After School (2014, France) - Short Film Intro By Tamil | விபரீத விளையாட்டு Ufff Ufff Ufff

பள்ளி ஹாஸ்டலில் படிக்கும் தனது நெருங்கிய நண்பன் தியோ பள்ளி முடிந்ததும் தினமும் இரவு சில மாணவர்களோடு சேர்ந்து எதோ ஒன்றை ரகசியமாக செய்கிறான் என்பதை தெரிந்துகொள்கிறான் ஜெரால்டு  . தியோவும் ஜெரால்டும் நெருங்கிய நண்பர்கள்  .  




அந்த கூட்டத்தில் ஒரு பெண்ணும் இருக்கிறாள் . ஒருநாள் இவனும் அது என்ன என்பதை தெரிந்துகொள்ளவும் அதனை முயற்சி செய்யவும் ஆர்வத்துடன் கிளம்பிவிடுகிறான் , இவனோ கொஞ்சம் கூச்ச சுபாகம் உடைவன் , ஆனாலும் அதை என்னவென்று தெரிந்துகொள்ள செல்கிறான் . . இவனுக்கு ஏற்கனவே மூச்சு பிரச்னை ஆஸ்துமா இருக்கிறது . இப்போது அந்த கூட்டத்தில் அந்த பெண் கீழே அமர்ந்திருக்க தனது பெல்ட்டை அவிழ்க்கிறான் , பிறகென்ன ?? 

ஒரு குட்டி சம்பவம் : 

வாழ்க்கையில் இரண்டு வருடம் பள்ளிக்காலத்தில் ஹாஸ்டலில் கழித்திருக்கிறேன் , வீட்டிலிருந்து வருவோர்களை காட்டிலும் ஹாஸ்டல் படித்தவர்களுக்கு கொஞ்சம் கூடுதல் பள்ளிப்பருவ நிகழ்வுகள் நினைவிருக்கலாம் , ஒரு விதத்தில் சுவாரசியமான பொழுதுகளையும் ஒரு விதத்தில் மறந்தே தீர வேண்டிய நிகழ்வுகளையும் கடந்துவந்திருக்கிறேன் . அதிகபட்சமாக தேர்வு நெருங்கும் சமயத்தில் வெறும் 4 to 5  மணி நேரம் தூங்கினால் போதும் என பள்ளியின் கடும் கட்டுப்பாட்டில் இயங்கிய சமயத்தில் பல சுவாரசியமான சம்பவங்களை நிகழ்த்தி இருக்கிறோம் .

அதில் எல்லாவற்றும் நினைவில்லை ஆனால் கொஞ்சம்  தில்லுமுல்லு வேலைகளையும் செய்திருக்கிறோம் , ஜாம் பாட்டிலை திருடுவது , பக்கத்துக்கு ரூமில் தூங்குபவனை நடு இரவில்  பயமுறுத்துவது , இங்கதான் ஒருத்தன் தூக்கு  போட்டு செத்தான் ன்னு புதிதாக ஹாஸ்டலுக்கு சேருவோருக்கு இல்லாத கதைகளை கட்டிவிடுவது ,  சிகப்பு பச்சை நீலம் என கலர் கலர் லேசர் லைட்டுகளை அருகிலிருக்கும் தோழிகள் ஹாஸ்டலில் அடிப்பது , திருட்டுத்தனமாக மொபைலில் வாழ்க்கைக்கு தேவையான சிலவற்றை தெரிந்துகொள்வது  , குடிக்க வைத்திருக்கும் சூடு தண்ணியை கொஞ்சம் கொஞ்சமா பாட்டிலில் நிரப்பி பக்கெட் ல் ஊற்றி  குளித்துக்கொள்வது என பல வேலைகளை செய்திருக்கிறன்   , ஆனால் எதுவுமே மிக தீவீரமாக எண்ணத்திற்கு அப்பாற்பட்ட செயல்களை செய்ததில்லை ,  இதை சம்பவத்தை ஏன் சொன்னேன் என்றால் இதையெல்லாம் விட சில தீவிரமான ஒன்றை இப்போ சொல்கின்ற குறும்படத்தில் செய்வார்கள்  சில விபரீத முயற்சிகளை எடுப்பார்கள்  நல்லவேளை நம்ப இப்படி ஒரு ஹாஸ்டலில் படிக்கவில்லை.

சரி மீண்டும் குறும்படத்திற்கு 
பிறகென்ன ?? முடிவை நீங்கள் ஷார்ட் பிலிம் ஐ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்  , இது பரபரப்பை கிளம்பி விடும் த்ரில்லர் குறும்படமில்லை , ஆனால் உங்களின் எண்ணத்தை தவிடுபொடியாக்கும் , நீங்கள் நினைத்ததை உங்களின் யூகத்தை  தூக்கி எறிந்துவிட்டு இது ஒரு கதையை சொல்லும்  , எனக்கு பிடித்திருந்தது . Alice Isaaz
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஐயோ அந்த வசீகரிக்கும் கண்களும் உதடுகளும் அழகாக இருக்கிறார் , நன்றாகவும் நடிக்கிறார் , அவரின் மற்ற படங்களை காண வேண்டும்

இந்த திரைப்படத்தின் இயக்குனர் இதற்கு முன்பு ஒருநிமிட குறும்படம் ஒன்றை எடுத்து திரைப்படவிழாவிற்கு அனுப்பி வெற்றி பெற்றுள்ளார் , இந்த குறும்படமும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு முக்கியமான விருதுகளையும் வாங்கியுள்ளது , இதற்கு பிறகு இன்னுமொரு குறும்படமிருக்கிறது  , சமீபத்தில் தான் ஒரு Debut பிலிம் ஒன்றை வெளியிட்டார் பார்க்க வேண்டும் . 

தற்போது இங்கே காண கிடைக்கிறது .

Après les cours / After school (VOST) from Guillaume Renusson on Vimeo.



1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم