Ivalu (2022) - Short Film Intro By Tamil | மூத்த சகோதரியை தேடும் தங்கை

கிரீன்லாந்து ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் சிறுமி திடீரென ஒருநாள் தனது மூத்த சகோதரியை காணவில்லை என தூக்கத்திலிருந்து கண்விழித்ததும்  தேட ஆரம்பிக்கிறாள் .  தன்னுடைய பாட்டியிடம் கேட்டும் , தந்தையிடம் கேட்டும் யாருமே அவளை தேட முன்வரவில்லை , ஒரு காகத்தின் பாதையை நோக்கி தன் சகோதரியை தேட ஆரம்பிக்கிறாள் அந்த சிறுமி ,  அவளுக்கு என்ன ஆச்சு . எங்கே சென்றால் ??  என்பதுதான் இந்த 16 நிமிட குறும்படம் . 




அழகிய காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருப்பது மிகச்சிறப்பு  , டென்மார்க் நாட்டை சேர்ந்த இயக்குனர் Anders Walter
 ன்  குறும்படமிது . இதற்கு முன்பு சில படங்களையும் குறும்படங்களை இயக்கி உள்ளார் . . 95 ஆவது ஆஸ்காருக்கு சிறந்த Live Action Short குறும்பட பிரிவில் போட்டியிட அனுப்பிவைக்கப்பட்டு தற்போது 15 ஷர்ட்டலிஸ்ட் ல் ஒன்றாக வந்துள்ளது. சில Wide Angle Shot அற்புதமாக இருந்தது .  கடந்தமுறை உலக வரைபடத்தில் உள்ள குறிப்பிட்ட சில நாடுகள் திரைப்படங்கள் நான் பார்த்தவற்றில் என்னை கவர்ந்த சிலவற்றை தேர்வு செய்து   ஒவ்வொன்றாக மொத்தம் 126 படங்களை ஒரு ஆல்பத்தில் இணைத்திருந்தேன் . அப்போது கிரீன்லாந்து நாட்டிலிருந்தும் ஒரு படத்தை இணைந்திருந்தேன் . இப்படி ஒரு நாடு இருக்கிறதா ? அங்கே படமெல்லாம் எடுக்கிறார்களோ என நண்பர் ஒருவரின் கமண்ட் பார்த்தேன் . அங்கே கிட்ட தட்ட 50000 பேர் வசிக்கிறார்கள் தொடர்ந்து படங்கள் வருவதில்லை ஆனால் வந்தால் நன்றாக இருக்கும் , ஐஸ்லாந்து பச்சை புல் போற்றிய தீவு இங்கே வெள்ளை ஆனால் காட்சிகளில் இயற்கையின் அழகை ரசிக்க முடியும் .  . மொத்தமே மூன்று படங்கள் தான் அங்கு எடுத்துள்ளார்கள் என நினைக்கிறன் . ஒரு சில குறும்படங்கள் உள்ளன . 

ஐஸ்லாந்து நாட்டுக்கு இடதுபுறமாக முற்றிலும் வெள்ளை நிறத்தில் காட்சி இருக்கும் Map ல் பார்த்தாள் தெரியும் .. .   வாய்ப்புள்ளோர் கிடைத்தால் மட்டுமே தேடி இதனை பார்க்கவும் , நன்றி 

Post a Comment

Previous Post Next Post