குழந்தை , பருவம் பள்ளிப்பருவம், ஆசிரியர்கள் , குழந்தை வளர்ப்பு பற்றி உலக திரைப்படங்கள் எத்தனை எத்தனையோ வந்தாகிவிட்டது . இன்னும் வந்து கொண்டும் இருக்கிறது . மிக முக்கியமான குழந்தைகளுக்குள் பள்ளிகளில் நடக்கும் . சிறு சிறு சண்டைகள் . வெறுப்பு , Bullying போன்றவற்றை பற்றி பேசுகிறது இந்தப்படம் . முதல் நாள் பள்ளிக்கு செல்லும் தங்கை அண்ணன் அவர்களை பற்றிய கதைதான் மேலும் தெரிந்துகொள்ள ட்ரைலர் பார்த்துக்கொள்ளவும் .
பள்ளிக்குழந்தைகள் சம்மந்தப்பட்ட கதை ஒன்றை கையில் எடுத்து அதனை திறம்பட திரைக்கதை அமைத்து கையாள்வது என்பது சாதாரணமான காரியமில்லை . அதிலும் இது குழந்தைகளுக்குள் நடத்தப்படும் கொடுமைகள் அது அவர்களை எந்த நிலைக்கு தள்ளப்படுகிறது . என குறுகிய நேரத்தில் காண்பித்திருக்கிறார் . 72 நிமிடம் தான் மொத்த படமே . முக்கியமாக குழந்தைகளின் நடிப்பு நன்றாக இருந்தது கேமரா அணுகுமுறை பிடித்திருந்தது . நேரம் வாய்க்கப்பெற்றால் வருகின்ற திரைப்படவிழாக்களில் இந்தப்படத்தை ஒருமுறை தாராளமாக பாருங்கள் . 94 வது ஆஸ்காருக்கு பெல்ஜியம் நாட்டு சார்பில் சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட அனுப்பப்பட்டு இருக்கிறது . Directed by Laura Wandel

إرسال تعليق