99வது ஆஸ்கர்: Turkey-ன் அதிகாரப்பூர்வ தேர்வு | Like a Limbless Tree (Kesilmiş Bir Ağaç Gibi). Like a Limbless Tree | 99th Oscar Best International Feature Film

இந்தமுறை 99வது Academy Awards – Best International Feature Film பிரிவில் Turkey சார்பில் போட்டியிட அனுப்பப்பட்டிருக்கும் படம்  (2025/2026) 

இயக்கம்: Tunç Davut கதை & திரைக்கதை: Tunç Davut, Sinem Altındağ நடிப்பு: Ali İpin, Feyyaz Duman, Selen Kurtaran மொழி: Turkish 15 பேர் கொண்ட Turkey Oscar Selection Committee, பரிசீலனைக்கு வந்த 17 திரைப்படங்களில் இருந்து பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் Like a Limbless Tree-ஐ தேர்வு செய்துள்ளது. 




🎬 படத்தின் கதை ஓய்வு பெற்ற engineer Refik, தன்னிடம் வேலை செய்யும் Syrian refugee caregiver Gülizar-க்கு, தனது இரண்டு மகன்களுடன் Greece-க்கு தப்பிச் செல்ல பணம் கொடுக்கிறார். ஆனால் Refik தனது குடும்பத்தினரிடம் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிவிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில், Gülizar திடீரென காணாமல் போகிறார். அவரது இரண்டு மகன்களும் Refik-ன் பொறுப்பில் விடப்படுகின்றனர். இதன் பின்னர் குடும்ப உறவுகள், conscience, migration மற்றும் தலைமுறைகளுக்கு இடையிலான conflict ஆகியவற்றை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. 

🎬 Festival Journey Like a Limbless Tree-ன் World Premiere 62வது Antalya Film Festival-ல் நடைபெற்றது. பின்னர் Bosphorus Film Festival-ல் Best Editing விருதையும் பெற்றது. இந்தப் படம் director Tunç Davut-ன் feature directorial debut என்பதும் குறிப்பிடத்தக்கது. Development stage-ல் TRT 12 Punto Co-production Award உள்ளிட்ட முக்கிய ஆதரவுகளையும் பெற்றிருந்தது.




 🇹🇷 Turkey – Oscar History Turkey 1964 முதல் Best International Feature Film category-க்கு திரைப்படங்களை அனுப்பி வருகிறது. இதுவரை Turkey-க்கு இந்த category-ல் Oscar nomination கிடைக்கவில்லை. ஆனால் 2008-ல் Nuri Bilge Ceylan இயக்கிய Three Monkeys shortlist-ல் இடம்பெற்றது.

 #Oscars2027 #BestInternationalFeature #Turkey #LikeALimblessTree #KesilmisBirAgacGibi #TunçDavut #TurkishCinema #AntalyaFilmFestival #WorldCinema #AcademyAwards #OscarSubmission27 #MoviesMuseum

Post a Comment

Previous Post Next Post