ஆரம்பத்தில் எனக்கு சினிமாவில் மிகவும் பிடித்ததே Action , Horror தான் ஆக்சன் க்கு ஜாக்கிசான் தான் முக்கிய காரணம் , அன்றிலிருந்து இன்றுவரை தற்காப்பு கலைகள் சார்ந்த படங்களில் சிறந்த நட்சத்திரம் fav என்றால் அது இவர்தான் . தற்காப்பு கலைகள் மூலம் வெளிவரும் எத்தனையோ சண்டை படங்களை பார்த்திருக்கிறேன் . அதிலும் A Golden Harvest Presentation அந்த நான்கு கட்டங்களும் , டங் டங் டங் டங் பின்னணி இசையும் வாழ்நாளில் என்றும் மறக்காது , உலகில் இன்றளவும் Asian ஹாரர் படங்களை அடித்துக்கொள்வதற்கு வேறு யாருமில்லை . அதற்குப்பிறகுதான் ஹாலிவுட் படங்கள் எல்லாம். டப்பிங் படங்களை பார்க்க ஆரம்பித்து இன்று Subtitles துணையோடு உலகில் எந்த மூளையில் வெளிவரும் படத்தையும் பார்க்கிறேன் .
இதுபோன்ற படங்களுக்கு தனித்துவமான Fan Following உலக அளவில் உள்ளன . ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை படபடப்பில் வைத்துக்கொண்டிருக்கும் சாமர்த்தியம் "ஆக்சன்" படங்களுக்கு உண்டு . ஜாக்கிசான் முதல் ஆங்கில ஹாலிவுட் டாம் குரூஸ் இந்தோனேசியன் Iko Uwais வரை பல ஆக்சன் திரைப்படங்களில் பொதுவாகவே கையாளப்படும் ஒரே பார்முலா கதை சொல்வதை கொஞ்சமாகவும் அதிரடி ஆக்சன் மூலம் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைப்பது அதிகமாகவும் இருப்பது தான் . நம் நாட்டிலும் அத்தி பூத்தார் போல அப்பப்ப சில ஆக்சன் அதிரடி திரைப்படங்கள் வருவதுண்டு , ஆனால் கதை இல்லை , எமோஷன் இல்லை, பாசமில்லை , பாடல் இல்லை என பல ரசிகர்களால் இந்த ஆக்சன் Genre காமெடி Spoof போல் ஆகிவிட்டது . தெலுங்கில் பாலகிருஷ்ணா பத்து பேரை பந்தாடி புவியீர்ப்பு விசைக்கு எதிராக செய்யும் சாகசமெல்லாம் கைதட்டி ரசித்து கொண்டிருக்கும் மக்களுக்கு, இன்னுமொரு 100 வருடங்கள் தேவைப்படலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன் . கைதி , விக்ரம் பார்த்த பிறகு கமர்ஷியலாக நல்ல ஆக்சன் படங்களை நிச்சயம் இயக்குனர் லோகேஷை நம்பலாம் என்ற நம்பிக்கை கூடி இருக்கிறது . சரி இந்த லிஸ்ட் ல் நான் பார்த்து ரசித்த , என்னை தனிப்பட்ட முறையில் கவர்ந்த ஒரு 7 இந்தோனேசியன் ஆக்சன் திரைப்படங்களை அறிமுகம் செய்கிறேன் .
ஆக்சன் சண்டை பட பிரியர்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல 7 திரைப்படங்கள் இருக்கும் . ஐந்து படங்கள் Martial Arts சம்மந்தப்பட்டது அல்லது Iko Uwais படங்களாக இருக்கும் இரண்டு வேறுபட்டது ஆனால் Action பிரியர்களுக்கு பிடிக்கும் . இதுபோல திரைப்படங்களை பார்ப்போர் மட்டுமே பின் தொடரவும் , அதீத வன்முறை , தெறிக்கும் ரத்தம் நிறைந்த காட்சிகள் பல இருக்கலாம் . குறிப்பாக வயது வந்தோருக்கானது 18+ . கவனத்தில் கொள்க பார்த்தே தீர வேண்டும் என்பதில்லை .. இதுபோல படங்களும் உண்டு . மேற்படி உங்கள் விருப்பம் . இந்தோனேசிய ஆக்சன் திரைப்படங்கள் மீது தனிப்பட்ட விருப்பம் எனக்கு உண்டு . ஒவ்வொரு படங்களும் ஒவ்வொவொரு விதம் சில படங்கள் சுவாரஸ்யமாக செல்லும் சில ஆக்க்ஷன் அதிரடியாக இருக்கும் . இதெல்லாம் ஆகச்சிறந்த படங்களா என என்னை கேட்டால் எனக்கு தெரியாது ஆனால் என்னளவில் என்னை கவர்ந்த படங்கள் . நீங்கள் விரும்பினால் ட்ரைலர் பார்த்துவிட்டு படங்களை பாருங்கள் ஒரு சில படங்கள் எங்கே காண கிடைக்கும் போன்ற தகவலை படத்தின் சிறிய அறிமுகத்தின் கீழ் தந்துள்ளேன் .
