127 Hours (2010,USA) - Film Intro By Tamil | மறக்கமுடியாத 127 மணி நேரப் போராட்டம்

அமெரிக்காவில் மலை  ஏறும்   இளைஞர்  ஒருவரின்  வாழ்க்கையில்  நடந்த  உண்மை  சம்பவம்  தான்  இந்த  127 மணி  நேரம் .     இரண்டு  நீண்ட  மலைக்கு  நடுவில்  மாட்டிகொண்ட  இவர்  போராடிகொண்டிருக்கிறார்.    அதிலிருந்து  தப்பித்தாரா ? இல்லையா  என்பது  தான் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு இதில் படமாக்கி இருக்கிறார்கள் . சமீபத்தில் கூட கேரளாவில் ஒரு சம்பவம் குரும்பாட்சி மலையில் ஒருவர் சிக்கிக்கொண்டார் என செய்திகள் பார்த்து இருப்பீர்கள் . 43 மணி நேரம் பாபுவின் போராட்டங்கள் குரும்பாட்சியில் நடந்தது . சரி 127 மணி நேரத்திற்க்கு வருவோம் . 



யார் இந்த Aron Ralston ?

ஆரோன் ஒரு சாகச விரும்பி , ஏற்கனவே பல சாகச பயணங்களை மேற்கொண்டு இருக்கிறார் . தன்னுடைய வாழ்நாளில் மறக்கவே முடியாத சம்பவம் என்று ஒவ்வொருவருக்கும் நிச்சயம் எதாவது ஒன்று இருக்கும் . அப்படி இவருக்கும் நேர்ந்தது ஒரு சம்பவம் , உயிர் பிழைப்பதற்கான 127 மணி நேரங்கள் நடந்த போராட்டம் தான் அந்த மறக்கவே முடியாத சம்பவம் . பார்ப்பதற்கே எதோ பழக்கமில்லாத பாலைவனப் பகுதிகள் போலவும், எதோ பாறைகளின் வெடிப்புகள் மூலம் உருவான பகுதியாகவும் காட்சியளிக்கும் தென் கிழக்கு உட்டா என்ற பகுதியில் மலையேற செல்கிறார் அரோன். அரோனுக்கு இது ஒன்றும் புதிதல்ல அவர் ஏற்கனவே நிறைய மலைகளை ஏறி இருக்கிறார் . அவர் ஒரு மலையேறும் விரும்பி தான் . ஆனால் எதிர்பார்க்க முடியாத ஒன்று நடக்கிறது , தவறுதலாக விழுந்து பாறைக்குள் சிக்கிக்கொள்கிறார் அரோன்  .  ஒரு கை மட்டும் நன்றாக சிக்கிக்கொள்கிறது . இதிலிருந்து அவர் எப்படி மீண்டார் என்பது தான் இந்த திரைப்படம் . 


இந்த திரைப்படம் ஒரு சிலருக்கு டாக்குமெண்டரி போன்ற உணர்வை தரலாம் , ஆனால் உண்மையில் ஒரு Drama , சர்வைவல் திரைப்படம் . உண்மை சம்பவத்தை தழுவி ஒருவரை பற்றி எடுக்கப்பட்டதால் Biography பிரியர்களுக்கு பிடிக்கும்.  . எதிர்பாராத விதமாக எதாவது ஒரு  பிரச்சனையில் சிக்கிகொண்டு அதிலிருந்து மீண்டு வந்தார்களா? இல்லைய்யா? என்னும் Survaival Genre யில்  பல படங்கள் வந்துள்ளன. அதிலும் ஒரே ஒரு கதாபாத்திரம் ஒரே ஒரு லொகேஷன் வைத்து பல படங்கள் பிரபலம் .  எனக்கு மிகவும் பிடித்த படம் என்றால் அது Buried  தான். தூக்கத்தில் இருந்து நீங்கள் கண்  விழித்து பாக்கையில் ஒரு  சவப் பெட்டிக்குள் இருக்கிறீர்கள்  பிறகென்ன நடந்தது என்பதெல்லம் அந்த படத்தில் பார்த்துகோங்க. 


