Polen Ly இயக்கிய இந்த திரைப்படத்தை 2027 Academy Awards-க்கான நாட்டின் அதிகாரப்பூர்வ International Feature Film entry ஆகத் தேர்வு செய்துள்ளது.
Becoming Human (2025) இயக்கம்: Polen Ly நாடு: Cambodia / USA மொழி: Khmer நேரம்: 99 நிமிடங்கள் வகை: Fantasy / Drama நடிப்பு: Savorn Serak, Piseth Chhun
படத்தின் கதை Battambang நகரில் பழமையான ஒரு cinema theatre இடிக்கப்படுவதற்காக காத்திருக்கிறது. அந்த திரையரங்கின் guardian spirit-ஆக இருக்கும் Thida, தனது ghost வாழ்க்கையைத் தொடர்வதா அல்லது மறுபிறவி எடுப்பதா என்ற முடிவுக்கு முன் நிற்கிறாள். அப்போது அந்த பழைய cinema-க்கு வரும் Hai என்ற இளம் மனிதரை அவள் சந்திக்கிறாள். இருவருக்கும் இடையே மெதுவாக ஒரு ஆழமான தொடர்பு உருவாகிறது. அவர்களின் உறவின் மூலம், தனிமை, இழப்பு, நினைவுகள் மற்றும் மறுபிறவி போன்ற தனிப்பட்ட கேள்விகளுடன், வேகமாக மாறிக்கொண்டிருக்கும் Cambodia-வின் சமூகத்தையும் பார்க்கிறது.
ஒரு பழைய cinema Theater இடிக்கப்படுவது என்பது ஒரு கட்டிடம் அழிக்கப்படுவது மட்டுமல்ல; ஒரு காலகட்டத்தின் நினைவுகளும், ஒரு சமூகத்தின் collective memory-யும் மறைந்து போவதைப் பற்றிய உருவகமாகவும் செயல்படுகிறது. Venice Film Festival 2025 Becoming Human-ன் World Premiere 82வது Venice International Film Festival-ல் Biennale College Cinema பிரிவில் நடைபெற்றது. இந்த படம் La Biennale-வின் Biennale College Cinema திட்டத்தின் 2024–25 edition-ல் தேர்வு செய்யப்பட்ட நான்கு feature projects-ல் ஒன்றாகும். இந்த திட்டம் emerging filmmakers-க்கு குறைந்த budget-ல் feature film உருவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
Becoming Human-க்கு Cambodia/USA production background-உடன் Daniel Mattes producer-ஆக இணைந்துள்ளார். Biennale College Cinema connection Becoming Human-ன் journey ஒரு சாதாரண festival premiere-ல் தொடங்கியது அல்ல. Polen Ly-ன் project, Biennale College Cinema-வின் international selection மூலம் தேர்வு செய்யப்பட்டு production stage-க்கு சென்றது. இந்த edition-ல் 277 applications-லிருந்து projects தேர்வு செய்யப்பட்டன; இறுதியில் Becoming Human உட்பட நான்கு films production-க்கு சென்றன.
இதுவரை Cambodia-வின் மிகப்பெரிய Oscar achievement Rithy Panh இயக்கிய The Missing Picture (2013). அந்த படம் 2014 Oscars-ல் Best Foreign Language Film nomination பெற்றது. இது Cambodia-வின் ஒரே International Feature Film Oscar nomination ஆகும். Cambodia-வின் மற்ற குறிப்பிடத்தக்க submissions-ல்: Rice People — Rithy Panh - First They Killed My Father — Angelina Jolie In the Life of Music — Caylee So & Sok Visal White Building — Kavich Neang Return to Seoul — Davy Chou Meeting with Pol Pot — Rithy Panh Tenement — Inrasothythep Neth & Sokyou Chea 2022-ல் Davy Chou-வின் Return to Seoul International Feature Film shortlist-க்கு சென்றது. ஆனால் final nomination பெறவில்லை. இதுவரை Cambodia: 14 submissions 1 Oscar nomination 0 Oscar wins 2027-ல் Becoming Human மூலம் Cambodia தனது இரண்டாவது International Feature Film Oscar nomination-ஐ நோக்கி செல்கிறது.
ஒரு சுவாரஸ்யமான Trivia Becoming Human-ன் original Khmer title `ជាតិជាមនុស្សា` — Chiet Chea Manusa. படத்தின் English title `Becoming Human`. கதையின் மையத்தில் இருக்கும் கேள்வியும் இதனுடன் தொடர்புடையது: ஒரு ghost-க்கு மீண்டும் மனித வாழ்க்கையைத் தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தால், அவள் அதை ஏற்றுக்கொள்வாளா?
#Oscars2027 #Cambodia #BecomingHuman #ChietCheaManusa #PolenLy #CambodianCinema #InternationalFeatureFilm #VeniceFilmFestival #BiennaleCollegeCinema #WorldCinema #AsianCinema #MoviesMuseum

Post a Comment