எல்லோருக்கும் கருணை எங்கிருந்து தொடங்குகிறது?
தெருவில் கைவிடப்பட்ட குட்டி பூனைகள், நாய்களை பார்க்கும் போது இதை எப்படியாவது வீட்டுக்கு எடுத்துட்டு போய் நம்ப வளர்க்கனுன்னு பையில் போட்டு வருவோம். அப்புறம் ஏற்கனவே வீட்ல நாய் நீ இருக்க, இன்னொன்னு வேறயான்னு நம்பள திட்டி அங்கேயே கொண்டு விட சொல்வாங்க.
அதுபோல இந்த மொரோக்கோ நாட்டு குறும்படமொன்றில் சிறுவனுக்கு ஒரு வளர்ப்பு நாய் தெருவில் கிடைக்கிறது. அதற்க்கு அவன் மிலோ என பெயரிட்டு வீட்டுக்கு தெரியாமல் மாடியில் வைத்து வளர்க்கிறான். அவன் வீட்டிலிருந்து அவனுக்கு குடுக்கும் உணவை மறைத்து வைத்து மிலோ வுக்கும் கொடுக்கிறான். பீச் ஓரமாக இருக்கும் காலி பீர் பாட்டில்களை எடுத்து எடைக்கு போட்டு அந்த காசில் நாய்க்கு உணவு வாங்குகிறான், சக நண்பனோ இதெல்லாம் ஹராம் என்கிறான். இவன் செய்யும் செயல் தந்தைக்கு தெரிந்தால் அவ்வளவுதான். அவர் வெளியே ஏதாவது வாங்கி சாப்பிட்டாலே திட்டுவார். ஒரு கட்டத்தில் இவன் மாடியில் நாய் வைத்திருப்பது அவன் அம்மாவுக்கு தெரிய வர அப்பாக்கு தெரிந்தால் பிரச்னை என கொண்டு விட்டுவிட வர சொல்கிறாங்க.. முடிவில் என்ன ஆனது என்பதே இந்த சிறு குறும்படம்.
Spolier
அவன் சம்பாதிக்கும் சிறிய தொகை எல்லாம் அந்த நாய்க்கான உணவுக்கே.
ஒரு நாள் அந்த தெருவில் "காணாமல் போன நாய்” ன்னு மிலோ படத்தோட poster ஒட்ட ஆரம்பிக்கிறார்கள். அப்போ தான் சயீத்துக்கு உண்மை புரிகிறது. மிலோ அவனுடையது மட்டும் இல்லை. ஆனால் அவன் விட்டுக் கொடுக்கத் தயாரா? இருக்கிறானா ? எத்தனையோ நாய் படங்கள் பார்த்திருப்போம் முதலாளியால் கைவிடப்பட்ட நாய் ஒன்று விமான நிலையத்தில் ஒரு சிறுவனோடு வளரும் முடிவில் கண்ணை கலங்கடிக்கும் காட்சிகள் எல்லாம் உண்டு. அந்த படத்தையும் கொஞ்சம் நினைவூட்டியது.
இயக்குனர் Yassine El Idrissi யின் மொரோக்கோ நாட்டு குறும்படம் அரபி மொழியில் கிட்ட அதட்ட 19 நிமிடங்கள் ஓடக்கூடிய டிராமா கொஞ்சம் மெதுவாக தொடங்கி நகரும் இது முடிந்ததும், நம்ம மனசுக்குள்ள ஏதோ ஒன்று அசைந்திருக்கும். ‘Bottles’ அப்படிப்பட்ட ஒரு short film.
மொரோக்கோ நாட்டின் Rabat நகரின் பழைய Old Medina சின்ன சின்ன வீதிகள், குறுகலான பாதை , ஒன்றொரு ஒன்று ஒட்டிய சுவரோடு சுவர் நெருங்கி நிற்கும் வீடுகள், கோடைக்காலத்தின் மந்தமான வெயில், அன்றாட வாழ்க்கையின் சாதாரண சத்தங்கள். இந்த சூழலுக்குள், ஒரு 13 வயது சிறுவன் சயீத் ஐ நாம் சந்திக்கிறோம்.
கோடை விடுமுறையில், அவன் வீதிகளில் சுற்றி காலியான beer bottle-களை சேகரிக்கிறான். அதை ஒரு கடையில் விற்று கிடைக்கும் பணத்தை அவன் தனக்காக வைத்துக்கொள்ளவில்லை. அந்த பணம் ஒரு நாய்க்குட்டிக்கான உணவுக்காக பயன்படுத்துகிறான் , வீட்டுக்கு தெரியாமல் உணவை மறைத்து வைத்து அந்த நாய்க்கு கொடுக்கிறான். சயீத்துக்கு கிடைக்கும் அந்த நாய்க்குட்டிக்கு அவன் வீட்டு மாடியில் வைத்து, அவசரமாக கூடையை போட்டு மூடி, யாருக்கும் தெரியாமல். அந்த மறைவு பயத்தால் மட்டும் இல்லை. அது சமூக விதிகளின் பயம். ‘ஹராம்’ – . மொரோக்கோ சமூகத்தில், பலருக்கு நாய் வளர்ப்பது மத ரீதியாக முழுமையாக அனுமதிக்கப்படாத ஒன்று. ஏதாச்சும் காரணம் இருக்கனுன்னு .
நிறைய திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டுள்ளது.
ஊருக்கு இப்படி எத்தனையோ கதைகள் பத்தோட பதினொன்னு அத்தோட இது ஒன்னு என எளிதில் கடந்து விடலாம். ஏன் சில நாளுக்கு பிறகு இதுபோன்ற கதைகள் மறந்து கூட போகலாம். இப்போதைக்கு அவனுக்கு ஒரு மிலோ வைப் போல எனக்கு ஒரு மணி, ஒரு வெள்ளையன், ஒரு ராமு, மீனா, அம்மு, மயிலு என சில செல்லப்பிராணிகள் நினைவுக்கு வந்து சென்றன அவ்வளவே.
Virtual பெஸ்டிவலில் பார்த்தேன் இப்போதைக்கு எங்கு காண கிடைக்கிறது என தெரியவில்லை . தகவல் கிடைத்தால் தெரிவிக்கிறேன்.


إرسال تعليق