இது இல்லாமல்  சினிமா ரசிகர்களை கவர்ந்த இன்னும் சில  படங்கள் இருக்கிறது. . Buried  அதை போல Breake அப்புறம் All is Lost, 3096 Days , Green Room, Devil , Exam , Cube , Vacancy , 1408, Fermats Room , Against the sun ,Tunnel , and Hindi Movie Trapped  அதோட ஐடியா ஒரு ஜெர்மன் படம் Door ன்னு  பல படங்கள் உள்ளன . இந்த வகையில் பெரும்பாலான படங்கள் ,நடந்த உண்மை நிகழ்வுகளின்  சம்பவத்தை கொண்டு எடுக்கப்பட்ட படங்களால இருக்கும் உதாரணத்திற்கு மலையாள படமொன்று நிறைய பேர் பார்த்து இருப்பீர்கள் தமிழில் கூட அன்பிற்கினியால் என்று ரிமேக் செய்தார்கள் . அதுதான் Helen படம் இதிலும்  அப்படித்தான் மாட்டிக்கொண்டு தவிப்பது . ஆனால் பிரீசர் என்றொரு படமும் இதே போல உண்டு . ஆக உலகில் Survival என்ற கான்செப்ட் ஐ வைத்துக்கொண்டு பல சம்பவங்கள் நடந்தேறியிருக்கிறது . உயிர் வாழத்தானே இத்தனை இத்தனை போராட்டங்கள் . 


 இதற்கு முன்பு நீங்கள் இது தொடர்பான படங்களை பார்த்துள்ளீர்கள் என்றால் அந்த படங்கள் தந்த அதே பரபரப்பை இதுவும் இதுவும் தருமா என யோசனை செய்யாதீர்கள் . உண்மை சம்பவங்கள் வேறு கற்பனைகள் வேறு , ஆனால் கமர்சியல் த்ரில்லர் அனுபவத்தை நிச்சயம்  தராது என்பதை உறுதியாக சொல்கிறேன்  . பாதிக்கப்பட்டவரை அப்படியே நம் கண் முன் நிறுத்தி இருப்பார்கள் .  சொல்லப்போனால் நாமும் அவரோடு கூட இருப்பது போன்ற உணர்வாகி விடும் . 


நடிப்பையோ மற்ற சாமாச்சாரமாக எதையுமே குறை சொல்ல முடியாது . அதே நேரத்தில் இது உண்மை சம்பவத்தின் மூலம் எழுதப்பட்ட சுயசரித்ததின் புத்தகத்தை தழுவியது , ஒரு பரபரப்பான த்ரில்லர் படத்திற்க்கு ஈடான வேகத்தில் இருக்குமென நினைத்து பார்க்காதீர்கள் . ஒரு பயணம் சார்ந்த படம் சிக்கிக்கொள்கிறார் , மீண்டாரா இல்லையா என்பதை மட்டும் தெரிந்துகொண்டு பாருங்கள் . 


இயக்குனர் Danny Boyle பற்றி பலருக்கு தெரிந்திருக்கும் . இந்த இயக்குனரின் 28 Days Later என்ற படத்தை தான் முதன் முதலில் பார்த்தேன் , அது ஒரு ஜாம்பி திரைப்படம்  . அதற்கு பிறகு பிரபலமான Slumdog Millionaire திரைப்படம் . உலக அரங்கில் பலரின் பார்வைக்கு சென்றது இப்படம் . இதற்காகத்தான் இசைப்புயல்  ரஹ்மான் அவர்கள் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கினார் . இந்த 127 Hours படத்திற்கும் அவர்தான் இசையமைப்பாளர் . ராவணன் படத்தில் "உசுரே போகுது" பாடலில் ஒலிக்கும் அந்த பிண்ணனி இசையும் நீங்கள் 127 Hours படத்தில் கண்டுகொள்ளலாம் . 


இந்தியாவில் தற்போது Itunes மற்றும் Youtube இல் Rental எடுத்து பார்க்கலாம் . நன்றி 

Post a Comment

Previous Post Next Post