Doineann (2021, Ireland) - Film Intro By Tamil | காணாமல் போன மனைவியும் கைக்குழந்தையும்

ஒரு நீண்ட ஐரிஷ் தீவில் தனது குடும்பத்தோடு வசிக்கும் நாயகன் புலனாய்வுத்துறை சம்மந்தமான விசாரணை பத்திரிகை துறையில் பணிபுரிகிறார் , ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர்  , குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பற்றிய இன்னொமொரு கோணத்தை புலனாய்வு செய்து  அதனை  கண்டறியும் வேலை . புதிதாக திருமணமான  இவருக்கு மனைவியும் சிறு கை குழந்தையும் உண்டு . அவருடைய மனைவிக்கு எதோ பிரச்னை இருப்பதாக கண்டுகொள்கிறார் , குழந்தை பெற்ற பிறகு அவள் அதீத  மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சொல்கிறார் . தான் எதை செய்கிறோம் என அவளுக்கு புரிவதில்லை எனவும் சொல்கிறார் .

Doineann 2021 | movies museum


ஒருநாள் இவர் பாத்ரூம்மில் குளித்துக்கொண்டு இருக்கும் போது அங்கே ரத்தம் வடிந்து கிடப்பதாக பார்க்கிறார் , கவனித்து பார்த்த பிறகுதான் புரிகிறது அது ரத்தம் இல்லை .  ஷேம்புக்கு பதிலாக கெட்சப் இருப்பதை பார்க்கிறார் . வீட்டில் பிரிட்ஜ் க்குள் அந்த கெட்சப் ற்கு பதிலாக ஷேம்பு இருக்கிறது  . மனைவி திடீரென அடிக்கடி  பதட்டமடைகிறாள் . கண்ணாடி டம்ளாரை தள்ளிவிடுகிறாள் , அதனை கையிலே எடுத்து கையயை கிழித்து ரத்தம் வரவைத்து கொள்கிறாள் , அடுப்பில் உணவு கருகி கொண்டு இருக்கிறது , குழந்தை அலறுகிறது . என்ன நடக்கிறது என புரியாமல் இருக்கிறார் கணவன் . 


அடுத்த நாள் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பையில் மனைவியையும் அவரது குழந்தையும் காணவில்லை . அவர்களுக்கு என்ன ஆனது எங்கே போனார்கள் , அந்த நாளில்  அதே தீவில் பயங்கரமான சூறாவளி காற்றுடன் மழை வர போகிறது . அந்த ஊரில் இருக்கும் முன்னாள் குற்ற பிரிவு விசாரணை காவல் அதிகாரி ஒருவரின் உதவிடியோடு புயல் வருவதற்குள்  இவரது மனைவியையும் குழந்தையையும் கண்டறிந்தார்களா என்பதே திரைப்படம் . நான் சொன்னது முதல் 20 நிமிடம் தான் அதற்கு பிறகு ஒரு மணி நேரம் 10 நிமிட காட்சிகள் இருக்கிறது .


Doineann என்பதுதான் இந்தப்படத்தின் தலைப்பு ஐரிஷ் மொழியில் புயல் அல்லது சூறாவளி என்று அர்த்தம் , காட்சிக்கு காட்சியாக திருப்பங்களை வைத்து , நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் படமில்லை இது என்பதனை கூறி விடுகிறேன்  , 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டில் வெளியான Mystery Road என்ற திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு பொறுமை எவ்வளவு அவசியம் என்று புரியும். அந்த படத்தில் நடக்கும் கொலைகளை விசாரிக்கும் ஒரு காவல் துறை அதிகாரியின் பார்வையில் நகரும்  . அதே நேரத்தில் கதைகளை தாண்டி காட்சிப்படுத்திய விதம் தான் எனக்கு மிகவும் பிடித்தது , அந்த ஊர் கிராமம் , நிலப்பரப்பு அதை எல்லாம் நமக்கு நம் முன்னே நிறுத்தி இருப்பார்கள் . அதே போல தான் இந்தப்படமும் . 


நீங்கள் ஏற்கனவே பல திரைப்படங்களை இந்த டெம்பிளேட் வகையில் பார்த்துள்ளீர்கள் என்றால் உங்களால் நிச்சயம் என்ன சம்பவம் நடக்க போகிறது என்பதனை  யூகிக்க முடியும் . மற்ற பரபரப்பான த்ரில்லர் படங்களோடு தொடர்பு படுத்தி பார்த்தல் இந்தப்படத்தை வெகு இயல்பான வகையில் நகர்த்தி இருப்பதாக புரிகிறது . கடைசி 30 நிமிடங்கள் கொஞ்சம் சுவாரசியமாய் கொண்டு சென்று  இருப்பார்கள் . பிண்ணனி இசையும் அயர்லாந்து நாட்டின் பரந்த நிலப்பரப்பு , கடல் சூழ்ந்த அந்த தீவு எல்லாம் கேமராவில் நன்றாக படம்பிடித்துள்ளார்கள் . நேரமிருக்கும் பட்சத்தில் ஒருமுறை நிச்சயம் பார்க்கலாம் . 


காணாமல் போகிற மகன் , மகள் அல்லது ,மனைவி கொண்டு தீவிர பின்புல கதைகள் , விசாரணை கதைகள் , பரபரப்பான கதைகள் என Netflix ல் ஏராளமான படங்கள் உண்டு , ஒவ்வொரு மொழியிலும் இதுபோன்ற கதையமைப்புகளை அவரர்களுக்கு ஏற்ற பாணியில் படமாக்கி இருப்பார்கள் . இதில் ஹாலிவுட் காரர்கள் கொஞ்சம் கெட்டிக்காரர்கள் தான்  .  ஏனென்றால் அந்தளவிற்கு அத்தனை முறையிலும் பூந்து விளையாடி இருக்கிறார்கள் . உலக சினிமாவை பொறுத்தவரை இது போன்ற கதைகள் ஒன்றும் நமக்கு புதிதல்ல , ஆனால் ஒரு த்ரில்லர் கதை ஒன்றை வைத்துக்கொண்டு அதனை ட்ராமா வாகவும் ஒரு பெஸ்டிவல் சினிமா தரத்திலும் தருவதில் தான் கெட்டிக்காரத்தனம் இருக்கிறது . அந்த வகையில் இந்த படத்தை பார்க்கலாம்



இந்தப்படம் தற்போது இந்தியாவில் எந்த OTT யிலும் இல்லை , நான் இதனை Festival Scope தளத்தில் , VPN உபயோகித்து  ஐரோப்பிய திரைப்படங்கள் இந்தோனேசியா விழாவில் பார்த்தேன் ..   . 

Post a Comment

Previous Post Next Post