A Piece of Sky (2022, Switzerland) - Film Intro By Tamil | நான் இறக்க விரும்பவில்லை

அன்பிற்குரியவர்களின் இறப்பு  , மற்றும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களின்  இழப்பை எப்போதுமே ஏற்றுக்கொள்ளவே முடியாது , இருந்தும் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் இருக்கும் அந்த குறிகிய காலம் தான் வாழும் வாழ்க்கை  , தானும் மகிழ்வித்து மற்றவர்களையும் மகிழ்விக்க வேண்டும்  என்பார்கள் . சொல்லப்போனால் நம் எல்லோருக்கும் என்றாவது ஒரு நாள் இறப்பின் மீதான கேள்விகளும் கூடுதல் பயமும் அதன் மீதான எண்ணங்களும்  எழும்  அதனை தொடர்ந்து மண்டைக்குள் போட்டுகொண்டாள் அவ்வளவுதான் . 




ரஜினிகாந்த்  சிவாஜியில் ஒரு வசனம்  சொல்லி இருப்பார்  " சாகுற நாள் தெரிஞ்சு போச்சுனா வாழ்ற நாள் நரகம் ஆயிரும் சந்தோசம் தாங்க முக்கியம் " ன்னு அதுதான் பெரும்பாலும் நாம் சொல்லிவிட்டு கடப்பது . போன வருடம் ஆஸ்காருக்கு அனுப்ப இந்தியாவில் இருந்து 15 திரைப்படங்களை ஷார்ட் லிஸ்ட் செய்து இருந்தார்கள் . அதில் கோதாவரி என்ற ஒரு மராத்தி மொழிப்படம் இடம்பெற்று இருந்தது , அந்தப்படத்தை சமீபத்தில் பார்த்தேன்  . அதில் எல்லோர் மீதும் வெறுப்பையும் கோபத்தையும் செலுத்தும் ஒருவன் தன்  குடும்ப உறவுகள் மீதான எண்ணம்  , கோதாவரி நதியின் மீதான தலைமுறை வரலாறு  , புனிதம் , மக்களின்  அன்பு என அனைத்தையும் புரிந்து இறுதியில் இறந்து போவார்  . அதில் முக்கியமான விஷயம் நாயகன் மூளை கட்டி மற்றும்  நரம்பியல் சார்ந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருப்பார் , அதாவது இன்னும் குறுகிய காலம் தான் வாழ்க்கை என தெரிந்த பின்னர் அவர் சிலவற்றை மாற்றிக்கொள்வார் . அதுதான் திரைப்படம் . வாழவேண்டும் என நினைக்கும் பொது அவருடைய நாள்கள் முடிந்துவிட்டன . 

இதனை  ஏன் இப்பொது சொல்கிறேன் என்றால் இங்கேயும் இந்த ஸ்விஸ் படத்தில்  நாயகன்  மூளை கட்டியால் பாதிக்கப்பட்டு இருப்பார்  மற்றும் மேலும் சில விஷயத்தை பேசி இருக்கும் . 95 ஆவது ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட சுவிட்சர்லாந்து சார்பாக தேர்வு செய்யப்பட்ட திரைப்படம் . அதனை பற்றி இந்த பதிவு . 

 

My View திரைப்பட பார்வை :

மார்கோ ஸ்விஸ் ல் அகன்ற மலைப்பரப்பில் வசிக்கும் ஒருவர்  . அங்கே சிறு சிறு விவசாயம் , மற்றும் மாட்டு பண்ணை வைத்து நடத்துகிறார் . அங்கே ஒரு சிறிய பார் ஒன்றை வைத்து நடத்துபவர் அனா  . இருவருக்கும் காதல் . அனாவிற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது என நினைக்கிறன் . மார்கோ வும் அனாவும் சேர்ந்து வாழ்கிறார்கள்  அந்த குழந்தையோடு . அவர்களுடன் தீடீர்  பிரிவு . அடிக்கடி மார்கோ சொல்வது . " இது கனவனாக இருக்க வேண்டும் " , " நான் இறப்பதை விரும்பவில்லை " , "உன்னோடு இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது " என சொல்பவர்  . ஒரு விபத்திற்கு பிறகு பரிசோதனையில்  . அவருக்கு திடீர்ன்னு   மூளையில் பிரச்சனை இருப்பது தெரியவருகிறது . இடது பக்கம் கூடிய விரைவில் செயலிழப்பு பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு அதிகம் .  அதற்கு பிறகு அவரின் நடவடிக்கையில் சிலவற்றில் எதிர்பார்க்க முடியாத சில மாற்றங்கள் , அது மூலம் பிரிந்து செல்லும் அனா . அதற்கு பிறகு நடக்கும் காட்சிகள் தான் இந்த திரைப்படம் . 

