குளிர்ந்த அகன்ற உயரமான மலை ஒன்றில் கயிறுகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும் மர வீட்டில் வசிக்கும் தந்தையும் சிறிய மகனும் தினமும் ஒன்றை திரும்ப திரும்ப செய்கிறார்கள் , அதாவது மகன் அவ்வளவு உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் மர ஊஞ்சல் விளையாடுகிறான் , தந்தை சிறிய சிறிய ஐஸ் கட்டிகளை உருவாக்குகிறார் , அதனை எடுத்துக்கொண்டு அவ்வளவு உயரத்தில் இருந்து இருவரும் ஸ்கை டைவிங் செய்து பாராசூட் மூலம் கீழே குதித்து அங்குள்ள ஒரு பகுதிக்கு சென்று மேலே தயாரித்த ஐஸ் கட்டிகளை விற்று வருகிறார்கள் .
மீண்டும் அதே வீட்டிற்கு மேல செல்ல ரோப் வசதியும் செய்துகொண்டுள்ளார் . இப்படியே தினமும் சென்றுகொண்டிருக்க வீட்டின் மீது பெரும் கல் விழுந்தால் மர வீடு கொஞ்சம் கொஞ்சமாக கயிறு பிய்த்துக்கொண்டு அந்தரத்தில் நிற்கிறது . கையில் வைத்திருந்த அந்த ஒற்றை பாராசூட் உம் கீழே விழ இனி எப்படி அங்கிருந்து மீள போகிறார்கள் என 14 நிமிடத்தில் அட்டகாசப்படுத்தி இருக்கிறார்கள் .
ரொம்ப அழகான அனிமேஷன் குறும்படம் . இது த்ரில்லர் குறும்படமெல்லாம் இல்லை இது ஒரு மென்மையான அழகான அனிமேஷன் ஷார்ட் . நிச்சயம் இதனை மனதிற்கு மிக நெருக்கமான அனிமேஷன் குறும்படங்கள் பட்டியலில் இணைத்து வைப்பேன் . எந்த ஒரு வசனமும் இல்லாமல் இதுபோன்ற படங்களினால் மட்டுமே முழுவதுமாக நம்மை உள்ளிழுத்து செல்ல முடியும் . உயரம் என்றாலே பயம் தான் ஆனால் அதனை என்றாவது ஒருநாள் எதிர்கொள்ள வேண்டும் என்ற தனிப்பட்ட ஆசை இருக்கிறது .
அது Ankhon Dekhi வரும் இறுதி காட்சியாகவோ அல்லது இயக்குனர் மிஸ்கின் சைக்கோ படத்தில் வரும் இறுதிக்காட்சியாகவோ இல்லாமல் , இந்த அனிமேஷன் குறும்படத்தில் வருவதை போல இருக்கவேண்டும் என விரும்புகிறேன் . நிச்சயம் காட்சிகள் பார்க்க அவ்வளவு பிரமிப்பாவும் கண்ணை கவரும் ஆச்சர்யமாகவும் இருக்கலாம் , அதிக பார்வையாளர்களின் கவனத்தை பெறக்கூடிய ஒரு அனிமேஷன் குறும்படமாக இது இருக்க கூடும் . ஆஸ்காரில் சிறந்த அனிமேஷன் குறும்படங்கள் பிரிவில் நாமினேஷன் ஆனது.
Ice Merchants 2022 Directed by João Gonzalez
தேடினால் எளிதில் கிடைக்கக்கூடும் தேடிப்பாருங்கள்.


Post a Comment