சில புத்தகங்கள் படித்து முடித்த பிறகும் நம்மை விடுவதில்லை. எதிர் வெளியீடு வெளியிட்டுள்ள நிறைய மொழிபெயர்ப்பு புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன் முகப்பு அட்டை பார்த்து சமீபத்தில் ஒரு புத்தகத்தை எடுத்து படித்தேன் அதுதான் சோவியத் பால் படித்த பிறகு அது குறித்து தேடுகையில் கிடைத்தது தான் இந்த படம்.
அந்தப் புத்தகத்தைப் படித்தபோதே, ஒரு அத்தியாயம் தாயின் பார்வையில் சொல்லப்பட்டு இருக்கும் அடுத்து மகளின் பார்வை இப்படியே மாறி மாறி செல்லும். இதை ஒரு திரைப்படமாக எப்படி எடுத்திருப்பார்கள் என்ற எண்ணம் வந்தது. முதலில் திரைப்படமாக இருக்கிறதா என்று தேடினேன் இருக்கிறது ஆனால் படம் எங்கும் காண கிடைக்கவில்லை தேட ஆரம்பித்தேன் இயக்குநர் தொடர்பு கொண்டேன் screenplay எழுதிய Arvis Kolmanis, production team , இன்னும் பல என ஒவ்வொன்றாக தெடர்ந்து தேடிப் பார்த்தேன்.
இறுதியில் அவர்கள் மூலம் எனக்கு private screener வாய்ப்பும் கிடைத்தது.
2023-ல் வெளியான Latvian film. Nora Ikstena-வின் அதே பெயரிலான நாவலை அடிப்படையாகக் கொண்டு Ināra Kolmane இயக்கியிருக்கிறார். திரைக்கதை Arvis Kolmanis. கதை 1945 முதல் 1989 வரை Soviet-occupied Latvia-வில் நடக்கிறது.
படம் தொடங்கும் விதமே எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. நாம் நேரடியாக 1970s அல்லது 1980s-க்குள் போய்விடவில்லை. முதலில் போர். World War II-ன் பின்னணி, Latvia-வின் occupation, அதன் பிறகு Soviet rule. அதற்குப் பிறகுதான் Astra-வின் வாழ்க்கைக்குள் நுழைகிறோம். அது ஏன் முக்கியம் என்று படம் போகப் போக புரிகிறது.
Astra ஒரு young and promising doctor. Science-ல் முன்னேற வேண்டும் என்ற ambition அவளுக்கு இருக்கிறது. ஆனால் அவள் வாழும் political system அவளுடைய career-ஐ மட்டுமல்ல, அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் மெதுவாக பாதிக்கிறது. அவளுடைய daughter Nora வளரும்போது, அந்த தாக்கத்தை அவளும் அனுபவிக்கிறாள். அதனால் இது வெறும் Soviet period பற்றிய historical film இல்லை. ஒரு நாட்டின் வரலாறு எப்படி ஒரு குடும்பத்தின் வாழ்க்கைக்குள் வந்து சேருகிறது என்பதுதான் படத்தின் interesting part. ஒரு தலைமுறைக்கு நடந்த விஷயம் அடுத்த தலைமுறையின் childhood-ஆக மாறுகிறது.
புத்தகத்தின் structure-ம் இதை வேறொரு விதத்தில் சொல்லுகிறது. Nora Ikstena தாய் மற்றும் மகளின் birth-ஐ வைத்து கதையைத் தொடங்குகிறார். தாய் 1944-ல், போர் காலத்தின் இறுதியில் பிறக்கிறார்; மகள் 1969-ல் பிறக்கிறார். அதன்பிறகு mother மற்றும் daughter perspectives மாறி மாறி வருகின்றன. ஆனால் திரைப்படத்திற்காக அந்த structure-ஐ linear narrative-ஆக மாற்றியிருக்கிறார்கள் என்று Ināra Kolmane கூறியிருக்கிறார். அதனால் புத்தகத்தையும் படத்தையும் மீண்டும் ஒருமுறை அருகருகே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.
