கர்பமாக இருக்கும் நாயகி அந்த கருவை கலைக்க illegal abortion முறையை அனுகுகிறாள் , நடமாடும் ஒரு கிளினிக் ஐ நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா , ஆமாம் இங்கே ஒரு பெரிய ட்ரக் ஒன்றுதான் , சட்டத்திற்கு எதிரான கருக்கலைப்பை பணத்தை வாங்கிக்கொண்டு செய்து தருகிறது . தனிப்பட்ட காரணங்களுக்காக இதில் இறங்கும் நாயகிக்கு கடுமையான சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் . என்ன ஆனது என்பதுதான் இந்தக் குறும்படம் .
94 வது ஆஸ்காருக்கு குறும்படங்கள் பிரிவில் போட்டியிட்டு தேர்வான 15 ஷார்லிஸ்ட் பட்டியலில் இந்தப்படம் இடம்பெற்றது . ஆனால் இறுதி பட்டியலில் வரவில்லை .
பல நாடுகளில் இன்னும் கருக்கலைப்பு ஒரு கிரிமினல் குற்றமாக இருக்கிறது அப்படி இருந்தும் இந்த உலகில் அதனை இல்லீகல் முறைப்படி நடந்தேறுகிறது . இதுபோன்ற கதையில் இதற்கு முன் நான் பார்த்த 4 Months, 3 Weeks and 2 Days (2007) மற்றும் Happening 2021 இந்த இரண்டு படங்களும் மிக முக்கியமானவை . இந்த குறும்படமும் அவசியம் பார்க்கலாம் . உலக மொழிகளில் வெளிவரக்கூடிய நல்ல குறும்படங்களை இலவசமாக பார்க்கும் சேனல் ஒன்றை சொல்கிறேன் . Must Visit .
உங்கள் பலருக்கும் தெரிந்திருக்கும் தெரியவில்லை எனில் நிச்சயம் இது உங்களுக்கு பயன்படும் Omeleto என்றொரு youtube சேனல் இருக்கிறது . இந்த சேனலில் கிட்ட தட்ட 3.39M subscribers தற்போது உள்ளார்கள் . உலகத்தில் புதிதாக குறும்படங்களை உருவாக்குபவர்கள் பலரின் குறும்படம் இதில் உள்ளது . குறும்படங்களுக்கென பிரத்தியோகமாக உள்ள பக்கம் தான் இந்த Omeleto. இதில் இடம் பெற்ற எத்தனையோ படங்கள் சைலன்ட் ஆக பல விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது .
Channel Link : https://www.youtube.com/c/Omeleto
ஒரு டைம் ட்ராவல் ஷார்ட் பிலிம் ஒன்று முதலில் இந்த தளத்தில் வெளியாகி நல்ல வவேற்பை பெற்றது இறுதியில் சிறந்த ஆஸ்கார் குறும்படத்திற்கான விருதினை வென்றது அந்த படத்திற்கும் மாநாடு படமும் கிட்ட தட்ட ஒரு மாதிரி இருக்கும் . அந்த குறும்படம் ஆஸ்கார் வென்றதும் உடனே Netflix அதனை உடனடியாக வாங்கி வெளியிட்டார்கள் . இந்த Frimas குறும்படமும் முதலில் இந்த சேனலில் தான் வெளிவந்தது . அந்தப்படம் ஆஸ்காருக்கு ஷார்ட்லிஸ்ட் ஆனதும் நீக்கி விட்டார்கள் . உங்களின் ரசனைக்கு ஏற்ப பல குறும்பட பரிந்துரைகளை நீங்கள் இந்த சேனலில் காணலாம் . பயன்படுத்தி பயன்பெறுங்கள் .
இந்தப்படத்தை இந்த சேனலில் இருந்து நீக்கி விட்டார்கள் தேடி பாருங்கள் ஆன்லைனில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது .
நன்றி
Post a Comment