Berik (2010, Denmark) - Short Film Intro By Tamil | முகமில்லாத மனிதர்

2010 ஆம் ஆண்டு கான் திரைப்படவிழாவில் கலந்துகொண்ட மற்றும் அதில்  வெற்றிபெற்ற படங்களின் பட்டியலை Letterboxd யில் பார்த்துக்கொண்டிருக்கும் போது கண்ணில் பட்டது தான் இந்த பெரிக் குறும்படம் . 

நட்பையும் புரிதலையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தின் போஸ்டர் தான் பார்க்க  தூண்டியது . அதில்  கதீர்வீச்சு விஷத்தால் பாதிக்கப்பட்ட உண்மையான நபரே நடித்திருப்பார் . ஆம் பெரிக் சிஸ்டிகோவ் தான் அவர் , Kazakh மற்றும் ரஷ்ய மொழி பேசும் இந்த குறும்படம் 16 நிமிடங்கள் ஓடக்கூடியது . இதனை டேனியல் ஜோசப் போர்க்மேன் என்பவர் இயக்கி இருக்கிறார் . டென்மார்க் நாட்டு தயாரிப்பில் வெளியிடப்பட்டு இருக்கிறது . கான்ஸ் ல் குறும்படத்திற்கான விருதினை வென்றது குறிப்பிடத்தக்கது . 




போர் என்னவேண்டுமானாலும் செய்யும் என்பதனை பல்வேறு திரைப்படத்தின் மூலம் அறிந்து இருப்பீர்கள் . போரினால் இழந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என ஏரளமான செய்திகளையும் டாக்குமெண்டரி திரைப்படம் மற்றும் குறும்படங்களை கண்டிருப்பீர்கள் . போருக்கு முந்தைய பிந்தைய படங்கள் என்ற பிரிவும் உண்டு , அப்படி ஒருவரை பற்றியது தான் பெரிக் . 

ஆணு ஆயுத சோதனையால் தன் வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்பதனை துளியும் நினைத்திருக்க மாட்டார் பெரிக்  . கிழக்கு கஜகஸ்தானில் வசிக்கும் பெரிக் பல வருடங்களுக்கு முன்பு அங்கு நிகழ்த்தப்பட்ட பல்வேறு அணு ஆயுத சோதனை கதிவீச்சு விஷத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்  . தனது ஆறாவது வயதில் பார்வையிருந்தும் முற்றிலும் பார்க்க முடியாதபடி  முகம் முழுவதும் அகன்ற சதையை கொண்டுள்ளார் , கடுமையான வீக்கத்தால் அவதிப்படுகிறார் . வெளியே சென்றால் அவர்களின் வார்த்தைகளில் சிக்கி கொள்வோமே என்ற பயத்தில்  வீட்டுக்குள்ளே இருக்கிறார் .  , அங்குள்ளவர்கள் அவரை " முகமில்லாத நபர் " என்றுதான் அழைப்பார்களாம் . அவருடைய ஆசையே இந்த உலகத்தை பார்க்க வேண்டும் என்பதுதான் பார்த்தாரா இப்போது எப்படி இருக்கிறார் என்பது தெரியவில்லை . 

ரஷ்யா கிட்டத்தட்ட 400 க்கு மேல் அணுகுண்டுகுண்டுகளை அதே பகுதியில் வெடிக்கவிட்டு சோதனைப்படுத்தி இருக்கிறது . வானமே அகன்ற புகையினால் சூழ்ந்து பெரிய குடை போன்ற காட்சியை ஒவ்வொருமுறையும் நிகழக்த்தி இருக்கிறது . அங்கே அருகில் வசித்த ஆடுமேய்க்கும் குடும்பம் தான் பெரிக் ன் குடும்பம் . இந்தக்குறும்படம் அவரின் வாழ்க்கையை பற்றியது அல்ல . அதில் இறுதியில் அவரை பற்றி வரும் .  அணுக்கதிர்வீச்சினால் பாதிக்கட்டவர்களை பற்றி இணையத்தில் தேடினால் நீங்கள் அறிந்திடாத  பல சம்பவங்கள் மேலும் நம்மை துயரமடையச்செய்யும் . 

இப்போ குறும்படத்திற்கு வருவோம் . 

தன் சகோதரணோடு வசிக்கும் பெரிக் பெரும்பாலான நேரத்தை தனிமையிலே கடக்கும் நபர் , கதிவீச்சு விஷத்தால் பாதிக்கப்பட்ட அவருடைய முகம் முழுவதும் கண்களை மறைத்தே விட்டது . அகன்ற தோற்றமும் வேண்டிய முகமும்  தன்னுடைய அபார்ட்மெண்டில் சிறிய சிறிய இசைக்கருவிகளின் மூலமும்  பாடல்களின் மூலமும் தான் பெரும்பாலான நேரத்தை கழித்துக்கொண்டு  இருக்கிறார் , அங்கே இருக்கும் சிறு சிறு சிறுவர்கள்  விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் . வேறொருவனின் பந்தை பெரிக் வீட்டு முன்பு விழ அதனை எடுத்து ஜன்னலின் வழியே வீசி விடுகிறார் பெரிக் , பிறகு அவருடைய வானொலி பெட்டியை திருடுகிறான் .சிறுவன்  . மீதியை குறும்படத்தில் பார்த்துக்கொள்ளவும் . 

சிறுவர்களின் உலகம் தனிப்பட்டது அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான ஈர்ப்பும் வெறுப்பும் இருக்கும் .  கேலி , கிண்டல் , கொடுமை படுத்துதல் எல்லாம் அவர்கள் எப்படியும் கடந்து வந்திருப்பார்கள் . பள்ளிக்கு செல்லும் முதல் நாள் நமக்கு நேரும் ஒன்றை முப்பதாவது நாள் அவன் வேறாருக்காவது அதையே திருப்பி தருவான் . இது இப்படி சங்கிலித்தொடர் போல நடக்கும் . ஒருசிலர் மட்டுமே மற்றவர்களின் வருத்தத்திற்குள் ஆழ்த்தக்கூடிய சம்பவங்களை செய்யாமல் இருப்பர் . எல்லாம் கடந்து விடத்தான் வேண்டும் என்றில்லை . நல்லதைக்கற்றுக்கொடுத்து பெற்றோர்களின் ஆசிரியர்களின் கூடுதல் கவனம் மூலம் வருங்காலம் மாற்றம்பெறும்  .   நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் .

vimeo தளத்தில் காண . கிடைக்கிறது 

Berik from Daniel Joseph Borgman on Vimeo.

நன்றி 






Post a Comment

أحدث أقدم