Karparaa (2023,India) - Film Intro By Tamil | IFFR - கற்பரா முதியவர்களின் கதை

IFFR திரைப்படவிழாவில் டைகர் விருதை வென்ற கூழாங்கல் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த விக்னேஷ் குமுளை யின் முதல் திரைப்படம் IFFR 2023  ல் பிரீமியர் ஆகி இருக்கிறது .  இந்த திரைப்படத்தை தயாரித்து இயக்கி ஒளிப்பதிவும் செய்துள்ளார்  விக்னேஷ் குமுளை .  




கிராமப்புற பகுதியில் ஏன் சில நகரங்களில் கூட இதுபோன்ற சில சம்பவங்களை  கண்கூட பார்த்திருப்போம் , வயதான காலத்தில் தனித்துவிடப்படம் பெரியோர்கள் , முதியோர்கள் , இன்றைய தலைமுறயினர்  வளர்ப்பு பற்றியும் விலங்குகளில் மீது செலுத்தக்கூடிய அன்பிற்கும் , முதியோர்களின் மீது செலுத்துவதற்கும் கடும் வித்தியாசத்தை பார்த்திருப்பீர்கள் . அப்படி இரண்டு வெவ்வேறு குடும்பங்களில் வாழ்ந்து வரும் தாத்தா பாட்டியின் அன்றாட நாளில் நடப்பவையை 70 நிமிடத்தில் தத்ரூபமாக காட்சிப்படுத்தியுள்ளார் .   சினிமா பார்ப்பது போன்ற உணர்வில்லாமல் நேரடியாக ஒரு கிராமத்திற்கே சென்று நடப்பதை பார்த்துக்கொண்டிருப்பது போல எளிய எதார்த்தமாக இருந்தது சில காட்சிகள்   . அதிக வசனங்கள் இல்லை காட்சிகள் மூலம் என்ன நடக்கின்றனது என்பதை புரிந்துகொள்வோம் . 

புற்றிலிருந்து ஈசல் , கூட்டிலிருந்து குருவி , கிராமம் , மக்களின் பேச்சு என நடப்பவை அப்டியே காட்சிகளாக்கி உள்ளார் , கூழாங்கல் சில காட்சிகள் பிடித்திருந்தது . அதே போல இங்கும் . ஒன்றிரண்டு காட்சிகள் ரசிக்கும் படி இருந்தது . வாய்ப்பு இருப்பின்  வரும் நாள்களில் இந்த படம் கிடைத்தால் முயற்சி செய்து பாருங்கள் . 

நண்பரோடு சமீபத்தில் புத்தக கண்காட்சி சென்றிருந்தேன் , அப்போது அவரிடம் சில புத்தகங்களை பரிந்துரைக்க கேட்டேன் , அவரோ நம்ப ஊர் கதைகளை சொல்லி சில புத்தகங்களை  வாங்கு என்றார், எனக்கு உலக மக்கள் கதை , அரசியல் , போர் , வரலாறு , சினிமா இப்படி சொல்லுங்கள் என்றேன் முதலில் உன்னை சுற்றியுள்ள கதைகளை தெரிந்துகொண்டால் தான் உன்னால் உலக மக்களை புரிந்துகொள்ள முடியும் என்றார்  உண்மைதான் . 

Post a Comment

Previous Post Next Post