#SomeRandomPicks
ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்சன் அதிரடியான 7 திரைப்படங்கள் - இந்தோனேசியன்
அதென்ன 7 ?
உங்களின் கேள்வி புரிகிறது . 7 சும்மா எனக்கு ராசியான எண் , ஆக அதனை முதலில் தொடங்கலாம் என வைத்தேன் . வரும் நாட்களில் Top List , 3, 5 10 , 50 , 100 ஏன் ஒரு 500 , 1000 திரைப்படங்களுக்கு கூட லிஸ்ட் போடுகிறேன் Ok..
7.Killers 2014 ‘キラーズ’ Directed by Timo Tjahjanto, Kimo Stamboel 18+
டார்க் வெப்பில் நடக்கும் பல கொடூரங்களில் ஒன்று , நாம் செல்லவே கூடாத தளம் என்று கூட சொல்லலாம் . உலகில் இருண்ட பக்கங்களை கொண்ட பல சீரியல் சைக்கோ கில்லர்கள் தங்களின் சுயத்திற்காக அவர்கள் செய்யும் சில வித்தியாசமான செயல்களையும் , கொலைகளையும் வீடியோவாக எடுத்து அதனை பதிவேற்றுவதுதான் . அதனை காண லச்சக்கணக்கான சைக்கோ பிரியர்கள் இருப்பார்கள் . இப்படி துன்புறுத்தி வீடியோ பதிவிடும் ஒரு சைக்கோவை பார்த்து இன்னொருவனும் (இந்தோனேசியா சேர்த்தவன்) கிளம்புகிறான் என்ன ஆனது என்பதுதான் இந்தப்படம் . ஆமாம் இந்தப்படம் ஒரே ரத்தக் கறையாச்சே என உங்களின் Mind Voice கேற்கிறது , Action உம் இருக்கிறது . அதனால் தான் இறுதியான 7 வது இடத்தில இணைத்தேன் . ஜப்பான் , இந்தோனேசியா Cut , UnCut என உள்ளது . இதுபோன்ற படங்களை பார்ப்போர் மட்டுமே பாக்க்கலாம் . . இந்தப்படம் இந்தியாவில் எந்த "OTT" யிலும் இல்லை வேண்டுமானால் "VPN" பயன்படுத்தி TUBI TV US , மற்றும் TUBI TV CA காணலாம் .
6.Gundala 2019 Directed by Joko Anwar
TIFF ல் திரையிடப்பட்ட இந்த திரைப்படம் பிரமபாலான காமிக்ஸ் ஐ தழுவி எடுக்கப்பட்டது , வரும் காலங்களில் மற்ற சூப்பர் ஹீரோ படங்களை போல ஒரு Cinematic Universe ஐ உருவாக்கலாம் , சூப்பர் ஹீரோ கான்செப்டில் இந்தோனேசியாவில் வெளிவந்துள்ள படம்தான் இது . ஆக்சன் கலந்த தனித்துவமான திரைப்படம் . சண்டை காட்சிகளெல்லாம் Martial Arts கலந்து சூப்பர் ஹீரோ வைத்து அசத்தி இருப்பார்கள் . மின்னல் முரளி பார்த்து பிடித்தவர்கள் அவசியம் இதனை பார்க்கவும் . இந்தப்படம் இந்தியாவில் எந்த "OTT" யிலும் இல்லை வேண்டுமானால் "VPN" பயன்படுத்தி TUBI TV US , மற்றும் TUBI TV CA காணலாம் .
5.Headshot 2016 Directed by Timo Tjahjanto, Kimo Stamboel
கடந்த காலத்தில் நடத்த சம்பவங்களால் பழைய நினைவுகளை மறந்து கோமாவில் இருக்கும் நாயகன் நல்ல நிலைக்கு திரும்பும் சமயத்தில் மீண்டும் பழைய பிரச்னை ஒன்று அவரை துரத்த ஆரம்பிக்கிறது . வழக்கம் போல அதே ஆக்சன் அதகளம் தான் , வன்முறைக்கு பஞ்சமில்லாத இந்தப்படத்தியும் நீங்கள் அவசியம் பார்க்கலாம் . இந்தப்படம் Netflix இந்தியாவில் காண கிடைக்கிறது .
