The Insult (2017, Lebanon) - Film Intro By Tamil | Ayyappanum Koshiyum , Driving License, FAN ஐ தூக்கிச்சாப்பிடும் ஒரு லெபனான் படம்

ஒருவருக்கு ஒருவர் முட்டிக்கொள்ளும் ஈகோ க்ளாஷ் திரைப்படங்களை இந்திய திரைப்பட சினிமா ரசிகர்கள் பலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறன் . மலையாள சினிமா இயக்குனர்கள் அதில் கெட்டிக்காரர்கள் அந்த வகையில் பல படங்களை கொடுத்திருக்கிறார்கள் . இருந்தும்  சொல்லும்படியாக ஐயப்பனும் கோஷியும் , டிரைவிங் லைசென்ஸ் , ஹிந்தியில் ஷாருக்கான் நடித்த Fan படங்களை குறிப்பிட்டு  சொல்லலாம் . ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு லெபனான் நாட்டில் வெளிவந்த ஒரு படம் இருக்கிறது . அதில் சமூக  அரசியல் மற்ற நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த  பொது மக்களின் வாழ்வியல்  நிலைப்பாடுகள்  முக்கியபங்காற்றி இருக்கும் . அவர்களுக்கான அரசியல் சட்டங்கள் குறித்து தேடிப்பாருங்கள் ஆச்சர்யமாக இருக்கும் . 



லெபனான் நாட்டு சார்பாக ஆஸ்காரில் இறுதி ஐந்து நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றது ஆனால் வெற்றிபெறவில்லை . இறுதியில் A  Fantastic Woman என்ற படம் வென்றது . இதுவே துருக்கி மற்றும் ஈரான் நாடுகளில் இதுபோன்ற கதையமைப்பை வெகு இயல்பாக கையாளுவார்கள் . உதாரணத்திற்கு Between Two Dawns , Separation , Salesman  போன்ற படங்களை சொல்லலாம் . 30 ற்க்கும் மேற்பட்ட பல முக்கியமான உலக திரைப்பட விழாக்களில் பங்குகொண்டு , சிறந்த நடிகர் , இயக்குனர் , சிறந்த படம் இன்னும் மேலும் ,  குறிப்பிடத்தகுந்த பல விருதுகளை வாங்கியுள்ளது .  சரி இப்போது இந்த லெபனான் நாட்டு படத்திற்க்கு வருவோம் .


பாலஸ்தீனிலிருந்து அகதியாக லெபனானில் குடியேறி சாலைப்பணியில், மற்றும் பொதுப்பணியில்  இருக்கும் ஒருவருக்கும் , பெய்ரூட்டில் வசிக்கும்  ஒரு கிறித்துவருக்கும் ஏற்படும் சிறிய  சம்பவம்  ஒன்று , அதாவது பேசி தீர்த்துக்கொள்ளக்கூடிய சாதாரண சிறிய பிரச்சனை தான் , அது ஊதி ஊதி பூதாகரமாகி  கோர்ட் வரை இழுத்துச்சென்றால் எப்படி இருக்கும் . அதுதான் இந்த திரைப்படம் . ஒவ்வொரு காட்சியும் அட்டகாசமாய் படமாக்கி இருப்பார்கள் . குறிப்பாக அவ்வளவு இயல்பான நடிப்பில் கோர்ட் சீன் எல்லாம்  நம்மை ஆச்சர்யப்பட வைப்பார்கள். . 


வாழ்நாளில் நான் பார்த்த அதி அற்புதமான படங்கள் லிஸ்ட் ல் கண்டிப்பாக இடம்பெறக்கூடய படம்தான் தி இன்சல்ட். அந்த நாட்டின் அரசியல் சூழல் வேறு , ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவருக்கும்.வேறொரு நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து இங்கு வந்து வேலை பார்க்கும் ஒருவருக்கும் ஒரு பிரச்சனை வருகிறது? என்றாலே அவர்களுக்கான வரையறுக்க பட்ட சட்டங்கள் எல்லாம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும் . Antigone 2019 என்ற பிரெஞ்சு மொழி படத்தை எத்தனை பேர் பார்த்தீர்கள் என தெரியவில்லை , மற்றும் Acusation என்று கூட 2021 ல் ஒரு படம் இதெல்லாம் புலம்பெயர்ந்தவர்கள் பிரச்னை பேசும் படம் . நேரமிருந்தால் தேடிப்பிடித்து இதையும் பாருங்கள் .  


சரி இந்த லெபனான் படத்தில் இருவருக்கும் அது என்ன பிரச்சனை? , இருவருக்கும் என்ன ஆனது ?. முக்கிய கரு என்ன? கதை என்ன? என்பதெல்லாம் நீங்கள் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்  .சுர்ருன்னு கோவம் வருவோர், பழைய பழி தீர்க்க நினைப்போர்.. சின்ன சின்ன சண்டைக்கு பெரிய வம்பை கொண்டு வந்து விடுவோருக்கு என காட்சிக்கு காட்சி பட்டய கிளப்பி இருக்கிறார்கள்..அப்படி விடுவோருக்காகவே பார்த்து பார்த்து  செதுக்கிய படமாக இதனை சொல்லாம் ..காலங்காலாமா நீங்க உலக சினிமாவுக்கு ன்னு ஒரு க்கு வச்சி வரையறுக்கும் அதே நியதி தான் இதுக்கும் . பொறுமை அவசியம். கோர்ட் சீன் காட்சிகள் அட்டகாசம். குறிப்பா கேமரா ஒர்க் 👌நன்றாக இருந்தது  . இதுபோல கதையை  வைத்துக்கொண்டு அதில் சுவாரசியமான விஷயங்களை தெளிவுபடுத்துவது என்பது சாதாரண காரியமில்லை . அதனை இயக்குனர் கையாண்ட விதம் எனக்கு பிடித்திருந்தது . 

நன்றி 

Now Not Available At India For Streamings , If you know how to use VPN and u  want to watch u can Try TUBI TV US , and MUBI TR

அடுத்த பட அறிமுகத்தில் சந்திப்போம் . தொடர்ந்து ஆதரவு கொடுத்தால் தான் எனக்கு அடுத்தடுத்த சுவாரசியமான உலக சினிமாக்களை பார்த்து அறிமுகம் செய்ய உந்துதலாக இருக்கும் . பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள் பலரை சென்றடையும்.. மீண்டும் நன்றி 



Post a Comment

Previous Post Next Post