Do Not Hesitate (2021,Netherlands) - Film Intro By Tamil | மலை பகுதியில் வண்டி பழுதாகி நிற்கும் ராணுவ வீரர்கள்

கிழக்கு மத்திய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக மற்றும் செயற்பாடுகளுக்காக உயர் அதிகாரி மற்றும் ராணுவ வீரர்கள் , முதல்நிலை தொடக்க சிப்பாய்கள் அடங்கிய சிறிய குழுவொன்று ராணுவ ட்ரக் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

- SBS On Demand AU 

Country : Netherlands Language: Dutch Running Time: 91 Mins Genres: Drama , War , Thriller 

வழியில் நிலை தடுமாறி விபத்து ஏற்பட பழுதை சரிசெய்ய அவர்களின் சர்வதேச குழுவில் இருந்து மீட்பு பணியினர் வரவேண்டும் . அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு வருவதற்குள் சிலர் நாங்கள் முன்னே செல்கிறோம் இங்கே மூன்று பேர் மட்டும் இருந்து சரிசெய்துவிட்டு வருமாறு சொல்கிறார்கள் . இதற்கிடையில் மேலும் ஒரு சிக்கல் , அதில் சிக்கிக்கொண்டு தான் நிலை தடுமாறுகிறார்கள் . இங்கிருந்து புறப்பட்டுச் சென்ற குழுவினருக்கு தொடர்பு இணைப்பில்லாமல் போகிறது . 




வாகனத்தில் இருந்து உணவுகளும் நீரும் திருடு போக , வறண்ட மலை பகுதியில் வெய்யிலிலும் சிக்கி தவிக்கும் இவர்கள் என்ன ஆனார்கள் என்பதே இந்தப்படம் , 


படத்தின் தலைப்பை கவனித்தால் தயங்காதே, தயங்க வேணாம் என்று பொருள் அது யாருக்கு என்பதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் . போர் குற்றம் , போருக்கு பிறகான , ராணுவ வீரர்கள் சம்மந்தப்பட்ட படங்களை பார்க்க விரும்புவோர் பார்க்கலாம் . நெதர்லாந்த் சார்பாக 94 ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டது ஆனால் ஷார்ட்லிஸ்ட் ஆகவில்லை .

Post a Comment

Previous Post Next Post