Anandi Gopal (2019,India) - Film Intro By Tamil | இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார் என்பதனை கூகிளில் தேடினால் ஆனந்தி ஜோஷி கோபால் ராவ் என்று தான் வரும் .  ஆனால் வருத்தமான செய்தி 22 வருடங்கள் மட்டுமே அவர் வாழ்ந்து இருக்கிறார் என்பதே. பள்ளி காலங்களில் முத்துலட்சுமி  ரெட்டி என்ற பெயர் தான் பலருக்கும் தெரிந்து இருக்கும் , இவங்க தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் , ஆனந்தி கோபால் அவர்களின் கதை பலருக்கு தெரியாது . பல வரலாறுகளை தெரிந்துகொள்ள இணையம் நமக்கு முழுமையாக உதவுகிறது , வேண்டுவோர் தேடிப்பாருங்கள் . இவங்களை  பற்றிய திரைப்படம் தான் இந்த  மராத்தி மொழிப்படம். 

Biopic on India's first female doctor Anandi Gopalrao Joshi.  Available On Zee5


ரெண்டும் கெட்டான் மூளக்காரன் வாழ்ந்து கொண்டிருக்கிறந்த அந்த  காலகட்டத்துல. நின்னா குத்தம். உக்காந்தா குத்தம் ன்னு ஊருப்பட்ட கலாச்சாரம் சார்ந்த வாக்கியங்கள் அங்கங்கே கேர்க்க முடியும். , இப்போதுமே நம் ஊர் சில பகுதிகளில் காண முடியும் . ஆனால் அந்த காலகட்டத்துல வாழ்ந்த சைக்கோ கலாச்சார காவலர்கள் எல்லாம் என்னென்ன ? வேலைகள் செய்து பலரை மனதளவிலும் உடல் அளவிலும் பாதித்து  இருப்பார்கள் என நினைத்து பாருங்கள் . சிறுவயதிலே திருமணம் , கடுமையான மத கட்டுப்பாடு , வழிபாட்டு உபசரங்கள் , சமூக அந்தரஸ்த்து ,  சமுதாயம் என்ன நினைக்கிறதோ அதுபடி தான் மக்களும் நடக்க வேண்டும். அவனுங்களா உருவாக்கின கலாச்சாரம் சார்ந்து தான் அனைவருக்கும் இயங்க வேண்டும் என பல கட்டளைகளுக்கு கீழ் மக்கள் இயங்கிட வேண்டும் . 


மக்கள் அதற்கு ஒத்துழைக்காத பட்சத்தில் அவர்கள் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். பெண்கள் சிறு வயதிலே திருமணம் செய்து கொண்டு கணவனுக்கு தேவையான அத்தனை உபகரணங்களையும் செய்து, குடும்பத்திற்காகவே வாழ்ந்து மாய்ந்திட வேண்டும். என எவனோ ஒருவன் நிர்ணயித்து விட்டுட்டதை நூல் பிடித்தார் போல செயல்படுத்தி வந்து கொண்டிருந்த கொடுமையான காலம் அது . அதை எல்லாம் உடைத்தெரிந்து அதே சமூகத்தில் எப்படி தன் மனைவிக்கு கல்வி முக்கியம். மனைவிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்கள் அனைவருக்கும் கல்வி முக்கியம். என முன்னிறுத்தி இந்த திரைப்படத்தினை எடுத்திருக்கிறார்கள். 



இதுபோன்ற படங்களை வந்ததும் போவதும் பலருக்கு தெரியாது , தரமான கேமரா  ஒர்க் அருமையான   எடிட்டிங் , மிகவும் சிறப்பான பின்னணி இசை மற்றும் பாடல்கள் , அதை விட கவனிக்கத்தக்க ஒரு விஷயம்  ஆர்ட் working அந்த காலத்தில் இருந்த வீடுகளையும் பொருட்களையும் கண் முன் நிறுத்தி விட்டார்கள்.முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் இருவரும் , மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதிலும் கணவனாக நடித்தவர் கலக்கிவிட்டார். மொத்தத்தில் நல்ல படம் ஒன்றை இந்த சினிமா பிரியர்கள் கொண்டாட தவற விட்டார்கள் என்பதே உண்மை. இந்த திரைப்படம் வெளியான புதிதில் முகநூல் நண்பர் ஒருவர் அருமையான படம் இன்றே கடைசி நாள் திரையரங்கில் பார்க்க முடிப்பவர்கள் பார்த்து விடுங்கள் என்றார் . நான் பெங்களூரில் இருந்து அவசர அவசரமாக ஒரு வேலை காரணமாக அன்று வெளியே சென்றுவிட்டதால் Zee 5 ல் வந்த பிறகுதான் பார்த்தேன் . 


என்னிடம் ஒரு சாதாரண ப்ரொஜெக்டர் ஒன்று இருந்தது அப்போது அமேசான் ல் 6000 ரூபாய்க்கு ஆபாரில் வாங்கியது . அதில் தான் திரைப்படத்தை பார்த்தேன் ஆனால் இதனை நாம் அகன்ற திரையில் பார்த்து இருந்தால் அந்த டீடைலிங் காட்சிகள் கூடுதலாக கவனித்திருக்க முடியும் , எனக்கு பெங்களூர் திரைப்பட விழா அந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தது . ஆமாம் மீண்டுமொரு பெரிய திரையரங்கில் பார்த்தேன் . படத்தின் குழுவும் அங்கே இருந்தார்கள் . படத்தின் முடிவில் பலரும் அதீத உணர்ச்சிவசப்பட்டு பலத்த  கைதட்டல் சத்தத்தை எழுப்பினார்கள் , சிலர் கண்ணீர் கூட விட்டாங்க , பாராட்டு  நிறைந்த படமாக இருந்தது . 



படம் பாருங்கள் உங்களுக்கே புரியும். படம் முடிந்து இறுதியில் கிரெடிட் சீன் வரும் பொழுது இந்திய முதல் பெண் சாதனையாளர்கள் பட்டியல் வரும். தவற விட்டு விடாதீர்கள் .  தமிழில் கூட முதல் பெண்கள் என்றொரு புத்தகம் இருக்கிறது . இந்த  படம் பார்த்து கொண்டு இருக்கையில் என்னுடைய ரூம் மெட் ஒரு கருத்தை சொன்னார் , இப்படியெல்லாம் புள்ளைங்க அவங்க நினைச்சதை செய்யறாங்க , நம்ப பெங்களூர் ல பாக்காததா என கூறினார் . நானும் ஓரளவிற்கு மாற்றம் தான் என்றேன் .. இது போன்ற கருத்துக்கள் தற்போது முற்றிலும் நீக்கப்பட்டு பெண்களுக்கு சக உரிமை கலாச்சாரம் பேச்சுக்கள் பாராட்டுக்கள் , அங்கீகாரம் என பல வற்றை வெல்கிறார்கள் . நல்ல வேலையாக வீட்டில் அடுப்படி வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது  . . அப்போது இருந்த Psycho Double Side Minded People க்கு இப்போ எவ்வளவோ பெட்டர் தான்  என்று சொல்கிறேன் .. படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்து என்ன ? என்பதனை பகிர்ந்தால் நலம் . 


உங்களுக்கு Sairat படத்தின் பாடல்கள் நிச்சயம் பிடித்திருக்கும் , அதே போல இந்த படப்பாடல்களும் உங்களுக்கு பிடிக்கும் . 

 Biopic on India's first female doctor Anandi Gopalrao Joshi.  

Available On Zee5 


நன்றி 

Post a Comment

Previous Post Next Post