The Red Suitcase (2022, Iran) - Short Film Intro By Tamil | ஆஸ்கார் ஷார்ட்லிஸ்ட் குறும்படம் 1

95  ஆவது ஆஸ்காருக்கு சிறந்த குறும்படங்கள் பிரிவில் போட்டியிட பல்வேறு குறும்படங்கள் கலந்துகொண்டன . அதில்  சமீபத்தில் 15 Live Action Shorts ஐ Shortlist செய்திருந்தார்கள் . அந்த பதினைந்தில் நான் பார்த்த முதல் குறும்படம் தான்  இது சிகப்பு நிற சூட்கேஸ்

தான் விரும்பாத தனக்கு விரும்பப்பமில்லாத ஒரு செயலை மற்றவர்களின் உந்துதனிலால் செய்யும் பொழுது ஏற்படும் மன அழுத்தமும் பதட்டமும் கடுமையான வேதனைக்குரியது . இந்த குறும்படத்தில் நாயகியின் கதாபாத்திரம் அப்படி ஒன்றை தான் எதிர்கொள்ள செய்திருக்கிறார்கள் . 




My View திரைப்பட பார்வை : 

பதினாறு வயதுள்ள இளம்பெண் ஈரானிலிருந்து  லக்சம்பர்க்விமான நிலையத்திற்கு  தனியாக வந்திறங்குகிறாள் அங்கே தனது தந்தைக்கு தான்  வந்து சேர்ந்த தகவலை தெரிவிதித்தபின்பு ஒரு வித பயத்துடனே இருக்கிறார் . விமான நிலையத்தில் ஒரு பதட்ட நிலையில் அந்த சிகப்பு நிற சூட்கேஸை இறுக்கி பிடித்தபடியே இருக்கிறாள் . வெளியே செல்லும் கதவை மீண்டும் மீண்டும்  பார்க்கிறார் ஆனால் செல்லவில்லை . இந்த நடவடிக்கைகளை கண்டு   அதிகாரிகள் என்னவென்றே விசாரிக்கிறார்கள் . தந்தையிடமிருந்து மீண்டுமொரு மெசேஜ் வருகிறது நீ எங்கே இருக்கிற . உன்னுடைய வருங்கால கணவன் வெளியே இருக்கிறான் உனக்காக காத்துகொண்டு இருக்கிறான் என சொல்கிறாள் .  

அங்கே வெளியே ஒரு 45 - 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பூங்கொத்தோடு முறைத்துக்கொண்டு இருக்கிறார் .  இவரின் கண்ணில் படமால் இங்கிருந்து எப்படியாவது சென்று விட வேண்டும் என முயற்சி செய்கிறாள் அது ஏன் ? அங்கிருந்து சென்றாளா ? அந்த சூர்க்கேஸ் ல் என்ன இருந்தது ? என்ன சொல்ல வருகிறார்கள்   என்பதுதான் குறும்படம் . 

இந்த 17 நிமிட குறும்படத்தில் Nawelle Evad நடித்த  நாயகியின் நடிப்பும் உணர்ச்சிகளும் சிறப்பு . பெரும்பாலான ஈரானியப் படங்களில் 


இறுதியாக மெல்லிய குரலில் ஒலிக்கும் பாடலொன்று மனதை கவர்ந்தது . அதனை உடனே Shazam மில் தேடி கண்டுபிடித்து இரண்டு முறைக்கு மேல்  கேட்டுவிட்டேன் நல்ல குறும்படம் தான்  வாய்ப்புள்ளோர் கிடைக்கும் பொழுது பார்த்தல் மட்டுமே நலம்.
 
இயக்குனரைப் பற்றி :  இயக்குனருக்கு இது மூன்றாவது குறும்படம் . இதை பார்த்த பிறகு மற்ற இரண்டும் தேடிப்பிடித்து பார்க்க உள்ளேன் .

திரைப்பட தகவல்கள் Details : 

** The Red Suitcase 2022 ‘La valise rouge’ Directed by Cyrus Neshvad **
பெர்ஷியன், பிரெஞ்சு, ஆங்கிலம் என 3  மொழி பேச கூடிய இந்தக்குறும்படம் 17 நிமிடங்கள் ஓடக்கூடியது . ட்ராமா வகையை சேர்ந்தது .  ஆஸ்கார் லைவ் ஆக்சன் குறும்படங்கள் பிரிவில் ஷார்ட்லிஸ்ட் ஆகி இருக்கிறது பொறுத்திருந்து பாப்போம் நாமினேஷன் ஆகிறதா என்று . 



ட்ரைலர் Trailer :

THE RED SUITCASE (2022) teaser from cyrus neshvad on Vimeo.

 



எங்கே காணலாம் , Where To Watch : இப்போதைக்கு எந்த OTT யிலும் இல்லை Private Screening மட்டுமே . 

Post a Comment

Previous Post Next Post