In the Heart of the Machine (2022, Bulgaria) - Film Intro By Tamil | புறாவுக்கு போரா ??

வடிவேலு புலிகேசியில் சொல்லுவார் , "புறாவுக்கு போரா " ன்னு அப்படிதான் இந்தப்படமும் பார்க்கும் போதும் எனக்கு இருந்தது , ஆனால் நல்ல படம்தான் அது பற்றி பாப்போம் . சரி அதற்கு முன்பு  ஒரு விஷயம்  ..  2023 (95 ஆவது ) ஆம் ஆண்டு ஆஸ்கார் திரைப்பட விழாவிற்கு  சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட பால்கெரியா நாட்டு சார்பில் முதலில் பெண் இயக்குனர் Zornitsa Sophia ன் Mother (2022)  என்ற படம்தான் அறிவிக்கப்பட்டு இருந்தது . அதில் 50 சதவிகிதம் ஆங்கில வசனங்கள் இருக்கும் காரணத்தினால் அதனை தேர்வு குழு ஏற்றுக்கொள்ளாது என நிகாரித்து விட்டார்கள் . இந்த படத்தை அனுப்பும் முன்பு ஒரு 3 படங்களை ஷார்ட் லிஸ்ட் செய்து வைத்து இருந்தார்கள் , அதில் இரண்டாவதாக இருந்த In the Heart of the Machine (2022) திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது . 




ஆங்கில வசனங்கள் அதிகம் கொண்ட படங்களை வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட தேர்வுக்குழு ஏற்காது என ஆஸ்காரில்  பலமுறை சொல்லி இருக்கிறார்கள் , ஆனாலும் சில படங்களில் அதிகமாக ஆங்கில வசனம்  வந்தும் இருக்கிறது அதை எல்லாம் எதன் நோக்கத்தில் அனுமதி செய்தார்கள் என புரிபடவில்லை . ஆங்கில மொழியை முதன்மை அல்லது இரண்டாவதாக கொண்டுள்ள மற்ற நாடுகள் தங்களில் கூட்டு தயாரிப்பில் உருவான வேறு படங்களை அந்த நாட்டு சார்பில் அனுப்பலாம் . எத்தனையோ பெர்சியன் , பிரான்ஸ் , ஸ்பானிஷ் இயக்குனர்களின் படங்கள் வேறு வேறு நாடுகள் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது . 

இந்த Mother  படத்தை பார்த்த வெளிநாட்டு நண்பரிடம் பேசுகையில் ஒரு ஐந்து அல்லது 10 நிமிடங்கள் தான் மொத்தமாகவே ஆங்கில வசனம் இருக்கும் , மற்றபடி நல்ல படமொன்றை ஆஸ்கார் ரிஜெக்ட் செய்துள்ளது என்றார் , இதே மாதிரி 2020 ல் Portugal நாட்டு UK கூட்டு தயாரிப்பு படமான Listen என்ற படத்தை நீக்கினார்கள் . அந்த மொத்த படமே ஒரு மணி நேரம் 15 நிமிசம் தான் ஓடும் . அதில் பெரும்பாலும் ஆங்கில வசனம் என காரணம் காட்டி ஏற்க மறுத்தார்கள் . உண்மையில் மிக சிறந்த படம் அது  . நம்ப ஊரில் அமேசானில் காண கிடைக்கிறது அவசியம் பாருங்கள் . 

இப்படி எத்ததனையோ நல்ல படங்களை ஏற்க மறுத்துள்ளது ஆஸ்கார் தேர்வுக்குழு ,  இன்றைக்கு பலருக்கு ஆஸ்கார் என்றால் ஆஹா ஓஹோ என்றும் , அதெல்லாம் ஒரு விருதா என்றும் பேசுபவர்கள் பார்த்துள்ளேன் .. நண்பர்கள் கூட சில படங்களை பார்த்தல்  ஆஸ்கார் லெவல் க்கு நடிக்கிறான் டா ன்னு சொல்வாங்க , ஆஸ்கார் குட்றா ட்ரம்பெ போன்ற வசனங்கள் பெருமளவுக்கு இங்கே எல்லாருக்கும் ஆஸ்கார் பற்றி தெரியும் . ஆனால் இந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் மேல் மட்டும் எனக்கு தனிக்கவனம் உண்டு . காரணம் அந்ததந்த நாடுகளில் எப்படியும் சிறந்த படங்கள் வெளிவரும் அதனில் ஒன்றை மற்றும் தேர்வு செய்து அனுப்புகிறார்கள் என்றால் அப்படி என்ன இருக்கிறது என்ற கூடுதல் கவனம் பெற செய்கிறது . அதனால் தான் Submission செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்றாலே இதனை பார்க்க துவங்கி விடுகிறேன் . இன்றைய கணக்கில் அனுப்பட்ட 80 ல் 35/80 படங்களை பார்த்துள்ளேன் இன்னும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் . இன்னும் அனுப்புவார்கள் . கடந்த வருடம் 93 மொத்தமாக அனுப்பினார்கள் . 

