உலக புகழ்பெற்ற Big Brother நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில் , விதவிதமான மொழிகளில் சக்கை போடு போட்ட கதைகளை எல்லாம் கேள்வி பட்டு இருப்பீர்கள் . நமக்கு புரியும் படி சொன்னால் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி தான் . இங்கே தமிழில் கமல் , கர்நாடகாவில் சுதீப் , தெலுங்கில் நாகர்ஜுனா , ஹிந்தியில் சல்மான் , மலயாளத்தில் மோகன் லால் , இன்னும் மராத்தி , பெங்காலி என இந்தியாவிலே பல சீசன்களை கண்டிருக்கிறது .
இதனை முதன் முதலில் கொண்டு வந்தது நெதர்லாந்தை சேர்ந்த டச்சு நிறுவனம் ஒன்று . John de Mol Jr. தான் நிறுவனர் . 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கே ஒரு நாவல் தான் இன்ஸ்பரேஷன் . அதற்க்கு பிறகு ஆங்கிலம் , ஸ்பானிஷ் என பல மொழிகளில் பிரபலமானது . உலக மக்களை பொறுத்த வரை அவர்களை எப்போதும் பிசியாக வைத்துக்கொள்ள வேண்டும் . எதாவது ஒரு விஷயத்தில் Entertain செய்துகொண்டே இருக்க வேண்டும் . அந்த வகையில் தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பல ரசிகர் பட்டாளாமே உண்டு .
குறிப்பிட்ட சில மக்களை தேர்வு செய்து ஒரு வீட்டிற்குள் 100 நாள்கள் வெளியுலக எந்த ஒரு தொடர்பில்லாமல் இருக்க செய்து . திரும்புகிற பக்கமெல்லாம் கேரமராவை வைத்து அவர்கள் செய்வது பேசுவது விளையாடுவது என சுவாரசியமாக நாள்களை கடத்தி, இறுதியில் ஒருவரை வெற்றி பெற செய்வதே இந்த கேம் . இதில் வெற்றியாளரை தேர்வு செய்வது பார்வையாளராகிய மக்கள் கையில் தான்.
அவர்கள் Vote செய்வதன் அடிப்படியில் பிரபலமான ஒருவர் தக்கவைக்கப்படுவார் . பிறகு அவர் பிக் பாஸ் விளாயாட்டில் வெற்றி பெறுவார் .ஆரம்பத்தில் ஒருமணி நேரம் மட்டுமே வந்தது நாளடைவில் பலத்த வரவேற்பின் காரணமாக 24 மணி நேரமும் கூட ஒளிபரப்பு செய்தார்கள் . இதெல்லாம் ஸ்கிரிப்ட் - முறைப்படி எல்லாம் எப்படி நடக்க வேண்டும் என தீர்மானித்து நடக்க வைக்கும் நாடக மேடை தான் என இதற்க்கு எதிர்ப்புகளும் உண்டு . எப்படி இருந்தாலும் வருடா வருடம் மவுசு குறைந்த பாடில்லை . 1999 ல் தொடங்கிய நிகழ்ச்சி 22 வருஷம் ஆகியும் பல நாடுகளில் ஓடிக்கொண்டிருப்பது பெரிய விஷயம் தான் .
நிலாவில் பாட்டி வடை சுட்ட கதை உங்களுக்கு தெரியுமா? , ஆமை முயல் கதை தெரியுமா ? பூனைக்கு மணி கட்டிய கதை தெரியுமா ? இப்படி உங்களுக்கு தெரிந்த ஒரு கதையை நான் பல விதமாக மாற்றி மாற்றி சொன்னாலும் அது சொல்ல வருவதே அதே ஒன்றைத்தான் , இது நான் கேட்ட கதை எனக்கு முன்னமே தெரியும் என கடந்துவிடுவீர்கள் ஆனால் நான் உங்களுக்கு ஒரு ஜாம்பி கதை சொல்றேன் என்றால் தெரிந்த கதையாக இருந்தாலும் மீண்டும் கேர்ப்பீர்கள் . . அப்படி உலகமே ஜாம்பி என்ற ஒன்றை வைத்துக்கொண்டு பல கதைகளை தந்துவிட்டது .ஜாம்பியை வைத்து காதல் , ஜாம்பியை வைத்து காமெடி , ஜாம்பியை வைத்து அன்பு , இன்னும் டீவீ சீரிஸ் கேம் என ஜாம்பிகளை வைத்து அத்தனையும் செய்துவிட்டார்கள் . கடைசியாக எனக்கு Train to busan படம் மிகவும் பிடித்திருந்தது , அதற்கு பிறகு இன்னும் சரியான படமாய் ஒன்னும் வரவில்லை வந்தால் பார்க்க வேண்டும் .
சரி இந்த Deadset க்கு வருவோம் .
ஐந்து எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் ஒரு படம் பாக்கிற நேரம் தான் , அதனை ஐந்து எபிசோட் களாக ஹாலோவீன் சமயத்தில் இதே பிக் பிரதர் நிகழ்ச்சியை வழங்கிய நிறுவனம் அதே சேனலில் தொடராக ஐந்து நாள்கள் திரையிட்டது . கிட்ட தட்ட அந்த சமயத்தில் 3 லச்சம் பார்வையார்களை தொடக்கத்தில் கொண்டிருந்தது , பிக் பிரதர் வீட்டில் எவிக்ஷன் இரவில் தொடங்குகிறது இந்த தொடர் , அந்த எவிக்ஷன் ஐ காண பல ரசிக கூட்டங்கள் வந்திருக்கின்றன . அதில் இன்று வெளியேற போகிற ஒருவரின் குடும்பத்தை காரில் கூட்டி வரும் சமயத்தில் அவர்களில் ஒருவர் ஜாம்பி மூலம் தாக்கப்படுகிறார் . அவ்வளவுதான் மீதி என்ன ஆகி இருக்கும் என நான் சொல்ல தேவையில்லை என நினைக்கிறன் .
இப்படி ஒரு சம்பவம் நடக்க உள்ளே வழக்கம் போல அவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கதை என்ன ஆனது என்பதுதான் இந்த 5 எபிசோட் கள் , நீங்கள் ஏற்கனவே Resident Evil , The Walking Dead , Dawn Of the dead , 28 days Later , 28 weeks Later , I am Legend , World War Z , land Of the Dead , Zombie land , Shun of teh Dead , Warm Bodies இதெல்லாம் பார்த்திருந்தால் உங்களுக்கு இது வெறும் புளித்துப்போன கதை யாக இருக்கலாம் அதுவும் இல்லாமல் இது 2008 ஆம் ஆண்டு வந்தது , இதில் நடித்தவர்கள் ஏற்கனவே அந்த பிக் பிரதர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் தான் . ஒருமுறை நேரமிருந்தால் பார்க்கலாம் . இல்லை என்ன இருந்தாலும் ஜாம்பி படமென்றால் நான் பார்ப்பேன் என்றால் இது உங்களுக்கான சீரீஸ் . என்ஜாய் .
இந்த Netflix காரர்களுக்கு ஜாம்பி என்றாலே போதும் உடனே அதனை வாங்கி Streamings செய்துவிடுவார்கள் . வருடத்திற்கு எப்படியும் இந்த ஜாம்பிகளை பற்றிய படமோ சீரீஸோ அவர்களை தேடி வந்துவிடும் . இதனை நீங்கள் Netflix ல் காணலாம் 18+ காட்சிகள் இருப்பதால் குழந்தைகளோடு காண முடியாது .
Post a Comment