்படி நேபாள் கிராமப்பகுதியில் புதிதான திருமணமான பெண் இருவரின்   மன எண்ணங்கள் என்ன என்பதுதான் இரண்டு வெவ்வேறு குறும்படங்கள் , இரண்டையும் இயக்கியவர் வேறு , . இரண்டும் கிட்ட தட்ட 14  நிமிடங்கள் வரும் . இது  இரண்டுக்கும் ஒரு சில ஒற்றுமை உள்ளது என்பதால் ஒரே பதிவில் அறிமுகம் செய்கிறேன் . 


குடும்ப அடையாளத்தின் பெருமையை வழிநடத்துகிறேன் பேர்வழி தந்தை, தாய் அவரவர் குழந்தைகளை வளர்ந்து ஆளாக்கி விட்டேன் என்ற ஒரு காரணத்திற்காக வாழ்நாள் முழுக்க வாழப்போகும் ஒரு வாழ்க்கையை அவர் கை  காட்டும் ஒருவரை திருமணம் செய்து கொள்வது மட்டுமா  ? முன் பின் அறிமுகமில்லா ஒருவரை கரம் முடித்து அவருடன் முதல் இரவு முடிந்தால் எல்லாம் முடிந்ததா ? அதுமட்டும் தான் வாழ்வா ? மற்றவரின் சந்தோஷத்திற்காக தம் இருப்பை இழந்து , வேண்டாவெறுப்பாக கிடைத்த ஒரு வாழ்வை வாழ்வதெல்லாம் நரகம் தான் . இதுபோன்ற  சூழ்நிலைகளை பொறுத்தவரை வெளித்தோற்றத்தில் என்னதான் நம்பிக்கையானவன் என்றாலும் உள்ளே அவரவர் குமுறல்கள் அவர்களுக்கே . 



JUNKO இயக்கம் : Minsho Limbu | 2021 | 14min Nepali 

புதிதாக திருமண மான தனது மனைவியை   நேபால்   கிராமத்தில் இருக்கும் தனது தாய்  வீட்டில் விட்டுவிட்டு ஒரு பழைய செல்போனையும் தருகிறான் கணவன் .  திருமணம்  முடிந்து வெளியூர் வேலைக்கு புறப்பட்டு சென்ற கணவன், வீடு திரும்புவான். வந்ததும்  என்னை அன்போடு பார்த்துக்கொள்வான் என காத்திருக்கும் பெண் ஒருவரை பற்றியது . அங்கு சென்றதும் உனக்கு பேசுறேன் . நேரம் கிடைக்கும் பொது வருகிறேன் என சொல்லிவிட்டு   வேலைக்காக இந்தியா  செல்கிறார் அவர்  . அவளுக்கு துணை அவளுடய அம்மா மட்டுமே அவரும் தனியாக வசிக்கும் சூழல் . மனைவியின் காத்திருப்பு , தன்னம்பிக்கை குறித்து காண்பிக்கும் ஒரு சிறிய குறும்படம் தான் இது , அவ்வளவு எளிதில் ஒருவரின் வலியை ஏக்கத்தை காட்சிகளின் மூலம் கடத்தி விட முடியாது . கணவனுக்காக ஏங்கி தவிக்கும் ஒரு பெண்ணின் கதாப்பாத்திரத்தை அவ்வளவு அழகாக கண் முன் நிறுத்தி இருப்பார்கள் . பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டுள்ளது . கவனிக்கத்தக்க ஒன்று இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டும் ,  Festivalscope ல் பார்த்தேன் . 


Confusion(2020,Nepal) - 

அடுத்ததாக இன்னுமொரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசக்கூடிய குறும்படம் .  இரண்டுக்குமான தொடர்பு புதிதாக திருமணமான தம்பதி என்பதுதான் . எதோ ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண், என்ற வகுத்து வைத்த நிலையில் இதனை  அணுக முடியாது. புதிதாக திருமண மான பெண் அறிமுகமில்லா விருமில்லா திருமணத்தில் கட்டாயத்தின் பேரில் மணமுடித்து வாழச்செய்வது எல்லாம் குழியில் பிடித்தி தள்ளிவிடுதற்கு சமம் . அப்படி தனக்கு என்ன விருப்பம் என வெளியே சொல்லாமலே பிறரின் சந்தோஷத்திற்காக எதையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பெண்ணை பற்றியது . இதில் இந்தப்பெண் ஒரு வார்த்தை கூட பேசி இருக்க மாட்டார்  , ஆனால் அவரின்  விருப்பம் என்னவென்பது உங்களுக்கு தெரிந்துவிடும் . LGBTQ+ பற்றிய குறும்படம் . ஒருவரின் விருப்பத்திற்கும் அன்பிற்கும் மரியாதை கொடுக்க வேண்டும் . நேபால் நாட்டிலிருந்து இதுபோன்ற கதைகள் குறும்படங்கள் அதனை இன்னும் நிலைநிறுத்தும் .  ஒருமுறை தாராளமாக பார்க்கலாம்  . 



நான் இரண்டையும் பெஸ்டிவல் ஸ்கோப் ல் பார்த்தேன் . Confusion(2020) என்ற குறும்படம் Youtube ல் கூட காண கிடைக்கும் தேடி கிடைக்காத பட்சத்தில்  என்னை இங்கே கேக்கலாம் . ஆனால் Junko இன்னும் வேறு எதிலும் பதிவேற்ற படவில்லை . 

Post a Comment

أحدث أقدم