Rock, Paper, Scissors (2024) – Franz Böhm | 98th Oscar Shortlisted Short | Movies Museum


போர் பற்றிய படங்கள் , டாக்குமென்டரி, ஷார்ட் பிலிம் என எதாவது ஒன்று  ஆஸ்கார் திரைப்பட ஷார்ட்லிஸ்ட் பட்டியலில் ஒவ்வொரு வருடமும்  பார்த்துவிட முடியும். சிறிது நாளுக்கு அந்த குறும்படம் நம்மில் ஒரு  தாக்கத்தை  ஏற்படுத்திக்கொண்டு இருக்கும்.

நாம இதுபோல பல படங்களில் பார்த்திருக்கலாம். ஆனா இந்த படம், மாறாக போரைக் காட்சியாகக் காட்டவில்லை. போர் ஒரு மனிதனுக்குள் எப்படி நுழைகிறது என்பதை மட்டுமே காட்டுகிறது. சிறுவன் தனது தம்பியுடன் Rock, Paper, Scissors விளையாடிக்கொண்டு இருக்கிறான். அவர்கள் ஒரு Bunker குள்ளே இருக்கிறார்கள். அவர்களை நெருங்கும் பிரச்னை ,அடுத்த நிமிடம் என்ன ஆகும்?






ஒரு bunker… ஒரு மருத்துவமனை…  20 நிமிட குறும்படம்.

Frontline-ல இருக்குற அந்த makeshift hospital  உள்ளே குழந்தைகள் பெண்கள் போர் வீரர் என Ivan தந்தை பரபரப்பாக முதலுதவி செய்துகொண்டிருக்க. அங்கே ரஷ்ய படைகள்  வந்துகொண்டு இருக்கிறது என்ற தகவல் கிடைக்கிறது. எங்காவது தப்பித்து விடுங்கள் , இங்கிருந்து யாரும் வந்து காப்பாற்ற முடியாது என வரும் ஒரு அழைப்பு , அங்குள்ளவர்களுக்கு  அது தான் கடைசி நம்பிக்கை. ஒரே ஒரு துப்பாக்கி அதை சரியாக பயன்படுத்த தெரியுமா? என அடிபட்டு கிடக்கும் உக்ரைன் போர் வீரர் கேற்க உள்ளே இருக்கும் அனைவரையும் காப்பாற்ற  வெளியில் செல்கிறான் இவான்.  ரெண்டு பேர் மட்டுமே அங்கே வருகிறார்கள் என நினைத்து வந்தால் அங்கே 8 பேருக்கு மேல் உள்ளனர். அங்கே என்ன ஆனது bunker அங்குள்ளவர்கள் என்ன ஆனார்கள்? இதுவே இந்த குறும்படம் உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்டு எடுக்கப்பட்டது. 
யாரையும் அழ வைக்க முயற்சி செய்யவில்லை. ஆனா மௌனமா உடைக்கிறது.

 BAFTA 2025 – Best British Short Film Sony Future Filmmaker Award CILECT Prize Oscar Live Action Short shortlist நிறைய விருதுகளை வாங்கியுள்ளது இன்னும் கவனம் பெரும். . நான் பார்த்த Oscar shortlisted short films-ல, மூன்றாவது-  20 நிமிடம். ஒரு bunker. ஒரு மகன். ஒரு முடிவு. அவ்வளவுதான். ஆனா அதன் தாக்கம் நெடுநேரம் மனசுக்குள்ளேயே நிற்கும்.

தற்போது Youtube ல் காண கிடைக்கிறது. தேடினால் கிடைக்கும்.இல்லையென்றால் கீழே இருக்கு.

 

Post a Comment

Previous Post Next Post