கொரிய திரைப்படங்கள் பார்ப்பவர்களுக்கு Park Chan-wook பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை . இன்றும் பலருடைய முதல் கொரிய திரைப்படம் Old Boy ஆகத்தான் இருக்க முடியும் என நினைக்கிறன் . நிச்சயம் அவருடைய பழிவாங்கல் சார்ந்த மூன்று படங்களையும் எல்லாரும் பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன் இல்லையேல் பார்த்து விடுங்கள் . The Handmaiden,Lady Vengeance, Thirst , MR Vengeance, JSA போன்ற படங்களெல்லாம் என்னுடைய சினிமா பட்டியலில் என்றும் இருப்பவை .
ஆறு வருடங்களுக்கு பிறகு அவர் இயக்கம் படம்தான் Decision to Leave , இதற்க்கு முன்பு The Handmaiden 2016 ஆம் ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான போட்டியில் பங்கு கொண்டது மீண்டும் 2022 ல் Decision to Leave கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
கொலை விசாரணை சம்மந்தப்பட்ட திரைப்படமாக தெரிகிறது . ஜூன் மாத இறுதியில் கொரியாவில் வெளியாக இருக்கிறது . Park Chan-wook வின் Cannes திரைப்பட விழாவிற்கு அனுப்பப்படும் நான்காவது திரைப்படமிது .இந்த திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் சில Exclusive காட்சிகளை உங்களுக்காக கீழே பகிர்கிறேன் .
கொரியாவில் இருந்து ப்ரோக்கர் என்ற படமும் கான்ஸ் திரைப்படவிழாவில் தேர்வாகி உள்ளது . CJ Entertainment என்ற நிறுவனம் பல கொரியன் வெற்றி திரைப்படங்களை உலக திரைப்படவிழாவிற்கு அனுப்பியுள்ளது , இந்த திரைப்பட விநியோக நிறுவனம் இந்த முறை 2022 ல் இரண்டு முக்கியமான கொரிய திரைப்படத்தை கான்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்பி இருக்கிறது . இப்படி ஒரே நிறுவனத்தை சேர்ந்த இரண்டு படங்கள் பங்குபெறுவது இதுவே முதல் முறையாம் . உலக சினிமா ரசிகர்கள் இரண்டையும் பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள் . விரைவில் இரண்டையும் பார்க்க வேண்டுமென்று ஆவலாக இருக்கிறேன் .
ட்ரைலர் :
கிளிப் 1 :
கிளிப் 2 :
Post a Comment