Songs for Rain (2021,India) - Film Intro By Tamil | மழைக்காக காத்திருக்கும் கிராம மக்கள்

அதீத வறட்சியின் காரணமாக ஆற்றில் நீர் இல்லை , அந்தளவிற்கு செழிப்பான வாழ்வும் இல்லை . அன்றாட மீன் பிடி தொழிலும் இதனால் தடை பட . மழைக்காக காத்திருக்கும் கிராம மக்கள் , மழையை வரவைப்பதற்காக  எதாவது ஒரு முயற்சியை செய்ய  விரும்புகிறார்கள் . கண்டுமூடித்தனமான சில எண்ணங்களை நம்பும்  மக்கள்  "தவளை திருமணம்" இன்னும் சில முன்னெடுப்புகளை வேண்டி மழைக்கான பாடலை  பாடி வரவேற்கிறார்கள் . மழை வந்ததா? கிராம மக்களின் நிலை என்ன ஆனது? என்பது   தான்  கதை . 



முன் பின் அறிமுகமில்லாத ஒரு கிராமத்திற்கு சென்றால் நம் கண்ணில் படுவதெல்லாம் நமக்கு ஆச்சர்யமாகத் தெரியும் . சமீபத்தில் விருந்தினர் ஒருவரின் அழைப்பின் பேரில், அவர்கள் ஊர் திருவிழாவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது , அங்கே இன்றளவும் பிராத்தனைகள் வழிபாடுகள் என்ற பெயரில் அவர்கள் செய்வதை பார்க்கும் பொது ஆச்சர்யமாக இருந்தது . அதே போலவேதான் இந்த படத்தையும் நான் உணர்ந்து கொண்டேன் . 


ஊர் தலைவர் ஒருவரிடம் நம் கிராமத்திற்கு நடந்துகொண்டிருப்பதை சரிக்கட்டவும் வறண்டு கிடைக்கும் ஆறில் மீண்டும் மீன் பிடிக்க வேண்டும் . பழைய மாதிரி மக்கள் நிலை மாற வேண்டும் என  சில பெரிய மனுஷர்கள் ஒன்றுகூடி கலந்துரை செய்து ஒரு ஏற்பாட்டை முன்வைக்கிறார்கள் . இப்படி ஒரு விஷயம் நடந்தால் நிச்சயம் மழை வரும் என்பது அவர்களின் எண்ணம் . படத்தில் நடித்தவர்கள் பெரும்பாலும் அதே கிராமப்பகுதியை சேர்ந்தவர்கள் , முக்கிய கதாப்பாத்திரமான ஒருசிலரை தவிர . இரண்டு கதாபாத்திரங்கள் குறிப்பாக நன்றாக நடித்து இருந்தார்கள்  . இயக்குனரும் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதால் இதனை முடிந்தவரை இயல்பாக படமாக்கியுள்ளார் . இதுதான் அவருக்கு முதல் படமும் கூட . 


இதற்கு முன் நான் பார்த்த அசாம் திரைப்படங்களில் காண்பிக்கப்பட்ட  கிராமங்களை விட மாறுபட்டதாக இருந்தது . காட்சிகள் ஒவ்வொன்றும் அழகாக கையாளப்பட்டு இருந்தது  . அஸ்ஸாம் ஜோர்ஹட் மாவட்டத்தில் உள்ள Teok என்ற கிராமத்தில் படமாக்கப்பட்டு இருக்கிறது . நியூயார்க் திரைப்படவிழாவில் சிறந்த இயக்குனர், சிறந்த படம் ,சிறந்த நடிகர் என பல பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டது . 


நியூயார்க் இந்திய திரைப்படவிழா காலங்காலமாக கவனிக்கத்தக்க சில இந்திய திரைப்படங்களை உலக சினிமா ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு செல்வது வழக்கம் . ஒவ்வொருமுறையும் அஸ்ஸாமிலிருந்து குறிப்பிடத்தகுந்த படங்கள் இந்த திரைப்படவிழாவில் பங்குபெறும் . இந்தமுறை Bridge , Boomba மற்றும் இந்த படம் என மூன்றும் கலந்துகொண்டது என நினைக்கிறன் . வாய்ப்பிருப்பவர்கள் கிடைத்தால் பாருங்கள் . 


இந்தப்படம் இன்னும் எந்த தளத்திலும் வெளியாகவில்லை . வெளியாகும் போது பார்த்துக்கொள்ளுங்கள் . 

நன்றி 

Post a Comment

أحدث أقدم