2016 ஆம் ஆண்டு வெளிவந்த இத்தாலி நாட்டு படமொன்று உலகிலே அதிக முறை ரிமேக் செய்யப்பட்ட படம் என்ற கின்னஸ் ரெக்கார்ட் ஐ செய்துள்ளது . ஆம் அபிஷியலாக ஒரு 16 to 18 இருக்கும் . பட்டி டிங்கரிங் பார்த்து ஐடியாவை ஆட்டயப்போட்டு எடுத்த படங்கள் நிறையவே இருக்கும் .
ஏன் இந்தியாவில கூட ரெண்டு மூனு படம் இதே கான்செப்ட் ல வந்திருக்கு . ஆனா பாவம் ஒரிஜினல் டீம் க்கு அது தெரியாது . அப்படி தெரிஞ்சு இருந்தா அவங்கலோட அபிஷியல் பட்டியலில் கூடி இருக்கும் . இப்ப கூட நான் ஏன் இதை சொல்றேன்னா . காரணம் இருக்கு . ஆமா நீங்க பார்த்த அந்த படத்தோட கான்செப்ட் இங்க இருந்து ஆட்டைய போட்டது தான் . என்னடா ஒரே குழப்பா மா இருக்கா .. எதுக்கு இவ்ளோ குழப்பம் . நேரடியா ஒரிஜினல் பாருங்க . வேற மாதிரி படம் இது . ஜாலியா டின்னர் க்கு ஒன்று கூடும் நண்பர்கள் விபரீத விளையாட்டு ஒன்றில் இறங்க . ஒன்றன் பின் ஒன்றான சுவாரசியமான மர்மங்கள் என்னான்னு தெரிய Perfect Strangers 2016 ஐ பார்க்கவும் ..
குடும்ப கதைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு , உதாரணத்திற்கு திரிஷ்யம் என்ற மலையாள படம் பல மொழிகளில் ரீமேக் ஆனது போல . அப்புறம் இன்னொரு விஷயம் த்ரிஷ்யம் போலவே ஜப்பான் காரன் ஏற்கனவே ஒரு படத்தை எடுத்து வச்சு இருக்கான் , திருமண மான தம்பதிகள் பார்த்தே தீர வேண்டிய படம் . சண்டை வந்தால் நான் பொறுப்பள்ள 😉 நன்றி
إرسال تعليق