உலக சினிமா பிரியர்களுக்கு மிகவும் பரிச்சியமான இயக்குனர் Hirokazu Kore-eda அவரின் இரண்டு படங்கள் ஏற்கனவே கான்ஸ் திரைப்படவிழாவில் விருதினை வென்றுள்ளன . குறிப்பாக 2018 ஆம் ஆண்டு வெளியான Shoplifters சிறந்த படத்திற்கான விருதினை வென்றது குறிப்பிடத்தக்கது . டாக்குமெண்டரிகள் மற்றும் திரைப்படங்கள்& சீரீஸ் என 20 வதுக்கும் மேற்ப்பட்டவை இயக்கி இருக்கிறார் . இவரின் திரைப்படங்களை தேடி தேடி பார்க்கும் சில நண்பர்களை கண்டிருக்கிறேன் . அவருடைய சமீபத்திய திரைப்படமான Broker 2022 கான்ஸ் திரைப்பட விழாவில் Palme d'Or க்கு போட்டியிடுகிறது . இந்த திரைப்படத்தை பார்த்த பலர் நிச்சயம் வெற்றி பெரும் என நம்புகிறார்கள் .
ஒரு குழந்தையும் அதனை சுற்றி நடக்கும் சம்பவங்களும் , சிறப்பான சுவாரசியமான பயணமும் தான் இந்த திரைப்படம் . ட்ரெயிலர் அவ்வளவு அழகாக இருக்கிறது படம் வந்ததும் பார்க்கணும் .
இவரின் முந்தைய படம் பிரெஞ்சு மொழியில் வந்த முதல் படம் . இந்த broker கொரியன் மொழியில் வந்த முதல் படம் . ஜூன் மாதம் 6 ஆம் தேதி தான் கொரியாவில் வெளியாகிறது . அதற்கு முன்பு கான்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு இருக்கிறது . இந்த திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் சில Exclusive காட்சிகளை உங்களுக்காக கீழே பகிர்கிறேன் .
Broker 2022 ‘브로커’ Directed by Hirokazu Kore-eda alert-info
CJ Entertainment என்ற நிறுவனம் பல கொரியன் வெற்றி திரைப்படங்களை உலக திரைப்படவிழாவிற்கு அனுப்பியுள்ளது , இந்த திரைப்பட விநியோக நிறுவனம் இந்த முறை 2022 ல் இரண்டு முக்கியமான கொரிய திரைப்படத்தை கான்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்பி இருக்கிறது . இப்படி ஒரே நிறுவனத்தை சேர்ந்த இரண்டு படங்கள் பங்குபெறுவது இதுவே முதல் முறையாம் . உலக சினிமா ரசிகர்கள் இரண்டையும் பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள் . விரைவில் இரண்டையும் பார்க்க வேண்டுமென்று ஆவலாக இருக்கிறேன் .
ட்ரைலர் :
Post a Comment