அதிக உயரத்தை கண்டால் இன்றளவும் எனக்கு கால்கள் தானாக நடுங்கும் சிறிய படபடப்பு இருக்கும் . ஆனாலும் "உயரம்" பிடிக்கும் . உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் உயரத்தை , எப்படியாவது அட்லீஸ்ட் வாழ்வில் ஒருமுறையாவது ரசித்து பாக்க தான் விமான பயணமே செய்தேன் . உயரத்தில் இருந்து கொண்டு இயற்க்கையை பார்த்து மனதிற்கு நெருக்கமான ஒன்றை நினைத்தாலோ அல்லது விரும்பினாலோ அது சொல்லில் அடக்கமுடியாத வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சியை தருவதாக உணர்கிறேன் .
இதெல்லாம் சாதாரணம் இதுக்கு பில்டப் ஹா என நினைத்தால் நீங்கள் உண்மையிலேயே ரசிக்க வேண்டிய சிலவற்றை தவறவிட்டீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும் . நமக்கு கிடைக்காத ஒன்றை கற்பனை செய்து பார்ப்பதெல்லாம் ஒருவித ரசனை , அதிக உயரத்தில் இதனை நினைக்கும் போது கூடுதல் ஆர்வமாக இருக்கும் . இந்தக் குறும்படம் பார்த்தபிறகு எனக்கு சில நினைவுகள் மீண்டும் வந்தன . சரி ஷார்ட் பிலிமிற்கு வருவோம் .
சிரியாவில் இருந்து லெபானிற்கு அகதியாக குடியேறிய நாயகனுக்கு ஒரு வேலை கொடுக்கப்படுகிறது . அதாவது உயர்ந்த கட்டிடத்தின் மேல் இருக்கும் Crane ஐ இயக்குவது தான் அந்தப்பணி , அங்கே செல்வதற்கு முன்பே கடும் பதட்டத்தில் தான் இருக்கிறார் . வாக்கி டாக்கியில் அழைத்து ஒரு பிரச்னை இருக்கிறது உங்களோடு சொல்ல வேண்டும் நீங்கள் இருக்கிறீர்களா என சிலர் கேக்கிறார்கள் . இவரிடமிருந்து பதிலில்லை என்ன ஆனது அங்கே என்ன நடந்தது என்பதுதான் இந்த 15 நிமிட குறும்படம் .
பெங்களூரு வந்த புதிதில் ஆங்காங்கே பெரிய பில்டிங்களின் மேல் நிறுத்தி வைக்கப்பட்ட கிரேன்களை இயக்கி கொண்டிருப்பவர்களை பற்றி சில சமயம் நினைத்திருக்கிறேன் . அது தொடர்பாக எதாவது படங்கள் இருக்கிறதா பிறகு தேடி பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன் , இப்போது ஒரு குறும்படமும் பார்த்துவிட்டேன் . நான் நினைத்த மாதிரியே ஒரு அழகான குறும்படமிது .
2022 ஆம் ஆண்டு நடந்த Sundance Film Festival ல் ஷார்ட் பிலிமிற்கான ஜூரி அவார்ட் ஐ வென்றிருக்கிறது . இதுபோக முக்கியமான உலக திரைப்பட விழாக்களான Rotterdam , Sxsw, Palm spring , San Francisco , Inside Out Torranto , LGBT Short Film Fest என பல விழாக்களில் பங்குகொண்டு கவனம் ஈர்த்துள்ளது .
தற்போது இந்தியாவில் எந்த OTT யிலும் இல்லை உங்களுக்கு VPN உபயோகிக்க தெரியும் என்றால் France கனெக்ட் செய்துவிட்டு . Arte தளத்தில் இலவசமாக காணுங்கள் . நம்மை எங்காவது விரும்புகின்ற ஒரு உயரத்தில் அல்லது இடத்தில் நமக்கு நெருக்கமான மகிழ்ச்சியை கட்டவிழ்த்து விட்டு பாருங்கள் . அது தரும் அலாதியான இன்பம் நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாய் இருக்கும் .
நன்றி
Post a Comment