இந்த படம் Kosovo போர் முடிந்த பின் (post-war period) நடப்பவை. போர் முடிந்தாலும், மனிதர்களுக்குள் உள்ள பயம், வெறுப்பு, பிரிவு எல்லாம் இன்னும் உயிரோடே தான் இருக்கிறது என பல படங்கள் மூலம் நாம் பார்த்திருப்போம்.
அந்த வகையில் இந்த செர்பிய படம் நினைவில் இருப்பவை
Nenad ஒரு Serbian சிறுவன். அவன் தன் தந்தையுடன், Kosovo-வில் உள்ள ஒரு Serbian enclave-ல் வாழ்கிறான். Enclave என்றால் என்ன? ஒரு சமூக மக்கள் (இங்கே Serbians) மற்ற சமூகத்தால் (Albanians) சூழப்பட்டு, வெளியே சுதந்திரமாக போக முடியாத ஒரு isolated area வை தான் அபப்டி அழைப்பார்கள். Nenad பள்ளிக்கு போக கூட armored vehicle-ல் தான் போக வேண்டும், கிந் அப்பள்ளியில் ஒரு ஆசிரியை . அந்த ஊரில் இவர்கள் தனியா வெளியே நடந்தால் உயிர் அபாயம் ஏற்படும்.
அவன் தாயார் இறந்து போனவர் (இதுவும் அவன் தனிமையை மேலும் அதிகப்படுத்துகிறது) இதற்கிடையில் திடீரென Nenad-ன் தாத்தா இறந்து விடுகிறார். Serbian cemetery-க்கு போய் அடக்கம் செய்ய வேண்டும். ஆனால்: அந்த இடம் Albanian majority area இருக்கிறது. Serbians அங்கே போனால் தாக்கப்படும் அபாயம் முடிவில் என்ன ஆனது என்பதே இப்படம்.
அப்பா–மகன் உறவு மிகக் குறைந்த உரையாடல்களால் மட்டுமே காட்டப்படுகிறது. அந்த மௌனம் தான் அதிகம் பேசுகிறது. Nenad-ன் தாத்தாவின் மரணம் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. அடக்கம் செய்ய வேண்டிய இடமே ஒரு ஆபத்தான பயணம். UN பாதுகாப்புடன் funeral நடத்தப்படுகிறது. இந்த காட்சிகள் மிக அமைதியாகவும் கனமாகவும் செல்கின்றன. இங்கே எந்த இசை வலுக்கட்டாயமும் இல்லை. பயமும் பதற்றமும் இயல்பாக உருவாகிறது. ஒரு மரணம் கூட அரசியல் சூழலால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதுவே போர் பிறகான உண்மை.
இந்த பயணத்தில் Nenad ஒரு Albanian சிறுவனை சந்திக்கிறான். அந்த சிறுவன் கையில் துப்பாக்கியும் இருக்கிறது.
Enclave (2015) AKA ‘Енклава’ Directed by Goran Radovanović
ஒரு திரைப்படம் பார்வையாளனுக்கு இதை விட சிறந்த அனுபவத்தை கொடுத்திட முடியுமா? என தெரியவில்லை . ஒவ்வொரு பிரேமிலும் தனித்துவமான காட்சி அமைப்பு . திரைப்படத்தை பல்வேறு கோணத்தில் உள்வாங்கி கொள்ள முடிகிறது . இதற்கும் மேல் என்ன கதை ,என்ன சமாச்சாரம் ,எதை பற்றி பேசுகிறது? என்ன நடக்கும். என ஒன்றும் தெரிந்துகொள்ளாமல் பார்த்தல் மிக சிறப்பு .
2015 ஆம் ஆண்டு சென்னை திரைப்பட விழாவில் அகன்ற திரையில் பார்த்த அத்தனை பேரும் பாக்கியசாலிகள் . ஆங்காங்கே வரும் பிண்ணனி இசை . நடிப்பு , இயக்கம் , எழுத்து . உண்மையில் ஒரு சாதாரண காரியமில்லை .சிறுவர்களின் நடிப்பை பாராட்டிக் கொண்டே போகலாம் . முக்கிய கதாபாத்திரமாக நடித்த சிறுவனின் நடிப்பு மிக நன்றாக இருந்தது . The Trap செர்பிய படத்தில் பார்த்தே அதே நாயகர் . முதல் காட்சி வகுப்பறையில் வரும் ஆசிரியர் பேரழகு . பல டாக்குமெண்டரி ஷார்ட் பிலிம்ஸ் களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் தான் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார் காட்சிக்கு காட்சி அட்டகாசம் . பெஸ்டிவல் தரம் சினிமா பிரியர்கள் தவறவிட வேண்டாம் தேடிக் கண்டடையவும் . நன்றி

إرسال تعليق