Astra ஒரு திறமையான இளம் மருத்துவர். ஆனால் அந்தக் காலத்தின் அரசியல் சூழலும் அதிகார அமைப்பும் அவளுடைய வாழ்க்கையை மெதுவாக உடைக்கிறது. அவளுடைய career, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை, தாயாக இருக்கும் இயல்பான உணர்வுகள், சந்தித்த மனிதர்கள், நண்பர்கள் என அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. அந்த சூழல் அவளுடைய மகள் Nora வளர வளர, அம்மாவின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறாள். ஒரு கட்டத்தில் அம்மாவுக்கு மகள்தான் ஆதரவாக மாறுகிறாள். இவர்கள் இருவரின் பார்வையிலும் கேள்விகள் குழப்பங்கள் எதை நோக்கிய பயணம் என அனைத்தும் கொண்டு திரைப்படம் நகர்கிறது. புத்தகத்தில் எனக்கு இருந்த சில கேள்விகளுக்கு படத்தில் காட்சிகள் மூலம் புரிந்தது.
இதனால் படம் வெறும் Soviet history பற்றியது மட்டுமல்ல. ஒரு அரசியல் அமைப்பு ஒரு நாட்டை எப்படி மாற்றுகிறது என்பதைக் காட்டுவதைக் காட்டிலும், அது ஒரு குடும்பத்தின் உள்ளே எப்படி நுழைகிறது என்பதுதான் படத்தில் எனக்கு முக்கியமாகத் தோன்றியது. எத்தனையோ உலக திரைப்படங்கள் போலவும் இதிலும் ஒரு தாயின் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள், மகளின் childhood-ஐயும் அவளுடைய உலகைப் பற்றிய புரிதலையும் எப்படி மாற்றுகிறது. அதிலும் அந்தக் காலகட்டத்தின் அதிகாரப்பூர்வ வரலாற்றுக்கும், ஒரு குடும்பம் தங்களுக்குள் நினைவாக வைத்திருக்கும் வரலாற்றுக்கும் இருக்கும் வித்தியாசம் எல்லாமே சுவாரஸ்யமாக இருந்தது.
Ināra Kolmane இந்தக் கதையை பெரிய political drama போல எடுத்துச் செல்லாமல், ஒரு குடும்பத்தின் வாழ்க்கைக்குள் வைத்து சொல்லியிருப்பது எனக்கு பிடித்திருந்தது. படத்தின் காலகட்டத்தை உருவாக்கிய விதமும் கவனிக்கத்தக்கது. பழைய Soviet-era locations, trains, costumes, production design, வீடுகள் பொருள்கள் போன்றவற்றின் மூலம் அந்தச் சூழலை உருவாக்கியிருக்கிறார்கள்.
இதற்கு முன்பு Ināra Kolmane இயக்கிய “Bille” திரைப்படமும் Latvia-வில் நல்ல வரவேற்பைப் பெற்ற படமென்பதை அறிந்துகொண்டேன் விரைவில் பார்க்கணும் இந்த படம் Lielais Kristaps National Film Award-ல் Best Feature Film விருதைப் பெற்றிருந்தது. “Soviet Milk” படத்திற்கும் பின்னர் Lielais Kristaps-ல் Audience Award கிடைத்தது. 2023-ல் Latvia-வில் அதிகம் பார்க்கப்பட்ட Latvian film ஆகவும் இது இருந்தது. அதனால் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு எனக்கு முதலில் தோன்றியது Nora Ikstena-வின் புத்தகத்தை இன்னொரு முறை படிக்க வேண்டும். அதேபோல Ināra Kolmane-வின் மற்ற படங்களையும் தேடிப் பார்க்க வேண்டும்.
#SovietMilk #MatesPiens #InaraKolmane #ArvisKolmanis #NoraIkstena #LatvianCinema #WorldCinema #EuropeanCinema #BookToFilm #MoviesMuseum



Post a Comment