Fishing Without Nets (2014,Somalia) - Film Intro By Tamil | சோமாலியாவின் கடற்கொள்ளையர்கள்

வலை இல்லாமல் மீன் பிடிக்க செல்லும் சோமாலியர்கள் , இங்கே மீனுக்கு பதிலாக பணம் , எப்படி அந்தப்பணத்தை பிடித்தார்கள் என்பதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்  . கொள்ளையடித்தல் அல்லது கடத்தல் திரைப்படங்கள் பெரும்பாலும்  நாயக பின்புல மேற்பார்வையில் நகரும் ., ஆனால் இந்த திரைப்படம் கொள்ளையர்கள் பார்வையில் அந்த கூட்டத்தில் இருப்பவர்களின் பார்வையிலும் நகர்வது கவனிக்கத்தக்கது . ஏற்கனவே Escape From Mogadishu  என்ற கொரியப்படத்தை இந்த தளத்தில்  அறிமுகம் செய்யும் போதே சோமாலியா பற்றி நான் தெரிந்துகொண்ட சில விஷயங்களை சுருக்கமாக சொல்லி இருப்பேன்  . அந்தப்பதிவையும் தவறாமல் படிக்குமாறு உங்களுக்கு பரிந்துரைக்கிறேன் . 

A movie about Somali pirates told from their perspective


Escape from Mogadishu (2021, South Korea) - பதிவை படிக்க கீழே இணைப்பு உண்டு 


உலக சினிமாக்களை பொறுத்தவரை ஒரு குறும்படத்தின் முயற்சி விமர்சன ரீதியாகவும் சினிமா பிரியர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெறுகிறது , கூடுதலாக கவனிக்கப்படுகிறது என்றால் நிச்சயம் அதனின் Feature Film க்கான முன்னெடுப்பு அங்கேயே தொடங்கப்படும் . அப்படி தான் உருவாகிய குறும்படம் Sundance திரைப்படவிழாவில் விருதினை வென்று பிறகு முழு படமாக உருவானது  Fishing Without Nets என்ற திரைப்படம் . சோமாலியா மக்களின் கடற்கொள்ளையர்களை பற்றி ஒன்றிரண்டு திரைப்படங்களை ஏற்கனவே பார்த்து இருப்பீர்கள் . ஹாலிவுட் புகழ் கேப்டன் பிலிப்ஸ் நிச்சயம் பார்த்து இருப்பீர்கள் .இதுபோக Hijacking , The Pirates Of Somalia , Stolen Seas , Last Hijack , Pirates Tapes  இன்னும்  பிறகு பல டாகுக்மெண்டரி ,  செய்திகளில் கூட கடற் கொள்ளையர்கள் பிடிபட்டார்கள் , அல்லது கடத்தி சென்றார்கள் போன்ற பல செய்திகளை  பார்த்தும் கேள்விப்படும் இருப்பீர்கள் . இதிலும் அது தொடர்பாக தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது . 


பெரும்பாலான திரைப்படங்கள் கடத்தப்பட்டவரின் பார்வையிலோ அல்லது மீட்பு குழுவின் பார்வையிலோ படமாக்கப்பட்டு இருக்கும் , ஆனால் இந்த திரைப்படத்தில் சோமாலியர்கள் அதாவது கடற்கொள்ளையில் ஈடுபடுபவர்களின் பார்வையிலே முழு திரைப்படமும் நகர்கிறது . அவர்கள் எதையும் செய்ய துணிகிறார்கள் . இதுதான் பிளான் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஒரு சில விஷயங்களை தான் கடைபிடிக்கிறார்கள், மற்றதை போகிற போக்கில் நடக்க விடுகிறார்கள் . படத்தில் நடித்தவர்கள் யாரும் ஏற்கனவே சினிமாவில் நடித்து பழக்கப்பட்டவர்கள் இல்லை சோமாலியா பின்புலத்தை சேர்ந்த அந்த பகுதி அது சார்ந்த சிலரை இங்கே நடிக்க வைத்துள்ளார்கள் . ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் உங்களை நிச்சயம் ஈர்க்கும் . 

ஒருவித படப்படப்பான சூழலை ஆரம்பம் முதல் இறுதி வரை கையாளுகிறது . அதுபோக காட்சிப்படுத்தப்பட்ட விதமும் தனிப்பட்ட முறையில் ஈர்க்கிறது . ஆங்காங்கே வரும் பின்ணணி இசையும் , அதற்கேர்த்தார் போல காட்டப்படும் ஒளிப்பதிவும் அட்டகாசம் , குறிப்பாக நிறைய Wide Angle ஷாட் எல்லாம் நன்றாக காட்சிப்படுத்தப்பட்ட இருக்கிறது . 

உலக சினிமாக்களில் ஒவ்வொரு  நாடுகளிலிருந்து அரிதாக சில திரைப்படங்களை திரைப்பட விழாக்களில் தேர்வு செய்துள்ளார்கள் என்றாலே அந்த லிஸ்ட் ஐ தேடி பார்ப்பேன் . இதுவரை அப்படி நிறைய படங்களை  பார்த்து இருக்கேன் , ஒரு குறிப்பிட்ட நாட்டின் திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பு அவர்களின் பொருளாதார நிலை , கல்வி , வாழ்க்கை , என எதாவது  ஒன்றில் பின் தங்கி இருக்கிறார்கள் என்றாலே அவர்களின் திரைப்படங்கள் நிச்சயம் கவனிக்கப்படும் . அப்படி நான் பார்த்ததில் சோமாலியா நாட்டு படங்கள் மிகவும் கவனம் ஈர்த்தன .  அதில் எப்படியும் அந்தந்த நாடுகளை சேர்ந்த அதே கலாச்சார பின்ணணியை கொண்ட இயக்குனர்கள் தான் இருப்பார்கள் . அல்லது அந்த நாட்டிலிருந்து வெளியேறி அகதியாக வேறொரு நாட்டிற்க்கு குடி பெயர்ந்த சிலர் , அல்லது அது சம்மந்தப்பட்ட சிலர் எழுதியோ அல்லது இயக்கியோ  இருப்பார்கள் . இதுவரை நான் ஒரு பத்து திரைப்படங்கள் சோமாலியா நாட்டு சார்பில் பார்த்து இருப்பேன் .  ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் . சமீபத்தில் பார்த்த Gravediggers Wife , A Girl From Mogadishu  , Escape From Mogadishu மற்றும்  இதற்கு மேலும் நீங்கள் சோமாலியவை பற்றி தெரிந்துகொள்ள தமிழ் ட்ரக்கர் என்ற ஒரு Youtube Channel ஐ நேரமிருந்தால் பாருங்கள் . 


இந்த திரைப்படத்தை பார்க்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் முதலில் அந்த குறும்படத்தை பார்த்துவிட்டு இதனை பார்ப்பது நலம். இரண்டிற்கும் தொடர்ச்சியான பிணைப்பு அவ்வளவு  இல்லை ஆனால் அதனை பார்த்துவிட்டு இதனை தொடர்ந்தால்  நல்லது சிறப்பு . நான்  US - VPN பயன்படுத்தி VUDU தளத்தில் இலவசமாக பார்த்தேன் . and TUBI CA also , + Amazon Prime US + Plex IN


Escape from Mogadishu (2021, South Korea) - Film Intro By Tamil | சோமாலியர்கள் பிடியில் கொரியர்களின் வாழ்வா சாவா போராட்டம்

நன்றி 

Post a Comment

Previous Post Next Post