75-ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் (Berlinale) Generation Kplus பிரிவில் தேர்வாகி, உலக பார்வையாளர்களின் கவனத்தை இந்த படம் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து, 2025 ஓடென்சே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த டேனிஷ் கற்பனைப்படம் என்ற விருதையும் வென்றது. இன்றைக்கு, இந்த படம் ஆஸ்கர் தகுதியைப் பெற்ற குறும்படமாக மாறியுள்ளது. அங்கு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை,
The Thief இணையத்தேடலிருந்து கிடைத்த ஒரு தகவல் , கிழக்கு கிரீன்லாந்தில் இருந்து இதுவரை எந்த குறும்படமும் உலக சினிமா விழாக்களில் பங்குபெற்றதில்லை அந்த வெற்றிடத்தை நிரப்பிய முதல் படமாக (தி தீஃப்) வந்துள்ளது.

கிழக்கு கிரீன்லாந்தில் உள்ள டாசிலாக் (Tasiilaq) என்ற தொலைவான, சிறிய ஊரில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கும் அனைவரும் தொழில்முறை நடிகர்கள் அல்ல. அந்த ஊரைச் சேர்ந்தவர்களே.
காலி ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன். காணாமல் போன தனது நாயின் தேடல் பிறகு அவன் எதிர்கொள்ளும் சம்பவம் தான் இந்த குறும்படம்.
தனது உயிருக்கு உயிரான நாய் காணாமல் போய்விட்டது என்பதை அறிந்த தருணத்தில் அதை தேட துவங்குகிறான். அந்த நாய் அவனுக்கு செல்லப்பிராணி மட்டுமல்ல. நண்பன், நம்பிக்கை, தனிமையைப் போக்கும் உறவு எல்லாமே , தாயில்லாமல் தந்தையுடன் வளரும் இவனுக்கு நாய் தான் விருப்பம். ஒரு நாள் அது காணவில்லை எனவும் பதட்டமடைகிறான் , அதற்கு நேரத்திற்கு உணவு தர வேண்டும் என அலைகிறான்அழைத்தும் வரவில்லை என அதனை தேட ஆரம்பிக்கிறான். ஒருவேளை அதை வேட்டைக்காரன் யாரோ சுட்டிருக்கலாம் அல்லது திருடப்பப்பட்டு இருக்கலாம் என்ற அவனது தேடல். மற்றும் சில சந்தேகத்துடன், காலி தனது ஒரே நண்பன் பார்டிலா உடன் ஊர்முழுவதும் தேடி அலைகிறான் இந்த தேடலின் போது, அவனை இழிவுபடுத்தும் இளைஞர்கள் சமுதாயத்தில் “வேறுபட்டவன்” என்ற முத்திரை அவன் மீது குத்துகிறார்கள்.
தொடர் கேலி கிண்டல்களுக்கு உள்ளாகும் அவன், முடிவில் தனது நாயை கண்டுபிடித்தானா? இல்லையா? அதன் பிறகு என்ன மாதிரி பிரச்னையை எதிர் கொண்டான் என்பதே இந்த குறும்படம்.
முடிவில் தான் தெரியும் யார் உண்மையான திருடன்.
இந்த படத்தின் இயக்குநர் Christoffer Rizvanovic Stenbakken கிழக்கு கிரீன்லாந்தில் பிறந்து வளர்ந்தவர். இயல்பான காட்சிப்பதிவு மனிதர்களை மையமாக்கும் அணுகுமுறை உணர்ச்சிகளை மிகைப்படுத்தாத நடை அங்குள்ள பகுதிகளை கண்முன் காட்டி இருந்தார்.
வாய்ப்புள்ளவர்கள் வரும் நாட்களில் கிடைத்தால் அவசியம் ஒருமுறை பார்க்கவும் நன்றி

Post a Comment