புத்தகத்தை மைய்யப்படுத்தி வந்த சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம் . இன்னுமே நம்ப ஊர் சைடு எல்லாம் "பூனை" குறுக்கால போயிடுச்சுன்னா நேரம் சரியில்லை ன்னு சொல்வாங்க . அப்படி ஒரு பூனையால வந்த பிரச்னை தான் நாயகனை வச்சு செய்யுது .
“Beat me at chess and I’ll let you leave”
எதிர்பாராத விதத்துல நடந்த ஒரு சிறிய விபத்து , உதவி கேட்டு போற இடத்துல ஒரு சைக்கோ குடும்பத்துக்கிட்ட மாட்டிக்கொள்கிறார் நாயகன் . குடும்பமே சைக்கோவா ? இல்லை . அப்புறம் எப்படி ? சைக்கோ குடும்பம் ன்னு பார்க்கும் போது புரியும் . ஆரம்பத்துல கொஞ்சம் நல்ல சைக்கோவா இருக்காரே. டைமுக்கு டைம் சாப்பாடு லாம் குடுக்கறார் ன்னு பார்த்தா போக போக அவரோட பிடிவாதம் வெறி எல்லாம் வெளிய கொஞ்சம் கொஞ்சமா வருது . வராதா பின்ன ..... உள்ளே சில மர்மங்கள் உள்ளதை கண்டு கொள்கிறார் நாயகன் .
சுவாரசியமான விஷயங்கள் உள்ளன . சொன்னால் நீங்கள் பார்க்கவேண்டிய நேரமும் மிச்சமாகி விடும் என்பதனால் ஷார்ட் ஆ முடிச்சுக்கலாம் . "செஸ் விளையாட்டில் பல சேம்பியன் பட்டங்களை
வென்ற சைக்கோ,
மாட்டிக்கொண்ட நாயகனுக்கு .. ஒரு சவாலை முன் வைக்கிறார்" ...
அதவாது நீ! என்னை ஒரே ஒரு முறை வீழ்த்தி விட்டால்!.. ஒரே ஒருமுறை மட்டும் வீழ்த்தி விட்டால் . உன்னை உயிரோடு விட்டு விடுகிறேன் என்கிறார் ..
உயிரோடு மீண்டு வந்தாரா? என்பதை சுவாரசியமாக சொல்லி இருக்கிறார்கள். படம் Youtube உள்ளது . ஹாரர் த்ரில்லர் மற்றும் சைக்கலாஜிக்கல் திரைப்பட விரும்பிகள் பார்க்கலாம் one time. .
Post a Comment