Listen (2020,Portugal) - Film Intro By Tamil | சமூக ஆர்வலர்களிடமிருந்து குழந்தைகளை மீட்க பாசப் போராட்டம்

குழந்தைகள் நலன் சார்ந்து வரும் திரைப்படங்கள் எதாவது உண்டா என தேடுகையில் 2020 ல் வெளியான  திரைப்படங்களின் முன்னோட்டம் கவனம் ஈர்த்தது . ஒன்று Listen (2020)  & Oskar Lilli , Any Day Now (2020)  மற்றொன்று Father (2020) செர்பியா நாட்டு திரைப்படம் . அதில் Listen  திரைப்படம் மிக முக்கிமான ஒன்று . சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் ஆஸ்காருக்கு அனுப்பட்டு பிறகு நிகாரிக்கப்பட்டது . படத்தில் ஆங்கில வசனங்கள் அதிகமாக இருந்தது தான் காரணம் என்றும் சொல்கிறார்கள் , உண்மையில் மிக முக்கியமான விஷயத்தை பற்றி ஆராய்ந்து பேசியிருக்க கூடிய படம் .  ... வாய்ப்பு கிடைப்போர்  அவசியம் பாருங்கள் . குழந்தைகளின் நலன் அவர்களின் வாழ்வியல் குடும்ப பொருளாதாரம் எல்லாம் வளர்ந்த நாடுகளில் அதீதமாக கவனிக்கப்படும் . உதாரணத்திற்கு குறிப்பிட்ட சூழலில் குழந்தைகளை வாழ வைக்க முடியாத பட்சத்தில் , அவர்கள்  சொல்வதிலும் , உடல் மாறுபாடுகள் அல்லது எதாவது தனிப்பட்ட பிரச்சனைகளை கண்டறிவதிலும் அரசாங்கம் மும்முரம் செலுத்தும் .  அவர்களை அரசியல் சட்டப்படி அங்குள்ள குழந்தைகள் நலன் சமூக ஆர்வலர்கள் குடும்பத்திடம் இருந்து  பிரித்து இவர்களை வலுக்கட்டாயமாக அவர்களின் மேற்பார்வையில் கீழ் இயங்கும் மையங்களிலோ அல்லது குறிப்பிட்ட இடங்களில் வைத்து  கவனித்துக்கொள்வார்கள் . 


இது யாரோ ஒருவருக்கு ஏற்கனவே நடந்த சம்பவத்தின் பிரதிபலிப்பாக கூட இருக்கலாம், ஆனால் நடைமுறைக்கு சாத்தியமான சில கூறுகள் இதில் அடங்கியுள்ளன , போர்த்துகீசிய குடும்பம் மூன்று குழந்தைகளோடு  தற்போது லண்டனில் வசித்து வருகிறார்கள்.  அன்றாட வாழ்வில் பிழைப்பை நடத்த  அங்குள்ள பொதுப்பணி சுகாதார துறை மற்றும் வீட்டுப்பணி , என பணிபுரிந்து குடும்பத்தை பார்த்துக்கொள்கிறார்கள் . காது கேர்க்காத  தனது மகளை பள்ளியில் விட்டு வரும்போது , உங்களின் குழந்தையின் காது கேற்கும் கருவி செயல் படவில்லை மேலும் அவள் உடம்பில் சில மாறுதல்கள் தென்படுகிறது , வீட்டில் எதாவது பிரச்னை இருக்கலாம் , அதானல் இன்று சமூக குழந்தை நல ஆர்வலர்கள் பள்ளிக்கு வர இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது . அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள்,   அதற்கு பிறகு அவர்கள் தங்கள் குழந்தைகளை மீட்டார்களா இல்லையா குழந்தைகளுக்கு பின்னால் இருக்கும் கதை என்ன ??? என்பது  தான் இந்த திரைப்படம் .மேலே சொன்னதைப்போல Father (2020)  செர்பியா நாட்டுப் படமும் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று , கூடுதலாக Any Day Now 2020 என்ற படத்தையும் பாருங்க  இது ஈரானில் இருந்து பின்லாந்தில் வசிக்கும் மற்றுமொரு கதை இதிலும் சில காட்சிகள் கவனத்தை பெரும் . மேலும் ஆஸ்திரியா நாட்டு படமான Oskar & Lilli 2020 யும் பார்க்கவும்  .  Case 39 என்ற படத்தை பற்றி ஏற்கனவே நமது தளத்தில் பதிவு செய்து இருக்கிறேன் . ஆனால் அந்தப்படம் நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றை செய்யும் . நேரமிருந்தால் அதையும் பாருங்கள்  ,, அதுவும் குழந்தை நலன் ஆர்வலர் மற்றும்  குழந்தை சார்ந்த படம் தான் ஆனால் ஹாரர் கான்செப்ட் . 


குறைந்த மணி நேரங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்தப்படம் , அரசாங்கத்திற்கு எதிராகும் சமூகத்தின் பின்னணியில் நடக்கும் முக்கியமான விஷயத்தையும் பற்றி மேலோட்டமாக பேசுகிறது . இதுபோன்ற  கதைகளுக்கு உலக திரைப்படவிழாவில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட கவனம் இருக்கும் , அந்த வகையில் இந்த படத்தையும் பல சினிமா விரும்பிகள் கவனத்திற்கும் பார்வைக்கும் சென்றது . 


நன்றி .


தற்போது அமேசானில் காண கிடைக்கிறது . 

Post a Comment

Previous Post Next Post