சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள் பிரிவில் போட்டியிட ஆஸ்காருக்கு இந்தமுறை 93 படங்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டு இறுதியில் 92 படங்களை போட்டியில் தேர்வு செய்துள்ளார்கள் . அதில் பதினைந்து படங்களை 21 Dec அன்று ஷார்ட்லிஸ்ட் செய்து வெளியிடுவார்கள் . பிறகு அதில் ஐந்து திரைப்படங்கள் நாமினேஷன் செய்யப்பட்டு ஒரு திரைப்படம் மட்டுமே இறுதியில் வெற்றி பெரும் .
ஆஸ்கார் திரைப்பட விருதுகள் குறித்து பலருக்கு பல வித அபிப்பிராயங்கள் எண்ணங்கள் இருக்கும் கூடுதலாக அதனை சிலர் கண்டுகொள்ளவே மாட்டார்கள் . ஆனால் நான் இந்த வெளிநாட்டு பிறிவில் இடம் பெரும் ஒவ்வொரு படங்களை தேடி பிடித்து பார்த்தே தீர முயல்வேன் . காரணம் ஒவ்வொரு நாட்டிலிருந்து ஒரே ஒரு சிறந்த படத்தை மட்டுமே தேர்வு செய்து அனுப்பப்படும் பட்டியல் நிச்சயம் கவனிக்கத்தக்க ஒன்று . அந்தர்வாகியில் ஒவ்வொரு வருடமும் எப்படியும் 75 படங்களையாவது பார்த்துவிடுவது வழக்கம் .
இந்த முறை கலந்துகொண்ட 93 படங்களில் 80 படங்களை என்னால் சமீபத்தில் காண முடிந்தது . ஆச்சர்யம் என்னவென்றால் ஒவ்வொரு படங்களும் இந்தமுறை நன்றாகவே இருந்தது . அதிலும் நான் துளியும் எதிர்பார்க்காத சில நாடுகளின் படங்கள் பெரும்பாலும் கவனம் ஈர்த்தன . ஏற்கனவே இங்கே சில படங்களை குறித்து எழுதி இருக்கிறேன் . சில வேலைகள் காரணமாக தொடர்ந்து அதனை படங்களையும் அறிமுகம் செய்ய இயலவில்லை . முயற்சிக்கிறேன்
Post a Comment