அன்பிற்குரியவர்களை விட்டு பிரிந்து செல்லும் பொது எந்த அளவிற்கு இருவரும் பாதிக்கப்படுவோம் என அனுபவித்தவர்களுக்கு தெரியும் . அதுவும் ஒரு மரணத்தை போன்றதே . எதை வேண்டுமானாலும் நாம் மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளலாம் . ஆனால் இழப்பையும் வலியும் புரிந்துகொள்வது சற்று கடினமானது . இந்த உலகில் எதற்கும் தீர்வுண்டு என ஒரு கூற்றும் , தீர்வுக்காக  வேதனைப்படுது மட்டுமே தீர்வல்ல என்ற கூற்றும் உண்டு . 

பெரும்பாலான உலக திரைப்படங்களில் கையாளப்படும் ஒரு யுக்தி , பார்வையாளர் போக்கிக்கிறே சில விஷயங்கள் விடப்பட்டு இருக்கும் , அதனை பார்வையாளர் தன போக்கிற்கே புரிந்துகொள்ளட்டும் என விடப்படுவது தான் பெரும்பாலான காட்சிகளில் நமக்கு கவனிப்பில் வைத்திருப்பார் இயக்குனர்  .  இந்த படத்திலும் அப்படி நிறைய காட்சிகள் உண்டு . அதனை நாம் எந்த விதத்தில் எடுத்துக்கொள்கிறோம் என்பது நம் எண்ணத்திற்க்கே . 

முடிவாக : 

பச்சை நிற போர்த்திய அழகிய மலை பகுதி , பிறகு பனி சூழ்ந்த மலைகள் , மேலிருந்து கீழ் அனுப்பப்படும் புற்கள்  , பாறைகள் விழுவதை அகற்றுவது , மாடுகள் .  கூட்டமாக தாலாட்டு முதல் இறப்பிற்கான வழியனுப்புதல் வரை பின்னே ஒலிக்கும் பாடல்கள் .  என பல அழகான காட்சிகளை ஆங்காங்கே இணைத்திருக்கிறார் இயக்குனர் .  நிச்சயம் இது ஒரு நல்ல திரைப்படம் தான் ஆனால் ஒரு சிலரை மனதளவில் சற்று பாதிக்க பட வைக்கலாம் . 

இயக்குனரைப் பற்றி :

இயக்குனருக்கு இது இரண்டாவது திரைப்படம்  . இதற்கு முன்பு சில குறும்படங்களை இயக்கி உள்ளார் , 2016 ஆம் ஆண்டு locarno திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட Marija திரைப்படம் தான் இவரின் முதல் திரைப்படம் . வாய்ப்புள்ளவர்கள் அவசியம் அதையும் பார்க்கவும் . 

திரைப்பட தகவல்கள் Details :

A Piece of Sky 2022 ‘Drii Winter’ Directed by Michael Koch



விருதுகள் Festival & Awards :

2022 ஆம் ஆண்டு பெர்லின் திரைப்படவிழாவில் ஸ்பெஷல் மென்ஷன் வெளிநாட்டு படங்கள் பிரிவிலும் , இதர Locarno , Karlovy , Hong Kong, Taipei , New Horizons , Vancover , Viennale என பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்குபெற்று பாராட்டுகளை பெற்றுள்ளது . ஆஸ்காரில் சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிடுகிறது , மற்ற படங்களின் தரத்தை பொறுத்து ஷார்ட் லிஸ்ட் ல் இடம்பெறுமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும் .   

ட்ரைலர் Trailer :




எங்கே காணலாம் , Where To Watch : 

இந்த திரைப்படம் தற்போது எந்த ஒரு ஸ்ட்ரீமிங் தளத்திலும் இல்லை , வரும் நாள்களில் திரைப்பட விழாக்களில் நீங்கள் காணலாம் , நிச்சயம் அகன்ற திரையில் திரைப்படவிழாவில் பார்க்க கூடிய திரைப்படம் தான் . 

இதுவரை இவர்கள் ஆஸ்காருக்கு அனுப்பிய படங்கள் , அதில் ஷார்லிஸ்ட் , நாமினேஷன் , வெற்றி , நிராகரிப்பு போன்ற தகவல்கள் , இந்தமுறை அனுப்ப அவர்கள் நாட்டில் இருந்து தேர்வு செய்த படங்கள் என மற்ற தகவல்களை ஏற்கனவே நமது தளத்தில் விரிவாக எழுதியுள்ளேன் .  அதையும் அவசியம் பார்க்கவும் . A Piece of Sky (2022, Switzerland) - 95th submissions for the Academy Award for Best International Feature Film

Post a Comment

Previous Post Next Post