Case 39 (2009,USA) - Film Intro By Tamil | என்னது குழந்தை கொலை செய்ய வைக்குதா ?

சிறுவர்கள், குழந்தைகள்  சார்ந்த வன்முறை என்பது சில படங்களில் திருப்புமுனைகளாக கையாளப்பட்டு இருக்கும் , அதாவது இறுதியில் தான் அவர்கள் கொலை செய்தார்கள் என்று வரும் அதுவும் ஒரு ட்விஸ்ட் ஐ உடைத்ததற்கு சமம் தான், கிட்ட தட்ட இதுவே ஒரு குட்டி ஸ்பாய்லர் தான் என்பதை ஆரம்பத்தில் குறிப்பிட்டு விடுகிறேன்  . ஆகையால் படத்தை பார்ப்பதற்கு முன்பு அதன் முன்னோட்டத்தை பார்த்துவிட்டு தொடரவும் .  இந்த பதிவு உங்களுக்கு ஸ்பாய்லர் போன்றே இருக்கலாம் . அதனால் மேற்கொண்டு தொடருவது உங்களின் விருப்பம் . 




இந்த தலைப்பே உங்களுக்கு  ஒரு மாதிரி வியப்பை தரலாம் . குழந்தைகள் ,  எப்படி கொலை செய்வார்கள்? . அவர்களை வைத்து வன்முறை திரைப்படமா என்ற உங்களின் கேள்வி எனக்கு புரிகிறது . இருந்தாலும் இந்த சினிமா உலகில் இப்படியும் சில  திரைப்படங்கள் உள்ளன . இதனை ஹாரர் மற்றும் அதன் Subgenre துணை பிரிவுகளில் அடக்கலாம் . அதீத  ரத்தம் தெறிக்கும் காட்சிகள் , படபட வைக்கும் திகில் காட்சிகள் கொண்டும் இதுபோன்ற படங்களை இயக்கி உள்ளார்கள் ஆக  அதனோடு இந்தப்படத்தை தொடர்பு படுத்தி பார்த்தல் ஒரு லைட் வெர்சன் ஹாரர் த்ரில்லர் படம்தான்  , 

சொல்லப்போனால் Them , Eden Lake, Children  போன்ற படங்களை பார்த்து இருக்கீர்களா ? அது எல்லாம் கொடூரமாக இருக்கும் . இதுபோன்ற சிறுவர்கள் ,  குழந்தைகளை கொலைகாரர்களாக காட்டும் படங்கள் ஒருவிதத்தில் உங்களை மனதளவில் பாதிக்கலாம் அதனால் முன்பே சொல்லிவிடுகிறேன் இது சம்மந்தப்பட்ட ஹாரர்  படங்களை பார்ப்போர் மட்டுமே தொடரவும் .  



இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு த்ரில்லர் படமென்றால் அது இதுதான் . 

இங்கே பொது  சமூகத்தில்  குழந்தை , சிறுவர்  சிறுமியர்  வாழ்க்கை  மற்றும் குழந்தை நலன் சார்ந்த  சமூக சேவை கிட்ட தட்ட முக்கிய  பொறுப்பில் இருக்கும் எமிலி என்ற  நாயகியின் பார்வைக்கு ஒரு பிரச்சனை வருகிறது . பள்ளிகளில் அதிக நேரம் தூங்குகிறாள் லிலித் , எதோ ஒரு வெளியே சொல்ல முடியாத பிரச்சனைக்குள் இருக்கிறார் போல இந்த   சிறுமி , இதனை விசாரிக்கும் பொறுப்பில் எமிலி நியமிக்கப்படுகிறார் . பெற்றோர்களை விசாரித்தால்  அதெல்லாம் ஒன்றுமில்லை என சாதாரணமாக முடிகிறது . 

பிறகு தீடீரென இரவு நேரம் லிலித்திடமிருந்து   ஒரு அழைப்பு வருகிறது . அந்த அழைப்பிற்கு பிறகு அலறி அடித்துக்கொண்டு ஓடும் எமிலி அங்கே நடப்பதை உங்களால் நம்ப முடியாது பெற்றோர்களே குழந்தையை  அடுப்பில் போட்டு கதவை மூடி எறிக்க பார்க்கிறார்கள் . இதற்கு பிறகு என்ன ஆனது .. என்பதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் . எளிதில் யூகித்து விடக்கூடிய கதையம்சம் தான் ஆனால் ஒருமுறை பார்க்கலாம் . 

தற்போது Netflix ல் காணக்கிடைக்கிறது . வேண்டுவோர் பார்க்கலாம் . 

Post a Comment

Previous Post Next Post