4. Merantau 2009 Directed by Gareth Evans
Iko Uwais வின் Raid 1 , 2 பார்த்த பிறகு அவரின் முதல் படத்தை தேடி பிடித்து பார்த்தேன் கிரமத்தில் இருந்து நகரத்திற்கு செல்லும் நாயகனுக்கும் , அங்கே பெண் கடத்தல் கும்பலுக்கும் இடையே நடக்கும் அதிரடி ஆக்சன் தான் கதைக்களம் . சாதாரண கதையில் ஆக்சன் அதகளம் செய்திருப்பார் . இதெல்லாம் அவசியம் பார்த்து ரசிக்கலாம் ,
இந்தப்படம் இந்தியாவில் எந்த "OTT" யிலும் இல்லை வேண்டுமானால் "VPN" பயன்படுத்தி TUBI TV US , மற்றும் TUBI TV CA காணலாம் .
3. The Night Comes for Us 2018 Directed by Timo Tjahjanto
மாற்று சினிமாக்களை ரசிப்பவர்கள் பெரும்பாலும் ஆக்சன் சினிமாக்களை, குப்பை நேர விரயம் ன்னு கடப்பவர்கள் உண்டு. ஆதலால் இதனை நீங்கள் கடந்துவிடுவது நல்லது. Blood Horror கேள்வி பட்டு இருப்போம் , Slasher type killer type . அதுப்போல Blood Action, Gory violence Movies கேள்விப்பட்டு இருக்கீர்களா ?? தரையில் காலை தட்டினால் கீழே இருப்பவன் சுழன்று உழுவான் அதுதான் ஆக்சன் நம் மூர் ஆக்சன் ன்னு இருப்போர் , அதை விடுங்க. இதை பாருங்க. . நம்பலாமா? போலித்தனம் இருக்கே ? ன்னு தீர தேடலில் இறங்காமல் அதே நேரத்தில் கதையை தேடாமல் இந்த படத்தை பாருங்கள் . அதிரடி யுத்தம் அத்தனையும் ரத்தம் .. தாராளமா ஒருமுறை பாக்க கூடிய ஆக்சன் படமே , அட்டகாசமா இருக்கும். எனக்கு அமெரிக்க ஆக்சன் படங்களை விட இதுபோல படங்கள் பிடிக்கும்.
இந்தப்படம் Netflix இந்தியாவில் காணக்கிடைக்கிறது .
2. The Raid 2 2014 ‘The Raid 2: Berandal’ Directed by Gareth Evans
இந்தப்படம் இரண்டு தொடர்ச்சிகளை உள்ளடக்கியது . ஆமாம் இரண்டாம் பாகமான இந்தப்படம் பல ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை . ஆக்சன் படத்தில் எதை தேடினார்களோ . இதனாலே மூன்றாம் பாகம் எடுப்பது இன்றளவும் தள்ளிப்போனது . நேரம் கூடுதலாக இருந்தாலும் கடைசி க்ளைமேக்ஸ் எல்லாம் சும்மா தாறுமாறாக இருக்கும் . தற்போது இந்தியாவில் அமேசான் பிரைமில் காணக்கிடைக்கிறது . தமிழ் மொழியிலும் உண்டு .
1. The Raid 2011 ‘Serbuan maut’ Directed by Gareth Evans
தி ரெய்ட் என்ற இந்த அதிரடி திரைப்படத்தைத்தான் நான் முதல் முதலில் இந்தோனேசியன் நாட்டிலிருந்து பார்த்தேன் . ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே பில்டிங் ல் பெரும்பாலான காட்சிகளில் சிங்கிள் லொகேஷனை வைத்துக்கொண்டு தெறிக்க விட்டு இருப்பார்கள் ,. ஜாக்கிசான் , ஜெட்லீ , Donnie yen வரிசையில் Iko வை எனக்கு அறிமுகப்படுத்தியது இந்தப்படம் தான் . தற்போது இந்தியாவில் அமேசான் பிரைமில் காணக்கிடைக்கிறது . தமிழ் மொழியிலும் உண்டு . ஆரம்பம் முதல் இறுதி வரை சும்மா Fire ஆக இருக்கும் .
--------------------------------------------------------------------------
இதிலுள்ள படங்களை தேடினால் கிடைத்துவிடும் . ஒருவேளை கிடைக்காத பட்சத்தில் இங்கே கேக்கலாம் .
எங்கே கிடைக்கும் இந்தப்படம் ?? Where To Watch
ரத்தம் தெறிக்கும் Most Gruesome, Most Violent, Most Bloddy Brutal Killing ,Action Thriller #Films என முகநூலில் அவ்வப்போது சில லிஸ்ட்களை பகிர்ந்துள்ளேன் . அந்த வகையில் இந்த தளத்தில் தொடர்ந்து சினிமா பட்டியல்களை நீங்கள் பெறலாம் . விருப்பமுள்ளவர்கள் Share செய்து ஆதரவை தரலாம் நன்றி .
Post a Comment