99வது ஆஸ்கர்: Slovakia-வின் அதிகாரப்பூர்வ தேர்வு | Potopa (Flood) | 99th Oscar Best International Feature Film Submission

இந்தமுறை 99வது Academy Awards – Best International Feature Film category-க்கு முதன்முதலில் official submission ஆக தேர்வு செய்யப்பட்டிருக்கும் படம் Slovakia-வின் 

Potopa (2025) இயக்கம்: Martin Gonda நாடு: Slovakia / Czech Republic / Poland / Belgium மொழி: Slovak வகை: Historical Drama நேரம்: 103 நிமிடங்கள் #1 

1980-ஆம் ஆண்டு Communist Czechoslovakia. 15 வயதான Mara, கிராம வாழ்க்கையை விட்டு வெளியேறி நகரத்தில் படித்து pilot ஆக வேண்டும் என்று கனவு காண்கிறாள். ஆனால் Ruthenian விவசாயியான அவளது தந்தை Alexander, குடும்ப நிலத்தை விட்டுச் செல்ல அவளை அனுமதிக்க மறுக்கிறார். அதே நேரத்தில், புதிய Starina water reservoir கட்டப்படுவதால் அவர்களின் பள்ளத்தாக்கே நீரில் மூழ்கி, கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவாகிறது. தங்களது வீட்டையும், குடும்ப பாரம்பரியத்தையும் இழக்கும் சூழலில் தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான conflict மேலும் தீவிரமாகிறது. Tradition, identity, freedom மற்றும் displacement ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதை இது. 




🎬 Festival Recognition Potopa-வின் World Premiere 2025 Mar del Plata International Film Festival-ல் நடைபெற்றது. அங்கு Best Screenplay விருதை வென்றது. மேலும் 2025-ம் ஆண்டுக்கான Slovakia-வின் national film awards ஆன Slnko v sieti Awards-ல் இப்படம் 6 விருதுகளை வென்றது. இந்தப் படத்தின் மூலம் director Martin Gonda தனது feature directorial debut-லேயே Slovakia-வை Oscars-ல் represent செய்கிறார். இதற்கு முன்பு அவரது short film Pura Vida 2019 Cannes Cinéfondation section-ல் தேர்வு செய்யப்பட்டிருந்தது. 




🇸🇰 Slovakia – Oscar History Slovakia 1993 முதல் தனி நாடாக Best International Feature Film category-க்கு திரைப்படங்களை அனுப்பி வருகிறது. Potopa Slovakia-வின் 30வது Oscar submission. ஆனால் இதுவரை Slovakia-விலிருந்து எந்த ஒரு திரைப்படமும் Best International Feature Film Oscar nomination பெறவில்லை. இதற்கு முன் Slovakia-வின் notable submissions-ல் Martin Šulík-ன் The Garden, Peter Bebjak-ன் The Line, Iveta Grófová-ன் The Hungarian Dressmaker மற்றும் Tereza Nvotová-வின் Father ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

இப்போது தனது 30வது submission-ஆக Potopa, Slovakia-வுக்கு முதல் Oscar nomination-ஐ பெற்றுத் தருமா?

#Oscars2027 #BestInternationalFeature #Slovakia #Potopa #Flood #MartinGonda #SlovakCinema #MarDelPlata2025 #WorldCinema #AcademyAwards #OscarSubmission27 #MoviesMuseum

Post a Comment

Previous Post Next Post