மற்ற மொழிகளில் உலக தரத்தில் , உலக அரங்கில்  வெளியாகும் படங்களுக்கு இணையாக போட்டி செய்ய இந்தியாவும் கூட்டத்தோடு கூட்டமாக வருடா வருடம் போராடிக்கொண்டு இருக்கிறது . கடைசியாக 2001 ல் நாமினேஷன் ஆனது அதற்கு பிறகு 20 வருடங்கள் முழுதாய் முடித்துள்ளோம் ஏன் ஒரு சிறந்த படம் கூடவா இல்லை என்றால் இல்லைதான் என்பது பதிலாக இருக்கிறது . அதே நேரத்தில் மற்ற திரைப்பட விழாக்களில் சில இந்திய திரைப்படங்கள் பங்குபெற்று பெருமை பெற செய்கிறார்கள் , மகிழ்ச்சியே பாப்போம் . ஆனால் சாவதற்குள் ஒரு இந்திய திரைப்படமாவது . ஆஸ்கார் , கான்ஸ் , வெனிஸ் ,பெர்லின் இன்ன பிற புகழ்பெற்ற திரைப்படவிழாக்களில் வெல்வதை பார்த்தாக வேண்டும் என நினைக்கிறன் . 



My View திரைப்பட பார்வை :




சரி சிறைக்கைதிகள் பெரும்பாலும் கொடூரமான கொலை குற்றங்கள் , மற்ற குற்றங்களை செய்து தான் சிறைக்குள்ளே  வந்து இருப்பார்கள் , உண்மையிலே குற்றம் செய்த குற்றவாளிகளும் உண்டு , குற்றம் செய்யாதவர்களும் உண்டு . அவர்களிடம் யாரும் அன்பை பெற முயற்சிக்க மாட்டார்கள் காரணம் அவர்கள்  ஒரு சிறை கைதி . கொடூரமானவன் என்பதே .. ஆனால் அவர்களுக்கும் ஒரு மனிதம் இருக்க தான் செய்கிறது . ஆனால் அது எங்கே யாருக்கு எதன் மேலே என்பதெல்லாம் பரபரப்பாக்குகிறது இந்த படத்தில் . 

அப்படி பல்கெரியா நாட்டில் இருக்கும் சிறை கைதிகள் ஒரு ஐந்து பேரை ஒரு பழைய மெக்கானிக் செட்டில் சிறிய வேலைக்காக அழைத்து செல்கிறார்கள் . அங்கே தலைமை அதிகாரி ஒருவரும் , புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் ஒருவரும் வந்துள்ளார்கள் . அங்கே ஒரு மெஷின் பழுதடைந்து இருப்பதை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் . அதற்குள்ளே ஒரு புறா சிக்கிக்கொண்டு இருக்கிறது  . அதனை எப்படியாவது உயிரோடு வெளியே எடுத்து பறக்க விட வேண்டும் என ஒருவன் விரும்புகிறான் . ஆனால் இது பெரிய பிரச்னையை அங்கே கிளம்பிவிட அடுத்தடுத்து நடக்கும் பரபரப்பான சம்பவத்தில் என்ன ஆனது என்பதே முடிவு . ஜெயில் , சிறைக்கைதிகள் , அது தொடர்பான கதைகள் என்றால் உங்களுக்கு பிடிக்கும் என்றால் தாராளமாக பார்க்கலாம்  


முடிவாக :

உண்மையில் இது சுவாரசியமான படம்தான் . ஆனால் உலக சிறந்த படங்களோடு போட்டி போடுகையில் என்ன ஆகும் என்பது தெரியாது . த்ரில்லர் பிரியர்கள்  அவசியம் ஒருமுறை பாருங்கள் . ஒளிப்பதிவும் திரைப்படத்தின் கலர் டோன் பின்ணணி இசை , சுவாரசியமாக இருந்தது  எங்கே கிடைக்கும் போன்ற தகவல்களை இறுதியில் உள்ளது .

இயக்குனரைப் பற்றி : 

இயக்குனருக்கு இது ஐந்தாவது திரைப்படம் . இதற்கு முன்பு சில குறும்படங்களையும் டிவி சீரீஸ் களையும் இயக்கி உள்ளார் . 

திரைப்பட தகவல்கள் Details : 


விருதுகள் Festival & Awards : 
San Diego International Film Festival 2021 வில் பங்குகொண்டது . தற்போது 95 ஆவது ஆஸ்காருக்கு வெளிநாட்டு படங்கல் பிரிவில் போட்டியிடுகிறது . 
ட்ரைலர் Trailer : 


எங்கே காணலாம் , Where To Watch : 

இப்போதைக்கு இந்த படத்தை அமேசான் freeview  தளத்தில் இலவசமாகவே காணலாம் . ஆனால் நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் . 

Post a Comment

Previous Post Next Post