உங்களுக்கு ஒரு தலை காதலில் நம்பிக்கை இருக்கிறதா . 100 ல் 90 பேருக்கு தன்னை விட மூத்த வயதினர் மேல் தான் முதலில் ஒருதலை காதல் வந்திருக்கும் என நினைக்கிறன் . எனக்கும் இருந்தது . ஆனால் அது என்னுடைய கெமிஸ்ட்ரி ஆசிரியை , சரி விஷயத்துக்கு வருவோம் . பள்ளி காலங்களில் சக மாணவியின் மீது அன்பு இருக்கும் அனால் அதனை வெளிப்படுத்த சிறிய தயக்கம் , சிறிய பதற்றம், கூடுதல் பயம் இருக்கும் . சொன்னால் அடி வாங்குவமோ பிரச்சனை ஆகிவிடுமோ? என்ன நடக்குமோ? என ஒரு முயற்சியும் எடுக்க மாட்டோம் . இதில் சிலர் சாலசிறந்தவர்கள் எப்படியோ சைலன்ட் ஆக செட் ஆக்கிக்கொள்வார்கள் . அப்படி செட் ஆன ஒன்றையும் எப்படி கொண்டுசெல்வது தெரியாமல் பாதியிலே விலகி விடுவபர்களும் உண்டு .
சில வருடங்களுக்கு முன்பு சினிமா விரும்பி நண்பர் ஒருவரிடம் பேசுகையில் செலவே இல்லாமல் வெவ்வேறு நாடுகளில் குறும்படம் எடுத்து அதனை சிறப்பிக்கிறார்கள் , அப்படி ஒரு குறும்படம் எடுக்க விரும்பினால் எதனை தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும் என்றேன் . அதற்கு அவர் சொன்னது " காதல் " இன்று மட்டுமல்ல என்றுமே அது தான் சிறப்பாக இருக்கும் என்றார் . உண்மைதான் . அதை வைத்து எதையும் உருவாக்கிட முடியும் .
சொல்லப்போனால் நானெல்லாம் பள்ளி படித்ததே வீண் , பேச பேச பயந்து பல்வேறு சந்தர்ப்பங்களை வீணடித்திருக்கிறேன் என்பது இப்போது சில படங்களை எல்லாம் பார்க்கும் பொழுது புரிகிறது , இதுபோன்ற குட்டி நினைவுகளை எல்லாம் வைத்து எத்தனை எத்தனையோ அழகான குறும்படங்களை உருவாக்கிட முடியும் . . 90 களின் சாபம் ரயில் பயண கதை போல நியாபக மறதியால் பலவற்றை . மறந்துள்ளேன் அதை இன்று பேசி ஒன்றுமில்லை .
இந்த குறும்படத்தை பொறுத்தமட்டில் 13 வயது நிரம்பிய மாணவன் அடித்துபிடித்து பேருந்துக்குள் ஏறுகிறான் . அங்கே அவனுடைய மூத்த சகோதரியும் அவளுடைய தோழியும் Snapchat , Instagram என சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டுக்கொண்டும் Live வும் செய்கிறார்கள் . சகோதரனின் டைரி ஒன்று கண்ணனுக்கு சிக்குறது . அதில் ஜடா ஜடா உன்னுடைய அந்த இரண்டு கண்கள் . நீ அழகி என அவளை பற்றியே ஒரு கவிதை தொகுப்பை எழுதி வைத்திருக்கிறான் . இதனை சமூக வலைத்தளத்தில் Live செய்து அவனை கிண்டல் செய்கிறார்கள் .
அதே பேருந்தில் ஜடாவும் இருக்கிறாள் . தன் சக பள்ளியில் படிக்கும் மாணவியின் மீது ஒருதலை காதலில் இருக்கிறான் சிறுவன் . அவள் பார்க்காத நேரத்தில் அவளை ரசித்து ரசித்து பார்ப்பது சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்துவது என . அவளிடம் பேச முயற்சி செய்கிறான் ஆனால் பின் வாங்குகிறான் . அவள் விரைவில் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு போக போகிறாள் அதற்குள் உன்னுடைய விருப்பத்தையும் அன்பையும் தெரிவித்து விடு இல்லையேல் அவ்வளவுதான் என்கிறார்கள் . பதட்டத்துடன் இருக்கும் அவனுக்கு நீ நீயாக மட்டுமே இரு என சொல்லி சகோதரியின் தோழி அனுப்பி வைக்கிறாள் . இறுதியில் என்ன ஆனது ஜடாவிடம் காதலை சொன்னானா ???
இந்தக்குறும்படம் சிலருக்கு பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம் எனக்கு பிடித்திருக்கிறது . சிறுவனின் நடிப்பு அழகு , ஜடாவின் அந்த கண்கள் உண்மையாவே காந்தம் தான் .
இயக்குனரைப் பற்றி : இயக்குனருக்கு இதுதான் முதல் குறும்படம் . அவ்வளவு அழகாக இருக்கிறது அவரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் .
திரைப்பட தகவல்கள் Details :
இப்போதைக்கு 95 ஆவது ஆஸ்காருக்கு குறும்பட பிரிவில் ஷார்ட் லிஸ்ட் ஆகி இருக்கிறது பொறுத்திருந்து பாப்போம் நாமினேஷன் ஆகிறதா என்று .
விருதுகள் Festival & Awards :
ட்ரைலர் Trailer :
எங்கே காணலாம் , Where To Watch :
இந்த குறும்படத்தை நான் இப்போதைக்கு festivalScope தளத்தில் கண்டேன் / விரைவில் வேறெங்கேனும் வரக்கூடும் அப்போது தெரிவிக்கிறேன் .
إرسال تعليق