Life in Stars (2021, India ) - Short Film Intro By Tamil | எப்போதிலிருந்து தொடங்கியது இந்த மனிதர்களுக்கான ரேட்டிங் சிஸ்டம் ?

சமீபத்தில் செய்திகளில் நிறைய பார்த்திருப்போம் , வட இந்தியாவில் இருந்து தென் இந்தியாவிற்கு பிழைப்பு தேடி ரயில் ரயிலாக வருவோர்கள் பற்றியும்  அவர்களின் அன்றாடம் வாழ்வாதார பிரச்னை பற்றியும் . குறிப்பாக இன்று கூட ஒரு செய்தி பார்த்தேன் . அதில்  மனதளவில் பாதிக்கப்பட்ட வட இந்தியர்கள் மீண்டும் சொந்த ஊருக்கே திருப்பியனுப்பட்டனர் போன்றவை . இதிலும் செய்துகொண்டிருக்கும் வேலை பறிபோகுதல் . தனது இருப்பை தக்கவைத்து கொள்ளுதல் போன்ற பலவற்றை சொல்லலாம் . 


அப்படி வட இந்தியாவிலிருந்து இங்கே தமிழ்நாட்டில் பணிபுரியும் ஜெரினா  வீட்டிற்கே சென்று பெண்களுக்கு அழகு சார்ந்த Beauty  Spa வேலை செய்கிறார் . ஏற்கனவே தனது ரேட்டிங் குறைவாக இருப்பதால் அவருக்கு இறுதி வாய்ப்பு ஒன்று வழங்கப்படுகிறது . அதில்  அதிகபட்ச சிறந்த மதிப்பெண்ணை பெற்றால் மட்டுமே அவளால் இந்த வேலையை தொடர முடியும் இல்லையேல் வழங்கப்பட உரிமம் Cancel செய்யப்படும் . என்ன ஆனது என்பதை குறும்படத்தில் காண்க . 




அடுத்த நிமிடம் என்னவாகப்போகிறது என்ற நிரந்தமில்லாத வாழ்க்கையில் நாம் பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் தனிப்பட்ட ஒருவரின் வாழ்வாதாரம் ஒரு சம்பவத்தினால் பாதிக்கப்பட போகிறது என்பதனை காண்பிக்கும் & கேள்விகளை எழுப்பும்  ஒரு 12 நிமிட குறும்படம் தான் இது .   . தமிழில் சமீபத்தில் வெளியான ரத்தசாட்சி திரைப்படத்தை இயக்கிய இயக்குனரின் முதல் குறும்படம் என நினைக்கிறன்   , சில குறும்பட விழாக்களில் பங்குகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது , 

எதாவது ஒரு ரெஸ்டாரண்டுக்கு சென்றாலோ , அல்லது ஹோட்டலில் தங்கினாலோ ,  அங்கே பணிபுரியும் சிலரின் அன்றாடம் எப்படி இருக்கும் என  சிந்தனைகள் மண்டைக்குள் ஓடும் . நம்மை சுற்றியுள்ளவர்களை பற்றிய  எளியவர்களின் கதை எங்கிருந்தாலும் பேசப்படும் . வலிகள் ஒன்றுதானே . 

இந்த குறும்படம் எனக்கு Marion Cotillard ன் ஒரு முக்கியமான படத்தை நினைவுக்கு வர செய்தது . 

பெல்ஜியம் நாட்டில் வெளியான "Two Days One Night " படம்தான்  .  1000 யூரோ போனஸ் உயர்விற்காக சக பணியாளர் ஒருவரின் வேலை வோட்டிங் அடிப்படையில் தீர்மான செய்யபோகிற நிலைமை வருகிறது . இரண்டு நாளுக்குள் தன் உடன் பணிபுரியும் பணியாளர்களின்  வோட்டிங் வைத்தே அவளின் வேலை இருக்கப்போகிறதா இல்லையா என்பது தான் படம் . வெகு நாளுக்கு முன்பு பார்த்தேன்  . நான் சொல்வதை விட மிக  சிறப்பான பார்த்தே தீர வேண்டிய  படமாக இருக்கும் . நீங்கள் முதல் முறை பார்க்கிறீர்கள் என்றால் நிச்சயம் உங்களை ஏமாற்றாது . 

இந்த குறும்படம் பார்க்கையில் சற்றே அந்த படம் நியாபகம் வந்துபோனது அவ்வளவே மற்றபடி இரண்டும் வெவ்வேற படங்கள்  , அவசியம் இரண்டையும் தவற விடாமல் பாருங்கள் நன்றி . 


இன்றைய காலத்தில் எதற்கெடுத்தாலும் ஒரு மார்க் ஒன்றை நாம் போட்டுக்கொள்வோம்  , பக்கத்துக்கு வீட்டுக்காரன் பையன் பெற்ற மதிப்பெண்ணோடு நம் மதிப்பெண்ணை தொடர்பு படுத்தி பேசுவதில்  இருந்து எல்லாத்துக்குமே இந்த ரேட்டிங் சிஸ்டம் தான் அவர்களின் தரத்தை நிர்ணயம் செய்கிறது  .  மனிதர்களிடத்தில் ரேட்டிங் தேவையா ??, இனி வரக்கூடிய காலங்களில் ஏன் சமகாலத்தில் கூட இதுபோன்ற பிரச்னைகளையும் அதனால் வரும்  எதிர்வினைகளையும் எப்படி சமாளிக்க போகிறோம் ??  

சரி அப்போ நீ படத்துக்கு மட்டும் ரேட்டிங் கொடுக்க சொல்ற இதென்ன நியாயம்  ??

என்னளவில் சினிமா படத்திற்கு தனிப்பட்ட ரேட்டிங் கொடுக்கலாம் அது  என்னுடைய அடுத்த படத்தை தேடி பார்ப்பதற்கான ரிலேட் செய்து கொள்ளத்தானே தவிர அந்த இயக்குனருக்கு நான் கொடுக்கும் தனிப்பட்ட ரேட்டிங் அல்ல . ? படைப்பாளருக்கு இருக்கும் சுதந்திரம் போல ,  பார்வையாளன் தான் விரும்பும் படத்திற்க்கு தனக்கு விரும்பிய ரேட்டிங் கொடுத்துக்கொள்ள சுதந்திரம் உண்டு ஆனால் இதனை மனிதர்களிடத்தில் தொடர்பு படுத்தி பார்க்க முடியவில்லை , முடியாது  , இந்த ரேட்டிங் எந்த வகையிலும் ஒரே ஒருவரை மட்டுமே பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள முயல்வேன்  .  , முடிந்தவரை தனிபட்ட நபர்களுக்கு கொடுக்கப்படும் ரேட்டிங் கொடுக்காமலோ அல்லது கொடுத்தால் முழுமையாகவோ தான் தருகிறேன் அது எதோ ஒரு விதத்தில் அவர்களுக்கு பயன்பெறும் .  ஆனால் குறிப்பிட்ட நபரின் அன்றாடத்தை தீர்மானிக்கும் மனிதர்களுக்க்கான ரேட்டிங்  தேவையில்லை  !! 



Post a Comment

أحدث أقدم